-
28th June 2012, 12:10 PM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
சற்று தாமதமான பாராட்டிற்கு பொறுத்தருள்க. அதற்கும் காரணமுண்டு. சாதாரண ஆவணங்கள் என்றால் ஒரு தடவை படித்து அனுபவித்து விட்டு பாராட்டு போடலாம்.
ஆனால் தங்களின் தங்கமான 'தங்கப்பதக்கம்' ஆவணங்களின் அணிவகுப்பில் ராக்கெட் லாஞ்சர்கள் போலக் கிளம்பும் வித விதமான பதிவுகளில் தாக்குண்டு நிலை தடுமாறிப் போனதால் தான் இந்த தாமதம். ஒவ்வொன்றையும் ஒருதடவைக்குப் பல தடவை படித்ததால் சற்று லேட்.
'சிவாஜி தரிசனம்' நூல் நாடகம் உருவான வரலாற்றை நினைவு படுத்துவதோடு சிவாஜி நாடக மன்றத்தின் கடைசி நாடகம் இதுதான் என்று சொல்லி கவலைப்படவும் வைக்கிறது.
'சிவாஜி ரசிகன்' இதழில் நாடக டைரக்டர் எஸ்.ஏ.கண்ணன் அவர்கள் கூறியுள்ள கருத்துரை இளைய தலைமுறை எப்படி இருக்கக் கூடாது என்பதில் தலைவருக்கு இருந்த அக்கறையை அமர்க்களமாகச் சொல்கிறது. போராட்ட தியாகிகளின் வாழ்வில் ஒளி விளக்கேற்ற நம் தலைவர் அரும் பாடு பட்டதை நினைக்கையில் உள்ளம் பூரிக்கிறது.
தினமணி நாடக விமர்சனம் தித்திக்கிறது. அதிலும் குறிப்பாக விசாரணைக் காட்சியில் பழி நீங்கியவுடன் தன மகிழ்ச்சியை கரங்களின் வாயிலாகவே வெளிப்படுத்துவதை அனுபவித்து விமர்சனம் செய்வது தினமணி தான் 'மணி' தான் என்று நிரூபித்து விட்டது.
'தினத்தந்தி' நாடக விளம்பரம் அடிமுடி தேடினாலும் கிடைக்காத விளம்பரம். அடி சக்கை!
தங்கப்பதக்கம் குறிப்புகள் பதக்கத்தைச் சுற்றிலும் பதிக்கப் பட்ட வைர மணிகள்.
சல்லடைப் போட்டுத் தேடினாலும் கிடைக்காத அரிதான, அபூர்வ விளம்பரங்களை கொஞ்சமும் சிரமம் பாராமல் பதித்ததற்கு நாங்கள் எந்தப் பதக்கம் தந்தாலும் தங்களுக்கு ஈடாகாது என்பதுதான் நிதர்சனமான உண்மை!
பதிவுகளின் அரசரான தங்களுக்கு என் சார்பாகவும், நமது திரியின் சார்பாகவும், அய்யா எஸ்.பி.சௌத்ரி அவர்கள் சார்பாகவும் தங்களுக்கு நாங்கள் அனைவரும் சூட்டும்

என்றுமே நெ.1 எங்கள் அன்புப் பம்மலார் தான்.
சார் ஒரு வேண்டுகோள். 'கல்கி' இதழின் 'தங்கப்பதக்கம்' நாடக மற்றும் திரைப்பட விமர்சனம் இருந்தால் அடியேனுக்கு அளிக்க இயலுமா?...
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 28th June 2012 at 12:21 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
28th June 2012 12:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks