-
2nd April 2012, 07:01 PM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
'புதிய பறவை' கோபாலின் ஸ்டைல் ஸ்டில் அருமை.
"நடிப்பும் ஒரு தொண்டுதான்" பொம்மைக் கட்டுரை நம் சாதனைச் சக்கரவர்த்தியின் அடக்கத்தையும், பெருந்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. நடிகர் திலகத்தின் பின்னாளைய பேட்டிகளில் அரசியல் சூதுகளில் அவர் சிக்குண்டு தவித்த விதத்தை அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. "நமக்குத் தெரிஞ்சதை இதுவரை நடிச்சோம். அது நடிப்புன்னா நடிப்பு. சரியில்லைன்னா சரியில்லைதான்"என்ற நடிகர் திலகத்தின் வரிகள் அந்த சாகாவரம் பெற்ற கலைஞரின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது.
'சிவாஜி சில நினைவலைகள்' கட்டுரையில் நேரம் தவறாமையை எந்த அளவுக்கு கடைப் பிடித்தார் நடிகர் திலகம் என்பது தெளிவாகிறது. நிருபருக்கு அவர் செய்து கொடுத்த உதவி அவரின் கர்ணத்தனத்தை காட்டுகிறது.
அற்புதமான இரு கட்டுரைகளை அருமையாக பதிவு செய்ததற்கு நன்றிகள் பல.
அன்புடன்,
வாசுதேவன்
-
2nd April 2012 07:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks