-
22nd June 2012, 04:09 PM
#11
Junior Member
Devoted Hubber
இது சரி.
From Senthil.com: Music predates language and can still be expressed and produce deep emotions without any lyrics. music can keep you in absolute attention just like in meditation.
இதுவும் சரியே:
From Venkiram: சில நேரங்களில் பாடல் வரிகள் முன்னெடுத்துச் செல்லும், சில நேரங்களில் இசைக்குறிப்புக்கள், சில நேரங்களில் இரண்டும் இணை கோடுகளாக.. ஒவ்வொன்றுக்கும் ஒரு எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.
எனக்கு கண்ணதாசன் பாரம்பரியமும் வேண்டும். ராஜாவின் பாரம்பரியமும் வேண்டும்.
ராஜாராம்: என்னால் வெறும் கவிதை தொகுப்பை மட்டும் முழு நேரமும் படித்துகொண்டிருக்க முடியாது. அதே சமயம் எல்லா நேரமும் வெறும் இசையை மட்டுமே கேட்டுகொண்டிருக்கவும் கஷ்டம் தான். இரண்டும் இணையும் பொது தான் என்னை போன்ற வெகுஜனத்திற்கு இலகுவாக புரியும். ராஜா சார் 900 படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் நான்கு பாடல் இல்லா தொகுப்பையும் (HTNI, NBW, India 24 hours, மாண்டலின் ஸ்ரீனிவாசுடன் இணைந்த இளையராஜா க்ளாசிக்ஸ் - வேறேதும் உண்டா என்று தெரியவில்லை) இரண்டு பாடல் இல்லா படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார் (கடமை கண்ணியம் கட்டுப்பாடு, பேசும் படம் - வேறேதும் உண்டா?) அதே சமயம் ராஜா சாருக்கு எழுத்து பிடிக்கும், எழுத்தாளர்க்கு கிடைக்க வேண்டிய மரியாதையை செய்திருக்கிறார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றது. வைரமுத்துவை தான் பிடிக்கவில்லையே தவிர, அவருக்கு பிடித்த எழுத்தாளர்கள் திரை உலகில் இல்லாவிட்டாலும் அவர்களுடன் நெருங்கிய நட்பு வைத்திருக்கிறார்.
"ஒவ்வொன்றுக்கும் ஒரு எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டிருக்கிறது" - நன்றி வெங்கிராம் - நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.
பாலா சார், வெங்கிராமின் எழுத்துக்களை உளறல் என்று சொன்னதை கண்டிக்கிறேன்.
-
22nd June 2012 04:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks