continued from the last post:

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் யோகசாலிகள்தான். தமிழென்றாலே இனிமை என்பது பொருள். தமிழில் சில வார்த்தைகளுக்கு இரும்பைக் காந்தம் இழுக்கும் தன்மைபோன்ற சக்தியுண்டு. இது கற்பனையல்ல. கடைந்தெடுத்த அனுபவ உண்மை.

"மண்டி" என்ற சாதாரண வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வார்த்தையில் விசேஷமாக ஒரு சக்தியோ கவர்ச்சியோ இருப்பதாகத் தோன்ற வில்லை அல்லவா? சிறந்த கலைஞர்கள் இவ்வார்த்தையைக் கையாண்டு எத்தனை ஆச்சர்யகரமான அற்புத சக்தியை ஏற்படுத்தி விடுகிறார்களென்பதைப் பாருங்கள்.

பாரதியார் பாடலொன்றில் ("புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு" ) புகழ் மண்டிக் கிடக்கிறதாம். புகழானது கொழித்து, கொப்பளித்து, உறைந்து, ஊறித் ததும்பி எங்கும் பரந்து நிரம்பிக் கிடக்கிறதாம். இந்த ஒரு வார்த்தை கவிதையில் ஜீவகளையைப் படம்பிடித்துப் படிப்போர் கருத்தைப் பரவசமாக்குகிரது. இன்னும் பல உதாரணங்கள் காட்டலாம்.

என். எஸ். கிருஷ்ணன். கட்டுரை. ஜூன் 1952,