-
16th October 2015, 06:03 PM
#11
வாசு,
மூன்று தெய்வங்கள் படம் சின்ன வயசில் மதுரையில் (ஏதோ ஒரு) தியேட்டரில் பார்த்ததாக லேசாக, கொஞ்சமாக... அப்புறம் அதென்ன ஆங் புகையாக நினைவு.
படத்தில் சிவாஜி இருக்கிறார் என்று நினைக்கிறேன். கூட இருப்பது முத்துராமனா அல்லது ஸ்ரீகாந்தா என்று நினைவில்லை. மூன்றாவது பார்க்க ஒல்லியாக... ஒருவேளை நாகேஷோ. மூவரும் ஏதோ ஜெயிலிலிருந்தோ அல்லது விடுதியிருந்தோ தப்பிவந்து ஒரு பெரியவர் வீட்டில் தஞ்சம் அடைவார்கள் என்று நினைக்கிறேன். பெரியவர் யார் சுப்பையாவா/. அதுவும் நினைவில்லை.
அந்த வீட்டில் ஒரு வயது வந்த பெண்ணும், ஒரு காது கேளாத (அல்லது கண் தெரியாத?) பெண்ணும் உண்டு என்பதும் புகையாக நினைவில். வயது வந்த பெண் பார்க்க ஸ்ரீவித்யா போல இருந்தார், அது சந்திரகலா என்று உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன். அவருடன் பாடி ஆடும் இளைஞன் யார் என்று தெரியாமல் இருந்து, இப்போது அது சிவகுமார் என்று காட்டி விட்டீர்கள்..
முள்ளில்லா ரோஜா பாட்டு முழுசும் அவுட்டோரோன்னோ?, அது கலரா கருப்பு வெள்ளையா என்பது கூட புகையாக நினைவில். இப்போது உங்கள் பதிவின் மூலம் கலர் என்பதும் தெளிவாகிவிட்டது
யாரோ ஒருவர் எம்.ஆர்.ராதா குரலில் அடிக்கடி பெரியவரை மிரட்டுவார். ஒருவேளை வாசுவாக இருக்குமோ. (அட நீங்க இல்லீங்க)
சரி 'ரோஜா' என்று தொடங்கும் சில பாடல்கள் லேசாக நினைவில் உள்ளது. பட்டியல் போடுவோமா?.
(எழுதுகின்ற அத்தனை வரிகளையும் இப்படி சந்தேகத்தோடு எழுதுபவர் உலகத்திலேயே ஒருவர்தான் உண்டு. அவருக்கு சமர்ப்பணம்)
-
16th October 2015 06:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks