-
16th June 2012, 12:29 PM
#61
Senior Member
Diamond Hubber
அன்புள்ளம் கொண்ட திரு.Anm அவர்களே!
தங்கள் பாசப் பதிவுக்கு என்னுடைய இமாலய நன்றிகள். கர்ணன் நூறாவது நாள் வெற்றியை அனைவரும் சுவைக்கத் தயாராவோம்.
டியர் ஹரிஷ் சார்,
நான்தான் தங்களுக்கெல்லாம் நன்றி கூற வேண்டும். நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்தை துவக்கி வைக்கும் அரியதொரு வாய்ப்பை எனக்கு அளித்த தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். தங்கள் அன்பிற்கு என் மனமுவந்த நன்றி!
டியர் ராகுல்,
பாராட்டுக்கள். தலைவர் படங்களைப் போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற தங்களின் அக்கறை மிக நியாயமானது. தங்கள் கருத்தே நம் எல்லோருடைய கருத்துமாகும். தங்கள் உயரிய எண்ணம் தலைவரின் ஆசியினால் கண்டிப்பாக நிறைவேறும்.
வாழ்த்தும்
நெய்வேலி வாசுதேவன்.
-
16th June 2012 12:29 PM
# ADS
Circuit advertisement
-
16th June 2012, 01:16 PM
#62
Senior Member
Diamond Hubber
-
16th June 2012, 01:17 PM
#63
Junior Member
Veteran Hubber
thanks for the background informations on VPKB casting problems, dear pammalar sir,
In my view, Gemini Ganesan was the apt choice to play vellayathevan compared to SSR. In the words of SSR even though GG selection was not satisfactory to NT, one must remember that it was GG's magnanimity and generosity to consult SSR before he accepted the role. GG's role is also a memorable one particularly relief we get through the song sequence Inbam Pongum Vennila. Imagine SSR with PBS voice? when you close your eyes and listen to PBS songs, only Gemini strikes to our mind and nobody else including MT or Balaji o Muthuraman or Nagesh or others. Even as NTs kattabomman dominates the proceedings of VPKB. The King or romance GG has done perfect justice to his role, Compared to NT-SSR combo, NT-GG combo was always successful. Even NTs die hard fans like me will accept the fact that in Parthal Pasi Theerum GG had an edge over NT storywise and the film is regarded as a Gemini dominated movie on par with NT. We the NT fans shall always be thankful to the generosity shown by GG, one of the trinity of Tamil Cinema, to have acted alongside our NT, making his presence a sweet contribution (like Kalangalil aval vasantham in Pavamannippu).
-
16th June 2012, 01:29 PM
#64
Senior Member
Diamond Hubber
3-டியில் ரிலீஸாகிறது சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன்...!
http://cinema.dinamalar.com/tamil-ne...mman-in-3D.htm
-
16th June 2012, 08:28 PM
#65
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உயர்ந்த பாராட்டுதல்களுக்கும், உன்னத பதிவுகளுக்கும் எனது உச்சமான நன்றிகள்..!
தங்களின் இணையில்லா அன்புக்கூண்டில் என்றென்றும் பாசக்கிளியாக அடைபட்டவன் இந்த எளியவன் என்று எண்ணும்போது பேரானந்தத்தால் பேச இயலாமல் தவிக்கிறேன்..!!!
'வெள்ளையத் தேவனாக நடிக்க முடியவில்லை' என்ற தலைப்பில் 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் எஸ்.எஸ்.ஆர் கூறியுள்ள விஷயம் ஒரு முக்கியமான வரலாற்றுத் தகவல்..!
நமது திரியின் 'பாயும் புலி' ராகவேந்திரன் சார், சென்னை 'சாந்தி'யின் 'பதாகைப் புலி'யாகவும் இருப்பதில் நமக்கெல்லாம் பெருமைதானே. அவரது பதாகையை உலக ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமாக்கிய உங்களுக்கு உயர்வான நன்றிகள்..!
(ராக)வேந்தரும், (வாசு)தேவனும், வாழ்வியல் திலகத்தின் இரு கண்மணிகள் என 'சிவாஜி வரலாறு' என்றென்றும் ஆணித்தரமாகச் சொல்லும்..!
[ராகவேந்திரன் சார், இப்படி ஒரு பதாகை வைக்கப்பட்டிருக்கும் தகவலை 'தினமலர்' நாளிதழின் கவனத்துக்கு கொண்டு சென்றால், அதை அவர்கள் ஒரு சிறந்த செய்தியாக தங்களின் நாளிதழில் அவசியம் வெளியிடுவார்கள்..!]
பாசத்துடன்,
பம்மலார்.
-
16th June 2012, 08:43 PM
#66
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
வருடம் 2012 உலகத்துக்கு எப்படியோ, நமது நடிகர் திலகம் பக்தர்களுக்கு ,1952 , 1959 ,1960 ,1961 ,1964 ,1972 ஆகியவற்றை போல் மறக்க முடியாத வருடம்.(மறக்க வேண்டியது 2001 ,வணங்க வேண்டியது 1928 )
பம்மலார் சாரின் வீரபாண்டிய கட்டபொம்மன் விருந்து கெய்ரோ விருதுக்கு ஒப்பான பங்களிப்பு. உங்களுக்கு நன்றி சொல்ல நிஜமாக வார்த்தையில்லை.
ராக(வேந்தர்) சாந்தி திரையரங்கு பேனருக்கு மிக்க நன்றிகள்.
அத்தனை பேரின் பங்களிப்பும் அமர்க்களம்.இந்த திரி கர்ணன் பெற்ற வெற்றியை பெரும்.(துவக்கி வாய்த்த கை மோதிர கையாயிற்றே??)
உச்சமான பாராட்டுக்கு உளப்பூர்வமான நன்றிகள், அடிகளாரே..!
-
16th June 2012, 10:18 PM
#67
Senior Member
Veteran Hubber

Originally Posted by
sivajisenthil
thanks for the background informations on VPKB casting problems, dear pammalar sir,
In my view, Gemini Ganesan was the apt choice to play vellayathevan compared to SSR. In the words of SSR even though GG selection was not satisfactory to NT, one must remember that it was GG's magnanimity and generosity to consult SSR before he accepted the role. GG's role is also a memorable one particularly relief we get through the song sequence Inbam Pongum Vennila. Imagine SSR with PBS voice? when you close your eyes and listen to PBS songs, only Gemini strikes to our mind and nobody else including MT or Balaji o Muthuraman or Nagesh or others. Even as NTs kattabomman dominates the proceedings of VPKB. The King or romance GG has done perfect justice to his role, Compared to NT-SSR combo, NT-GG combo was always successful. Even NTs die hard fans like me will accept the fact that in Parthal Pasi Theerum GG had an edge over NT storywise and the film is regarded as a Gemini dominated movie on par with NT. We the NT fans shall always be thankful to the generosity shown by GG, one of the trinity of Tamil Cinema, to have acted alongside our NT, making his presence a sweet contribution (like Kalangalil aval vasantham in Pavamannippu).
பாராட்டுக்கு நன்றி, சிவாஜிசெந்தில் சார்..!
"கட்டபொம்மன்" காவியத்தில் 'வெள்ளையத் தேவன்' வேடம் குறித்த தங்களது கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்..!
ஜெமினி கணேசன் அவர்கள், 'வெள்ளையத் தேவ'னாக சிறப்பாகவே செய்திருப்பார். குறிப்பாக பத்மினியுடனான காதல் காட்சிகளிலும், 'இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே' பாடலிலும் தானே என்றென்றும் 'காதல் மன்னன்' என்பதனை நிரூபிப்பார். வீரம் செறிந்த காட்சிகளிலும், ஒரு மாவீரனுக்கே உரிய ஆர்ப்பரிப்போடும், மிகுந்த கம்பீரத்தோடும் குறைகூற முடியாத வண்ணம் செவ்வனே செய்திருப்பார்.
Gemini-Padmini Chemistry worked out very well in VPKB. SSR-Padmini Pairஐ என்னைப் பொறுத்தவரையில் 'வீட்டு ரோஜா' என்று கூறமுடியவில்லை, அது ஒரு "காட்டு ரோஜா" தான்..!
ஜெமினி-பத்மினி கெமிஸ்ட்ரிக்காக 'இனபம் பொங்கும் வெண்ணிலா'வை ஒரு முறை பார்ர்ப்போமே:
எஸ்.எஸ்.ஆர்.-பத்மினி comboவில் "காட்டு ரோஜா(1963)"விலிருந்து 'சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும்':
Ultimate & Evergreen Pairன் Most Handsome & Ultimate Chemistry, நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி:
"மரகத(1959)"த்திலிருந்து 'எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு':
[இப்பாடலை YOUTUBEல் தரவேற்றிய வாசு சாருக்கு நமது நன்றிகள்..!]
அன்புடன்,
பம்மலார்.
-
17th June 2012, 12:08 AM
#68
பத்து. நடிகர் திலகத்தைப் பற்றிய திரிக்கு பாகம் எண் பத்து. என் நினைவு ஆறு வருடங்களுக்கு முன் உள்ள காலத்திற்கு ஓடுகிறது. அன்று நான் முதல் முதலில் பதிவிட்டது இந்த திரியின் முதல் பாகம் பக்கம் எண் 60-ல். இன்று அந்த திரி ஆறு வருடங்களில் ஆயிரக்கணக்கான பக்கங்களை கடந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கொண்டுள்ள ஒரு திரியாக, இணையத்தை பொறுத்தவரை நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு அதிகாரப்பூர்வமான ஆவணப்பூர்வமான ஒரு திரியாக வளர்ந்து, நான் பல முறை குறிப்பிட்டுள்ளது போல the thread of the Hub என்று சொல்லக்கூடிய வகையில் விளங்குகிறது. இதற்கு காரணமான அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் திரியின் வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த பத்தாம் பகுதியை மிக மிக பொருத்தமாக துவக்கி வைத்திருக்கும் வாசுதேவன் அவர்களைப் பற்றி நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ரசிகர் என்றால் அப்படி ஒரு ரசிகர். அந்த ரசிப்பு தன்மைக்காக தான் ரசித்ததை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த காட்சிகளை இங்கே தரவேற்றுவதில் அவரின் உழைப்பு அசாத்தியமானது. வாழ்த்துக்கள் வாசு சார். தொடர்ந்து கலக்குங்கள்.
மற்றொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். நீங்கள் தரவேற்றியுள்ள தங்கை சண்டைக் காட்சி. அதிலும் நீங்கள் சொன்னது போல தன்னை அடித்த ரவுடியின் முகத்திற்கு நேரே இரண்டு கைகளையும் நீட்டி கை தட்டி விட்டு அவர் கொடுக்கும் பன்ச்கள் இருக்கிறதே, பல முறை தியேட்டரிலும் டிவிடியிலும் நான் ரசித்துப் பார்த்து, நமது இந்த திரியில் தங்கை படத்தைப் பற்றிய விமர்சன பதிவிடும் போதும் ரசித்து எழுதிய அந்த காட்சியை தரவேற்றியதற்கு நன்றிகள் பல.
அது போல் நீங்கள் சாந்தியில் கண்ட பதாகையைப் பற்றியும் சொல்ல வேண்டும். ராகவேந்தர் சாரால் உருவாக்கப்பட்டு சாந்தியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பதாகையில் நமது திரியின் ஆரம்ப கால சாரதியும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகருமான ஜோ அவர்களின் பின்னூட்டமும் இடம் பெற்றிருக்கிறது.
ஜோ,
சாந்தி வளாகத்தில் உங்கள் பெயர் இடம் பெற்று விட்டது. நடிகர் திலகம் வெள்ளை பாண்ட்டும் நீளமும் சிவப்பும் கலந்த டி- ஷர்ட்டும் அணிது நிற்கும் அந்தப் புகைப்படத்திற்கு அருகில் " சிவாஜி அய்யா புகழ் வாழ்க" என்று நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டம் பதியப்பட்டிருகிறது. வாழ்த்துக்கள்.
நமது திரியின் பங்களிப்பாளரும் நடிகர் திலகத்தின் மூத்த ரசிகருமான சுப்ரமணியன் ராமஜெயம் அவர்களின் பின்னூட்டமும் அந்த பதாகையில் இடம் பெற்றிருக்கிறது.
கடந்த ஒரு மாதமாக என் பதிவுகள் இடம் பெறாததால் அதை பற்றி விசாரித்து என்னை திரிக்கு அழைத்த கார்த்திக் மற்றும் கோபால் அவர்களுக்கு நன்றி.
எனக்கு தனிப்பட்ட அன்பு வேண்டுகோள் விடுத்த சகோதரர் செந்தில் [ஹரிஷ்] அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். கணினியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு மற்றும் வேலைப்பளு காரணமாக இங்கே வர முடியவில்லை.
திரியின் புதிய வரவுகளான சிவாஜி செந்தில் மற்றும் [பாரிஸ்டர்] சுப்ரமணியனுக்கு நல்வரவு.
நடிகர் திலகத்தின் சாதனை செப்பேடுகளின் ஆவண காப்பாளரும் இந்த திரியின் நெடுந்தூண்களில் ஒருவருமான அருமை சகோதரர் சுவாமிக்கு நன்றிக்கு எல்லாம் அப்பாற்பட்ட நன்றி.
அன்புடன்
-
17th June 2012, 12:18 AM
#69
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Murali Srinivas
ஜோ,
சாந்தி வளாகத்தில் உங்கள் பெயர் இடம் பெற்று விட்டது. நடிகர் திலகம் வெள்ளை பாண்ட்டும் நீளமும் சிவப்பும் கலந்த டி- ஷர்ட்டும் அணிது நிற்கும் அந்தப் புகைப்படத்திற்கு அருகில் " சிவாஜி அய்யா புகழ் வாழ்க" என்று நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டம் பதியப்பட்டிருகிறது. வாழ்த்துக்கள்.
Joe
Can someone post that here?
-
17th June 2012, 12:42 AM
#70
Senior Member
Veteran Hubber
Welcome Back, Murali Sir..!
Thanks For Your Compliments..!
Bookmarks