-
8th October 2012, 06:40 PM
#11
Senior Member
Diamond Hubber
கீரிப்பிள்ளை என்ற வார்த்தைக்கு அந்த ஜீவனையே கண்முன்னே கொண்டு வருவார். கீரிப் பிள்ளை வேகமாக வந்து தன் இரையைக் கண்டவுடன் முற்றிலும் மெதுவாக ஊர்ந்து செல்லுமாம். அந்த லட்சணத்தினைத் தன் கைகளில் காட்டி விடுவார் இந்தப் பாட்டில்.
சபாஷ் ராகவேந்திரன் சார். பின்னி எடுத்திட்டீங்க.. நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்கு 'சிந்து நதியின் மிசை' ஞாபகம் வந்து விட்டது. "வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்" வரிகளின் போது மிகுதியான நீர் ஆற்றோட்டமாய் வளைந்து நெளிந்து வந்து கடலில் சேர ஓடிவரும் வேகத்தை இரு கைகளின் வளைவுகளின் மூலம் அவர் காட்டும் அழகு... அடடா! மிகுதியான நீர் கடலில் கலந்து வீணாகாமல் பயிர் செய்ய உதவ வேண்டும் என்பதை உணர்த்த, நல்ல நீரை கடலில் சேராமல் தடுப்பது போன்ற பாவனையில் கைகளாலேயே சட்டென்று நிறுத்துவார்... பின் கடலில் சேரவிருக்கும் நல்ல நீரை தடுத்த பின் அந்த நீரோட்டத்தை திருப்பி மையத்து நாடுகளில் பயிர் செய்ய அனுப்பி வைப்பார்.(கைகளாலேயே). கைகளை சமமாக்கி நீரை சமமாக பங்கிட்டு வேறு கொடுப்பார். ஒரு செகண்ட் காட்சி. ஒரு கோடி தலைமுறைக்கும் எழுதலாம். பாரதி மட்டும் இதை கண்டிருந்தால் "என் பாட்டில் இவ்வளவு அர்த்தமா?" என்று அவனே ஆச்சரியப்பட்டுப் போவான்.
Last edited by vasudevan31355; 8th October 2012 at 09:55 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
8th October 2012 06:40 PM
# ADS
Circuit advertisement
Bookmarks