-
17th June 2012, 12:08 AM
#11
பத்து. நடிகர் திலகத்தைப் பற்றிய திரிக்கு பாகம் எண் பத்து. என் நினைவு ஆறு வருடங்களுக்கு முன் உள்ள காலத்திற்கு ஓடுகிறது. அன்று நான் முதல் முதலில் பதிவிட்டது இந்த திரியின் முதல் பாகம் பக்கம் எண் 60-ல். இன்று அந்த திரி ஆறு வருடங்களில் ஆயிரக்கணக்கான பக்கங்களை கடந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கொண்டுள்ள ஒரு திரியாக, இணையத்தை பொறுத்தவரை நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு அதிகாரப்பூர்வமான ஆவணப்பூர்வமான ஒரு திரியாக வளர்ந்து, நான் பல முறை குறிப்பிட்டுள்ளது போல the thread of the Hub என்று சொல்லக்கூடிய வகையில் விளங்குகிறது. இதற்கு காரணமான அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் திரியின் வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த பத்தாம் பகுதியை மிக மிக பொருத்தமாக துவக்கி வைத்திருக்கும் வாசுதேவன் அவர்களைப் பற்றி நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ரசிகர் என்றால் அப்படி ஒரு ரசிகர். அந்த ரசிப்பு தன்மைக்காக தான் ரசித்ததை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த காட்சிகளை இங்கே தரவேற்றுவதில் அவரின் உழைப்பு அசாத்தியமானது. வாழ்த்துக்கள் வாசு சார். தொடர்ந்து கலக்குங்கள்.
மற்றொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். நீங்கள் தரவேற்றியுள்ள தங்கை சண்டைக் காட்சி. அதிலும் நீங்கள் சொன்னது போல தன்னை அடித்த ரவுடியின் முகத்திற்கு நேரே இரண்டு கைகளையும் நீட்டி கை தட்டி விட்டு அவர் கொடுக்கும் பன்ச்கள் இருக்கிறதே, பல முறை தியேட்டரிலும் டிவிடியிலும் நான் ரசித்துப் பார்த்து, நமது இந்த திரியில் தங்கை படத்தைப் பற்றிய விமர்சன பதிவிடும் போதும் ரசித்து எழுதிய அந்த காட்சியை தரவேற்றியதற்கு நன்றிகள் பல.
அது போல் நீங்கள் சாந்தியில் கண்ட பதாகையைப் பற்றியும் சொல்ல வேண்டும். ராகவேந்தர் சாரால் உருவாக்கப்பட்டு சாந்தியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பதாகையில் நமது திரியின் ஆரம்ப கால சாரதியும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகருமான ஜோ அவர்களின் பின்னூட்டமும் இடம் பெற்றிருக்கிறது.
ஜோ,
சாந்தி வளாகத்தில் உங்கள் பெயர் இடம் பெற்று விட்டது. நடிகர் திலகம் வெள்ளை பாண்ட்டும் நீளமும் சிவப்பும் கலந்த டி- ஷர்ட்டும் அணிது நிற்கும் அந்தப் புகைப்படத்திற்கு அருகில் " சிவாஜி அய்யா புகழ் வாழ்க" என்று நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டம் பதியப்பட்டிருகிறது. வாழ்த்துக்கள்.
நமது திரியின் பங்களிப்பாளரும் நடிகர் திலகத்தின் மூத்த ரசிகருமான சுப்ரமணியன் ராமஜெயம் அவர்களின் பின்னூட்டமும் அந்த பதாகையில் இடம் பெற்றிருக்கிறது.
கடந்த ஒரு மாதமாக என் பதிவுகள் இடம் பெறாததால் அதை பற்றி விசாரித்து என்னை திரிக்கு அழைத்த கார்த்திக் மற்றும் கோபால் அவர்களுக்கு நன்றி.
எனக்கு தனிப்பட்ட அன்பு வேண்டுகோள் விடுத்த சகோதரர் செந்தில் [ஹரிஷ்] அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். கணினியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு மற்றும் வேலைப்பளு காரணமாக இங்கே வர முடியவில்லை.
திரியின் புதிய வரவுகளான சிவாஜி செந்தில் மற்றும் [பாரிஸ்டர்] சுப்ரமணியனுக்கு நல்வரவு.
நடிகர் திலகத்தின் சாதனை செப்பேடுகளின் ஆவண காப்பாளரும் இந்த திரியின் நெடுந்தூண்களில் ஒருவருமான அருமை சகோதரர் சுவாமிக்கு நன்றிக்கு எல்லாம் அப்பாற்பட்ட நன்றி.
அன்புடன்
-
17th June 2012 12:08 AM
# ADS
Circuit advertisement
Bookmarks