Gap filler சி.செ. பாணியில்..
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் - ரவிச்சந்திரன் பாரதி
போட்டாச் இல்லைன்னு நினைக்கிறேன் :)
https://youtu.be/r3weV6CISI0
Printable View
Gap filler சி.செ. பாணியில்..
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் - ரவிச்சந்திரன் பாரதி
போட்டாச் இல்லைன்னு நினைக்கிறேன் :)
https://youtu.be/r3weV6CISI0
ஞான ஒளி பாடல் படத்தில் முதல் சில நாட்கள் மட்டும் இருந்தது என நினைவு.
பாப்ஜி ஜெயகௌசல்யா சைக்கிளில் வரும் போது நடிகர் திலகம் பார்ப்பது போல் ஒரு காட்சி வரும். அதற்கு முன்பு இப்பாடல் காட்சியைப்பார்த்தாக ஒரு நினைவு. இரண்டு நாட்களில் 55 காலைக் காட்சிகளில் இரண்டைப் பார்த்தேன். முதல் நாள் காலைக்காட்சி தேவி பேரடைஸில். மறுநாள் ஆனந்த் தியேட்டரில்.
அப்போது இந்தப் படத்தைத்திரையிட்ட சபாக்களின் பெயர்கள் சில நினைவிலுள்ளன
ஓம் விக்னேஸ்வரா கல்சுரல் அகாடெமி - இவர்கள் தான் முதன் முதலில் புதிய படத்தை சபாக்களில் திரையிடும் வழக்கத்தைக் கொண்டு வந்தவர்கள்.
மதி ஆர்ட்ஸ் அகாடெமி
அகஸ்தியா ஃபைன் ஆர்ட்ஸ்
அது வரை வெறும் கச்சேரி, நாட்டியம், நாடகம் மட்டுமே போட்டு வந்த பல சபாக்கள் ஞான ஒளி படத்தைத் திரையிட போட்டி போட்டு முன்வந்தன.
சென்னை நகரில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி திரையரங்குகளிலும் படம் காலைக்காட்சி திரையிடப்பட்டது. தென்சென்னை மட்டுமின்றி வடசென்னையிலும் கூட.
எத்தனை முறை போட்டாலும் அலுக்காத பாடல்.. புது வீடு வந்த நேரம்..
ஒய் நாட் ஒன்ஸ் மோர்..
சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறா தெலுங்குப் படத்துக்காக கே.வி.எம். போட்ட மெட்டைத் தமிழிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்து இசையமைப்பாளர் வேதாவும் சம்மதிக்க, டி.எம்.எஸ். பி.சுசீலா பாட பதிவும் செய்யப்பட்டு விட்டது. ஆனால் கடைசி நேரத்தில் என்ன காரணத்தாலோ படமாக்கப்படாமல் விட்டு விட்டனர். அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.
ஜி.எஃப் 2 .. இதுவும் சிலோன் ரேடியோ பாட் தான்..இப்போ தான் பார்க்கிறேன் கருப்புச்சட்டை ஸ்ரீகாந்த் மஞ்சள் புடவை சங்கீதா (சென்சாருக்காக ரோஜாப்பூ மற்ற பூக்களைத்தவிர இந்தப் பாடலில் மயில் தென்னைமரங்கள் என வித்தியாசமாய்ப்படம் பிடித்திருக்கிறார்கள்)
https://youtu.be/7qeet9vIGms
ரெண்டு நாளா இங்கு புயல் மழை வரும் என்று சொல்லியிருப்பதால் உறக்கம் வரவில்லை..வெயில் சுமார் தான்..அதை ஊடிக்குளிர் காற்று வீசுகிறது..புயல் வராட்டாலும் பரவாயில்லை..கொஞ்சூண்டு மழை பெய்தால் தேவலை..யாராவது அமிர்த வர்ஷிணியில் பாட் போட்டா நன்ன இருக்கும்!
வாசு சார்
முள்ளில்லா ரோஜா பாடலில் நடிகர் திலகம் இருந்திருந்தால் என்ற ஆவல், நம் அனைவருக்குமே பல நினைவுகளை கொண்டு வருகிறது.
எத்தனையோ பாடல்கள் நடிகர் திலகத்திற்குக் கிடைத்திருந்தால் என நாம் துடித்திருப்போம். அப்படி சிலவற்றைப் பட்டியலிட்டு அவர் அதில் எப்படியெல்லாம் நடித்திருப்பார் என உருவகமும் பண்ணிப்பார்க்கலாமே...
நீங்கள் துவக்கி வையுங்கள். நாங்களெல்லாம் தொடர்கிறோம்...
தொடருக்கு தலைப்பு ...
ஓவர் டூ சி.க.
தாங்க்ஸ் ராகவேந்திரர் சார்.. நான் சி.வ ஞா.ஒ. நியூ சினிமாவில் பார்த்த போது இல்லை என நினைக்கிறேன்.அதன் பிறகும் பார்த்த வீடியோக்களில் இல்லை என்றே நினைக்கிறேன்..
அதே கண்கள் பாடல் தகவலுக்கும் நன்றி..ஆமாம்..பு.வீ வ. நேரம் நல்ல பாட்..
//தொடருக்கு தலைப்பு ...
ஓவர் டூ சி.க.// இது கொஞ்சம் ஓவராயில்லை..டி.ஆர் எம் பாணியில் என்னால் எப்படி முடியும்... சரி.. யோசிக்கிறேன் :)
பாண பத்திரரின் சீடரே பாட்டுப் பாடி அசைவை நிறுத்தும் போது..
பாண பத்திரரால் முடியாதது என ஒன்று உண்டா...
வாசு,
மூன்று தெய்வங்கள் படம் சின்ன வயசில் மதுரையில் (ஏதோ ஒரு) தியேட்டரில் பார்த்ததாக லேசாக, கொஞ்சமாக... அப்புறம் அதென்ன ஆங் புகையாக நினைவு.
படத்தில் சிவாஜி இருக்கிறார் என்று நினைக்கிறேன். கூட இருப்பது முத்துராமனா அல்லது ஸ்ரீகாந்தா என்று நினைவில்லை. மூன்றாவது பார்க்க ஒல்லியாக... ஒருவேளை நாகேஷோ. மூவரும் ஏதோ ஜெயிலிலிருந்தோ அல்லது விடுதியிருந்தோ தப்பிவந்து ஒரு பெரியவர் வீட்டில் தஞ்சம் அடைவார்கள் என்று நினைக்கிறேன். பெரியவர் யார் சுப்பையாவா/. அதுவும் நினைவில்லை.
அந்த வீட்டில் ஒரு வயது வந்த பெண்ணும், ஒரு காது கேளாத (அல்லது கண் தெரியாத?) பெண்ணும் உண்டு என்பதும் புகையாக நினைவில். வயது வந்த பெண் பார்க்க ஸ்ரீவித்யா போல இருந்தார், அது சந்திரகலா என்று உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன். அவருடன் பாடி ஆடும் இளைஞன் யார் என்று தெரியாமல் இருந்து, இப்போது அது சிவகுமார் என்று காட்டி விட்டீர்கள்..
முள்ளில்லா ரோஜா பாட்டு முழுசும் அவுட்டோரோன்னோ?, அது கலரா கருப்பு வெள்ளையா என்பது கூட புகையாக நினைவில். இப்போது உங்கள் பதிவின் மூலம் கலர் என்பதும் தெளிவாகிவிட்டது
யாரோ ஒருவர் எம்.ஆர்.ராதா குரலில் அடிக்கடி பெரியவரை மிரட்டுவார். ஒருவேளை வாசுவாக இருக்குமோ. (அட நீங்க இல்லீங்க)
சரி 'ரோஜா' என்று தொடங்கும் சில பாடல்கள் லேசாக நினைவில் உள்ளது. பட்டியல் போடுவோமா?.
(எழுதுகின்ற அத்தனை வரிகளையும் இப்படி சந்தேகத்தோடு எழுதுபவர் உலகத்திலேயே ஒருவர்தான் உண்டு. அவருக்கு சமர்ப்பணம்)
இன் டர்வியூல்ல எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்டாங்க
அவ்வளவு ஈசியாவா கேட்டாங்க
ஆமா. அதான் ஏதோ பொடி இருக்கும்னு நினச்சு ஒன்பதுன்னு சொல்லிட்டேன்
*
இதுஒரு பழைய ஜோக்..அது என்னவோதிடீர்னு நினைவில்..பின்ன பாண பத்திரரா நானா..சொன்னது சும்மா உவ்வாக்கட்டிக்காக.. ம்ம் மொதல்ல வாஸ்ஸூ ஸ்டார்ட் செய்யட்டும்..(ஹைய்யா இன்னும் டைம் வாங்கலாம்)
ஆதிராம் சார்.. ஹிஹி :) :) அண்ட் தாங்க்ஸ் கண்டு கொண்டதற்கு..( உங்கள் கோபத்திலும் ஒரு அழகிருக்கு :)
அப்ஜெக்*ஷன் யுவர் ஹானர்.. தியேட்டர் பேர்லாம் கரீட்டாச்சொல்லிடுவேன்.. பட் இந்தப் படம் உங்களுக்குத் தெரியவில்லை என நம்ப முடியவில்லை..
அப்ஜெக்*ஷன் இரண்டாவது யுவர் ஹானர்...எழுதுவது அனைத்தையும் தெரியவில்லை என்று சொல்ல மாட்டேன்..ஒரு 99 பெர்சண்ட் தான்..புகையாக இருக்குன்னு இருக்குன்னு தான் சொல்ல முடியும்..
மூ.தெ.. ஒரு இங்க்லீஷ் படம் என்று கூட எழுதியிருந்தேன்.. உங்கள் அளவுக்கு புள்ளி விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாதுங்காணும்..
எனிவே உங்கள் சமர்ப்பணத்திற்கு மிக்க்க நன்றி.. வழக்கமாய்க் கேட்கவேண்டிய கேள்வியையும் கேட்டு விடுகிறேன் (அதாவது மற்றவர்கள்) எங்கே கல் நாயக்.. அப்புறம்
நீங்களும் ஒரே ஒரு வெண்பா எழுதினீர்கள்..அப்புறம் ஏன் எழுதவில்லை..
சி.க.
எழுதுகிற விஷயத்தை ஆணித்தரமாக எழுதுவது என்பது விஷயம் தெரிந்தால் தானே எழுத முடியும் ஆதிராம் சார்.. தாங்க்ஸ் ஃபார் த அட்வைஸ்.. என் கண்ணைத் திறந்தீர்கள்..இனி சமர்த்தாய் விஷயம் தெரிந்து சந்தேகத் தொனி வராமல் எழுதுகிறேன்.. இதெல்லாம் சொன்னால் தானே எழுத முயற்சி செய்துகொண்டிருக்கும் என்னைப்போன்றவர்கள் திருத்திக் கொள்ள முடியும். :)
சந்தேகம் கேட்கலாம் தானே..
சிக்கா....
இந்தாங்கோ... நம்ம ராஜேஷ் கண்ட இசைராஜங்கத்தின் சக்ரவர்த்தினி நம்மையும் உருக வைக்க இசைக்கும் குழந்தைகள் கண்ட குடியரசு படத்திலிருந்து அமிர்த வர்ஷம் பொழியும் அமிர்தவர்ஷிணியில் "அமுதே ஓடி வா"
https://www.youtube.com/watch?v=2pKZ6e-ke4c
அப்படியே கங்கா தேவியை பிரார்த்தனை செய்யும் இன்னொரு அமிர்தவர்ஷிணியும் பிடிங்க...
கங்கா கௌரியில் இருந்து ஜெயந்தி ஆட ஜானகி பாட... அழகிய மேகங்கள் வானத்தில் திரளாதோ ?
https://www.youtube.com/watch?v=OsvmKweamtA
சிக்காவுக்காக...
தாஸேட்டன் குரலில் ஸ்ரீ ராகவேந்திரர் மழையை அழைக்கிறார்... அமிர்தவர்ஷிணியில்
https://www.youtube.com/watch?v=Q1_hopr_Izs
சி.க.
அது வேறொன்றுமில்லை. வாசுவின் முள்ளில்லா ரோஜா பாடலுக்கு என் பாணியில் பதில் பதிவு எழுதியிருந்தீர்கள் அல்லவா.
அதனால் உங்கள் பாணியில் நானும் ஒரு பதிவு எழுதிப் பார்த்தேன்.
நீங்கள் எழுதியதும் என்னுடையது போல இல்லை.
நான் எழுதியதும் உங்களுடையது போல இல்லை.
அதுதான் ஒற்றுமை.
அமிர்த வர்ஷி்ணி பாடல்களுக்கு நன்றி.. முதல் ப்ளாக் அண்ட் வொய்ட் இனிமே தான் பார்க்கணும்..ரெண்டு ஜெ பார்த்தேன்..கங்காதேவி பாட். ராகவேந்திரர் பாட் இனிமேல்ட்டு தான் கேட்கணும் மதுண்ணா..
தற்போதைய நிலமை..எங்கிட்டோ பெய்யுது இன் ட்டீரியர்ல ந்னு நினைக்கிறேன் ( நாளை பேப்பரில் வரும்) ஆனா பால்கனி திறந்தா ச்சில்னு காத்து அடிக்குது
தூங்காத விழிகள் ரெண்டும் அமிர்த வர்ஷினியாம்
இந்த ஒருவர் வாழும் ஆலயத்தில மலையோரம் மயிலே வெயிட் வெயிட் அது அமிர்த வர்ஷினி இல்லை.. அந்தப்பாட் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என சொல்லவந்தேன்..அதுலயே வானின் தேவி வருக என எஸ்பிபி ஜானகி பாட் இருக்கு..இப்பத்தான் கேட்டேன் நல்லா இருக்கு..ஆனா ஆடியோ தான் இருக்கு..
https://youtu.be/ABwrM8sM25w
மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் அம்ருதவர்ஷிணியில் அமுதே மழையாய்ப் பொழிகிறதே...
https://www.youtube.com/watch?v=uubrCumAOvk
தலைவரின் நடனத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.
Anandaamrutakarshini......... in Amritavarshini by Dikshithar rendered by Srivalsan Menon
http://www.youtube.com/watch?v=Vv1zb2AstzE
This composition sung by Dikshithar is said to have brought rain to Ettayapuram area.
ராஜ் ராஜ் சார்..அமிர்த வர்ஷினிப் பாட்டுக்கு நன்றி..அனேகமாய் நாளைக்கு மழை வரும்..:) என நினைக்கிறேன்..பட் ஏற்கெனவே உள் நாட்டில் பெய்து கொண்டு இருக்கிறதாம்..பார்க்கலாம்..
சின்னா!
வெடுக் வெடுக் கென்று பேசி சிரிக்க வைத்த அந்தக்கால சி.தி.ராஜகாந்தம்,
பார்த்தவுடனே சிரிக்க வைக்கும் அங்கமுத்து
ஆச்சிக்கு காமெடியில் ஈடான காந்திமதி
தேன் கிண்ணம் போன்ற சில படங்களில் காமெடி வழங்கிய விஜயசந்திரிகா
அப்புறம் ஹீரோயின் பட்டியலிலிருந்து மாறி பக்கென்று சிரிக்க வைத்த
ஈவி.சரோஜா (நிறையப் படங்களில் தங்கவேலு, சந்திரபாபுவுடன். அப்புறம் கதாநாயகர்களைக் கிண்டல் பண்ணி தோழிகளுடன் சேர்ந்து விரட்டி குத்துப்பாட்டு. பாதிப் பாட்டு முடிந்தவுடன் கதாநாயகன் கடுப்பாகி அதே பாட்டைப் பாடி இவரை விரட்டுவார். )
நம்ம பத்மினியின் தங்கை ராகினி உத்தம புத்திரனில்
நான் சொல்லும் ரகசியம் மாதிரி சில படங்களில் காமடியில் கொடி கட்டிய ஜி.சகுந்தலா குறிப்பா உயர்ந்த மனிதன்
அப்புறம் என் அண்ணன், பணம் படைத்தவன் படங்களில் கீதாஞ்சலி
நிறையப் படங்களில் குள்ள வனிதா
பாக்கியராஜின் ஆஸ்தான சரஸ்வதி
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட அற்புதமான காமடி நடிகை ஷோபனா (வடிவேலுடன் ஒரு படத்தில் குறத்தியாக வருவார்)
இப்போ அதிகமாக மல்லு ஷகீலாவும் நகைச்சுவை செய்கிறார்.
புரொபெஷனலா இவங்கல்லாம் ஆச்சி மாதிரி நகைச்சுவை நடிகைகள் இல்லையென்றாலும் நம்மை நன்கு சிரித்த வைத்தவர்களே
இன்னும் இருக்கு.
சின்னாச்சிQuote:
வாஸ்ஸூ, போகும் ஸ்லோவைப் பார்த்தால் நான் நினைத்திருக்கும் கமல் ஜெய்யூ பாட்டு வர நாளாகும் போலிருக்கே இன் எஸ்.பி.பி. :)
அது ஸ்லோ இல்லே. பொறுப்பு. முடிந்த வரை பொறுப்பா தரணும். ஒரு பாலா பதிவுக்கு மூணு நாட்களாவது தேவை. அப்போதான் முழுமையாகும். ஏற்கனவே சொல்லியிருக்கேன். முதல்ல படத்தை தேடி கண்டு பிடிக்கணும். அப்புறம் படம் பார்க்கணும்..தெரியாததற்கு கதை எழுதணும். பாடல் வரியை தப்பில்லாம டைப் அடிக்கணும். (இது செம வேலை) காட்சிகளைப் நல்லா வாட்ச் பண்ணனும். மியூசிக்க உத்து கவனிக்கணும். படம் புடிக்கணும். ஆய்வு எழுதணும். கலர் பண்ணனும். சும்மா எழுதிட்டுப் போ முடியாதுங்காணும். பாலா தொடர் முடிய இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும். அவசரப்படாதேள்.:)
இது வேகம்.
ஹாய் குட் மார்னிங்க் ஆல்..
ஆஹா..வாசு.. தாங்க்ஸ் ஃபார் தெ லிஸ்ட்.. நீங்கள் சொல்லச் சொல்ல நினைவுக்கு வருகின்றன.. இந்த சூசைட் பண்ணிக்கிட்ட பொண்யாரு நினைவில்லையே..
அங்க முத்து ஓ.கே. காந்திமதி நல்ல நடிகை தான்..குணச்சித்திரம் நா.. சிரிப் நினைவுக்கு வரவில்லை..
உயர்ந்த மனிதன் ல விகேஆர் மனோரமான்னோ..
அந்த படகோட்டி நாகேஷ் ஜோடி மாதவி சொல்லியாச்சுன்னு நினைக்கறேன்..
வாசுங்க்ணா,
இஃதென்ன இது.. பிறந்து வீட்டுப் பெருமையை உடன் பிறந்தான் கிட்ட சொன்னாளாம் ஒருத்தி! உம்மைப் பத்தித் தெரியாதா என்ன.. உங்க உழைப்பைப் பத்தித் தெரியாதா என்ன.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க..ராமருக்கு அணில் உதவினா மாதிரி ஹெல்ப் பண்றேன்.. ஆனா ரெண்டு வருஷம்ங்கறது கொஞ்சம் ஜாஸ்தி..மே.பி ஒங்க மனசுல நினைச்சுக்கிட்டிருக்கற பாடல் எண்ணிக்கை அதிகமோ என்னவோ..சரியா..
//இந்த சூசைட் பண்ணிக்கிட்ட பொண்யாரு நினைவில்லையே..//
http://www.chennaispider.com/attachm...hobana-E-L.jpg
திரைப்படம்: கேளடி கண்மணி (1990)
இசை: இளையராஜா
பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...
https://www.youtube.com/watch?v=5-dtibGVb1c
திருப்பங்கள் நு ஒரு படம்..அதுல ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன் நு பாட் கேட்டேன்..எஸ்.பி.பி வாணிங்கறதால போடலை.. பட் அது இன்னா படம்..ஆக்ட் கொடுத்தவுக யாரு...டீடெய்ல்ஸ் ப்ளீஸ் :)
சின்னா!
ஆதிராம் போல எழுத முயற்சித்து நடுவில் நீங்களாய் வந்து மாட்டிக் கொண்டீரே. பாவமய்யா நீங்கள்.
ஆதி பரவாயில்லை. உம்மை மாதிரியே எழுத முயன்று பாதி தேறினார்.
ஆனால் ஒன்று. நீர் இளைத்தால் நல்லாயிருக்க மாட்டீர். ஆதி குண்டானால் நல்லாயிருக்க மாட்டார். (ஆனால் ஆதியை நான் இதுவரை பார்த்ததில்லையே... ஏன் உம்மையும்தான்.):)
//ஆதி பரவாயில்லை. உம்மை மாதிரியே எழுத முயன்று பாதி தேறினார்.// ஓய் இந்த வம்பு தானே வேணாங்கறது.. அவர் ரொம்ப ஜாஸ்தி ‘புகை’ விட்டார் :) ஹப்புறம் டூயட் பாட் எழுதறப்ப ஆதி மாதிரி சீரியஸ்ஸா ஆக்டர் டைரக்டர் அப்புறம் புள்ளி விவரம்லாம் கொடுக்க எனக்குத் தெரியாது.. தெரிந்ததெல்லாம் இயற்கைக்காட்சி + ஹீரோயின் அழகு :)
500 என்ன ஆயிரமே உம்மால் முடியும் வி வில் வெய்ட் ஃபார் தட்..
வாங்க ராகதேவரே.. நலமா :)
மண்ணில் இந்தக் காதலன்றி மூச்சு விடாமல் பாடிய பாடல்னு சொன்னாலும் மூச்சு விட்டுத்தான் பாடுவேன் என்று எஸ்.பி.பி சொல்லியிருக்கிறார்.. பட் எனக்கு சர்ப்ரைஸ் அந்தக் காலகட்டத்தில எப்படி இருந்ததுன்னா - அது கங்கை அமரன் எழுதினதுன்னு தெரிஞ்சப்ப.. நைஸ் ஸாங்க்.. தாங்க்ஸ்..
நீங்க இருந்தா காத்திருந்த மல்லி மல்லி பாட் போட்டிருப்பீங்க அமிர்த வர்ஷினில்லன்னு நினைச்சுக்கிட்டேன் நேத்து :)
சரி காலங்கார்த்தால சுறுசுறுப்பா ஒருபாட் கேக்கலாம்..ஓ காரணம் சொல்லணுமா.. ஸாரி பாட்ங்க..:)
https://youtu.be/MdRvX69mPw4
வணக்கம் ஜி
இதோ எங்க ஊர் கண்ணகியின் தெலுங்கு வடிவம்
இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
https://www.youtube.com/watch?v=hkzD1a5Zg6E
//எனக்கு முத்துலெட்சுமி ரொம்ப பிடிக்கும்//
எனக்கும் ரொம்பப் பிடிக்குஜி! ரொம்ப இயற்கையா அலட்டலே இல்லாம வெடுக்குன்னு பேசி எக்ஸ்பிரஷன்ஸ் தருவாங்க.
ஜந்த்யாலா .. அருமையான படங்கள் கொடுத்தார்
அபப்டி ஒரு படம்
நாலுகு ஸ்தம்பாலாட்டா
ராஜன் நாகேந்திராவின் இசையில் பாலுவும் இசையரசியும் பாடும் அருமையான பாடல்
https://www.youtube.com/watch?v=zJ1vLDQNbos
இந்த டியூனை நதீம் ஷ்ராவன் அப்படியே தூக்கிவிட்டனர் ஹிந்தியில்
ரிஷிகபூர் திவ்யபாரதி நடித்த தீவானாவின் போட்டு பேரும் வாங்கிவிட்டார்
https://www.youtube.com/watch?v=fsYJV47FFcc