Thank you very much Pon Ravichandran Sir!
Printable View
தோஷம் அகன்று விட்டது. திரியின் மீது கண் பட்டிருக்கும். பம்மலாரின் பிறந்த நாள் நெருங்குகிறது. நாம் திரியை பழைய நிலைக்கு உயர்த்துவோம்.
கார்த்திக் சார், தயவு செய்து எனக்காக உங்கள் ஜெயகுமாரி,ஜம்பு, ரிஷிமூலம் பதிவுகளை போடுங்கள். ஒரு பிரத்யேக நண்பனின் அன்பு வேண்டுகோள்.
என் சார்பில்---
நீதி, பட்டிக்காடா பட்டணமா முடிந்ததும் ,சிவாஜியின் காதல் காட்சிகள்-நான் ரசித்தவை என்று ஒரு தொடர் ஆரம்பிக்க உள்ளேன். இது 1952 முதல் 1999 வரை அனைத்து(??) படங்களையும் அணைத்து(!!!) செல்லும் தொடர்.(ஒரு முப்பது எபிசொட் ஆவது வரும்).
குறுக்கே நந்திகள் மறைப்பதை பொருட்படுத்த வேண்டாம் என்று பல நண்பர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பிதற்றல்களை சட்டை செய்யாமல் போவதே நமக்கு மரியாதை.
மீண்டும் வலியுறுத்துகிறேன். Filmography என்பது வேறு. தேர்ந்தெடுத்த ஒத்த ரசனை உள்ளவர்களுடன் பகிர்வது என்பது வேறு. விமரிசனம் என்பது வேறு. புகழ் மாலை என்பது வேறு. ஆய்வு என்பது வேறு. எல்லா படங்களும் ஆய்வுக்குரியது அல்ல. பல நண்பர்கள் அதிருப்தியை வெளியிட்டும் ,அவ்வப்போது அனாவசிய தலையீடுகள் தொடர்கின்றன.
நான் மீண்டும் ஒன்றை குறிப்பிடுகிறேன். நண்பர்கள் அவர்களுக்கு பிடித்த எதை வேண்டுமானாலும் எழுதட்டும்.ஆனால் அவரவர் பாணியில் எழுதட்டும். கார்த்திக் சார் பாணியில் தராசு,முரளி சார் பாணியில் நாம் இருவர்,கோபால் பாணியில் நேர்மை, என்று மற்ற பதிவர்களை அவமதித்து ,இது வரை போட்ட பதிவுகளை கேலிக்குரியதாக்க வேண்டாம். இது சிவாஜியை ,விவேக் மிமிக்ரி செய்யும் போது நமக்கு உண்டாக்கும் கோபத்துக்கு நிகரானது.ராகுல் ராம் இதைத்தான் சிரஞ்சீவி பதிவில் செய்து வாசுவின் அற்புதமான, சுவையான ஞான ஒளி பதிவை அவமான படுத்தினார்(அதுவும் சூட்டோடு சூடாக. ரெண்டு வருஷம் கழித்து செய்திருந்தாலாவது சுமாராக மன்னித்து விடலாம்). இது தொடர வேண்டாம். அவரவர் சொந்த பாணியில் எதையேன் செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகிறேன்.
Where is domination? I told clearly that they can write about anything in their own way without mimicking anyone. Anything wrong?
ராகவேந்தர் சார்,
கூவி கூவி பலரை அழைக்கிறீர்களே? அவர்களில் பலர் தங்கள் மீது வருத்தத்தில் இருந்தும் ,உங்கள் வயது கருதி மௌனம் காத்து திரியில் பதிவதை தவிர்த்து மௌன வாசகர்களாய் தொடர்கின்றனர்.
மிக மிக ஆசையுடன்,passion உடன் பதிவிடும் என் போன்ற சிலரையும் irritate செய்து அடக்க பார்க்கிறீர்கள். என்னதான் சாதிக்க போகிறீர்கள்? தனிப்பட்ட முறையில் என்னிடம் பல தர பட்ட சிவாஜி ரசிகர்களும் நொந்து கொண்ட (ஏ.ஆர்.எஸ் போன்றோர்,உங்கள் மிக நெருங்கிய சகாக்கள் உட்பட) 80 களின் படங்களை தூக்கி பிடித்து எதை சாதிக்க எண்ணுகிறீர்கள்?நாமே விரும்பாத குப்பை பண்டங்களை இங்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு பரிமாறி ,என்ன காண போகிறோம்?ஏன் திரும்ப திரும்ப கீறல் விழுந்த ,பழைய தேவையில்லாத குப்பை கூடையில் போட வேண்டிய, ரெகார்ட் போல ஒரே பல்லவியை கீச்சு கீச்சென்று ஒரே விஷயம் ?????
எல்லாப் படங்களும் ஆய்வுக்குரியது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். தாங்கள் ஆய்வு செய்ய விரும்பவில்லை என்றால் விட்டு விடுங்கள். மற்றவர்களை உத்தரவிட தாங்கள் யார். நான் ஏற்கெனவே கூறியது போல் இங்கு ஒரு குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மை நிலவுவது போல் உள்ளது. மாடரேட்டர் கூறட்டும் இந்தப் படங்களைப் பற்றி எழுதக் கூடாது என்று அல்லது குறிப்பிட்ட சிலர் எழுதக் கூடாது என்று. அதை விட்டு தாங்கள் கூறும் படங்கள் மட்டும் தான் இங்கு விவாதிக்கப் பட வேண்டும் என்றால் this seem like domination.Quote:
மீண்டும் வலியுறுத்துகிறேன். Filmography என்பது வேறு. தேர்ந்தெடுத்த ஒத்த ரசனை உள்ளவர்களுடன் பகிர்வது என்பது வேறு. விமரிசனம் என்பது வேறு. புகழ் மாலை என்பது வேறு. ஆய்வு என்பது வேறு. எல்லா படங்களும் ஆய்வுக்குரியது அல்ல. பல நண்பர்கள் அதிருப்தியை வெளியிட்டும் ,அவ்வப்போது அனாவசிய தலையீடுகள் தொடர்கின்றன.
நான் என் கருத்தை யார் மீதும் இது வரை திணித்ததில்லை. என்னுடைய அபிப்ராயத்தை ஏற்பதும் ஏற்காததும் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை. 200க்கு மேல் படங்களைப் பற்றிப் பேசமாட்டேன் என்பது எப்படி தங்களுக்குள்ள உரிமை அதே போல் அனைத்துப் படங்களைப் பற்றியும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றியும் விவாதிப்போம் என்பதற்கும் உரிமை உள்ளது. இதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே பாணியை ஒன்றுக்கு மேற்பட்டோர் எழுதலாம். அது உலகம் முழுதும் பொதுவானது. ஆனால் மற்றவர்களின் கருத்தைத் தன் கருத்தாக வெளியிடுவது தான் தவறு. இதை தாராளமாக சுட்டிக் காட்டலாம். ஒவ்வொருவர் தங்களைப் போல் எழுத்தில் மேதாவியாக இருப்பார்கள். ஒவ்வொருவர் மற்றவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு தாமும் அதே போல் எழுதினால் என்ன என விரும்புவார்கள். இது உலகில் உள்ளது தான்.
We can find fault in copying but not following a style.
புதியவர்கள் இளையவர்கள் அவர்கள் விரும்பிய படங்களை அல்லது அதில் நடிகர் திலகத்தின் நடிப்பை எழுத ஆர்வத்துடன் வரும் போது அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்பது மரபு சார்ந்த ஒன்று.
அவர்கள் எழுத்தில் தவறிருந்தால் சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ளச் செய்வது தான் மனிதாபிமானம்.
மீண்டும் மீண்டும் தங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதும் விவாதம் செய்வதும் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தங்களுடைய சிறந்த அறிவாற்றல், அற்புதமான எழுத்து நடை, நடிகர் திலகத்தின் நடிப்பில் தாங்கள் செய்யும் ஆய்வு முறை, அதனை வெளிப்படுத்தும் நேர்த்தி, இது யாருக்கும் இல்லாத சிறந்த விஷயமாகும். இதனைத் தங்களுடைய கோபமான பதிவுகள் மறைக்கின்றன என்பது வருத்தம் தருகிறது.
Irritate செய்வது யார் என்பது எல்லோருக்கும் தெரியும். குப்பை பண்டங்கள் என்பது போன்ற தங்களுடைய தனிப்பட்ட அபிப்ராயங்களுக்குத் துணை சேர்ப்பது தாங்களே அன்றி என்னை சொல்ல வேண்டாம். யார் எனக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்று பார்த்து நான் பதிவிடுவதில்லை. என் கருத்தை ஏற்பவர்களும் இருப்பார்கள் அல்லவா.
80களை எழுதாமல் தாங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்களோ அதைத் தான் 80களை எழுதி நான் சாதிக்கப் போகிறேன்.
தங்களுடைய ஆளுமை இங்கு இருக்க வேண்டும், தாங்கள் தான் இங்கு ஆட்சி செலுத்த வேண்டும், தங்கள் நட்பு வட்டாரம் மட்டுமே இங்கு பதிவிட வேண்டும் என்பதைத் தெளிவாக இங்கு உரைத்து விடுங்கள். இது சிவாஜி ரசிகர்கள் பங்கெடுக்க சரியான இடமல்ல என்பதை நான் தீர்மானித்து ஒதுங்கி விடுகிறேன்.
No more arguements and I give up. You won. Pl.Continue your way. As i expected here comes the threat of quitting .Nowadays ,you are predictable.
மன்னியுங்கள் ராகவேந்தர் சார் தங்கள் மனம் புண் பட்டிருந்தால். செப்டம்பர் மாதமானதால் தெய்வமகன்,புதிய பறவை,வசந்த மாளிகை போன்ற காவியங்களை தவிர்க்க இயலாது. தாங்கள் "போதும் இதெல்லாம்" என்ற பாணியில் பதிவு போட்டு ,மற்றதை கெடுத்ததில் எனக்கு வருத்தமே.
நான் இனி எதிலும் தலையிட போவதில்லை. தெய்வமாகி விட்ட அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அனைவரும் செயல் பட்டால் எனக்கு மகிழ்ச்சியே.
தங்களோடு நிறைய முரண் பட்ட போதிலும்,நடிகர்திலகம் ஒருவருக்காகவே உடல்,பொருள்,ஆவியை கொண்டிருக்கும் உங்களை போன்ற வழிகாட்டி எங்களுக்கு மிக அவசியம்.தடங்கலுக்கு வருந்துகிறேன்.
தொடரலாம்.
நான் எதைக் கெடுத்தேன்..
தெரியாத படங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயத்தை மட்டும் தான் நான் சொன்னேன். என்னால் இங்கு என்ன ஊறு நேர்ந்து விட்டது என விளக்கலாமே.
அது மட்டுமல்லாமல் தெய்வ மகன் திரைப்படத்தை அலசுவதில் எனக்கு என்ன மன வருத்தம் ஏற்படப் போகிறது. எல்லோரையும் விட அதிக சந்தோஷம் தான் கிடைக்கும். அதற்கென பின்னணி இசை கோப்பெல்லாம் தயாரித்து வைத்திருந்தேன். தங்கள் பதிவைத் தொடர்ந்து என்னுடைய பதிவையும் அளித்திருந்தேன்.
தாங்கள் ராஜாவைப் பற்றி தொடங்கிய விவாதம் முற்றுப் பெற்றதா இல்லையா எனத் தெரியாத நிலையில் திடீரென இது வந்ததா இல்லையா. ஒரு படத்தை முழுதும் அலசிய பிறகு மற்றதை எடுத்துக் கொள்ளலாமே என்கிற என் கருத்தினைத் தான் வலியுறுத்தினேன். அபூர்வமான திரைப்படங்களைப் பற்றியும் கூட இப்போது வேண்டாம் ஒரு வரையறை வந்த பின் வைத்துக் கொள்ளலாம் எனச் சொன்னேன். பட்டியலும் கூட என் தனிப்பட்ட விருப்பத்தைத் தானே சொன்னேன்.
இவற்றில் எங்கிருந்து நான் கெடுக்கும் விஷயம் வந்தது.
இதையெல்லாம் தாங்கள் சிந்தித்தால் என் மீது ஏதும் தவறில்லை என்பதை புரிந்து கொள்வீர்கள்.
இதைப் பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை எனக்கும் இல்லை.
Raghavendra nd Gopal sir,
A kind request.. There s no limitation to discuss abt sivaji sir.. 300 padangalaiyum 'discuss' pandrathil entha thavaru ondrum illai ena ninaikkiren.. Gopal sir, thaangale sila sivaji sir padangalai 'kuppai' endru solvathu varutham alikkirathu.. ennai pondra pira 'Silent readers'galum padikka nernthaal manavarutham adaivar.. Apart frm famous films, u cn disuss other non-famous movies also..v r the young generation people wil knw lot abt sivaji sir.. ithil thavaru ondrum illai...
kuppai endru sollappadum sila padangalil sivaji sir'in nadippil kurai ondrum irunthathillai.. vayathil siriyavan kooruvathaaga ninaikka vendaam.. ther r number of 'young sivaji fans cum silent readers' r reading all ur posts.. :)
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 11
இந்த அருமையான சண்டைக் காட்சியை அருமை நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்
http://i1087.photobucket.com/albums/..._000074296.jpg
Don't Miss It
படம்: தங்கைக்காக
வெளிவந்த ஆண்டு: 06.02.1971
தயாரிப்பு: ஜுபிடர் ஆர்ட் மூவிஸ் (திருமதி புளோரிடா பெர்னாண்டோ)
சண்டைப்பயிற்சி : திருவாரூர் தாஸ். உதவி-மணி மற்றும் காசீம்
http://i1087.photobucket.com/albums/..._000091296.jpg
நடிகர் திலகம் மோதும் வில்லன் : நம்பியார் மற்றும் ஸ்டன்ட் மென்.
இயக்கம்: D.யோகானந்த்
அதி வேகமான சுறுசுறு விறுவிறு சண்டைக்காட்சி .
http://i1087.photobucket.com/albums/..._000087736.jpg
நடிகர் திலகம் பங்கு பெறும் மற்றொரு அற்புதமான ஸ்டன்ட். தங்கை லஷ்மியை வில்லன் நம்பியாரின் கூடாரத்திலிருந்து காப்பற்றிக் கொண்டுவரும் சண்டை. சுற்றி மொய்க்கும் வில்லன்களுடன் சுழன்று சுழன்று நடிகர் திலகம் அவர்களைப் பந்தாடும் காட்சி. கண்ணாடி பிரேம்கள் கொண்ட தடுப்பு ரூமுக்குள் நடக்கும் வேகம் நிறைந்த சண்டை. வில்லனின் அடியாட்களை கைகளாலும், கால்களாலும் இடைவெளி இல்லாமல் விட்டு தாக்கும் அற்புதம். பார் விளையாட்டு போல பாரில் தொங்கிக் கொண்டே கால்களைக் கொண்டு உதைப்பார். பாரில் ஒரிஜினலாக தலைகீழாகத் தொங்கிக் கொண்டு கீழே உள்ள மொட்டைத் தலையனை அவன் மொட்டையிலேயே அறைந்து தள்ளுவார். பாரிலிருந்து கீழே குதித்து, எதிர்க்கும் இரு அடியாட்களில் ஒருவன் கழுத்தை லாவகமாகத் தாவிபிடித்து, கைகளால் சுற்றி வளைப்பார். அதே நேரத்தில் இன்னொரு அடியாளின் கழுத்தைக் கால்களால் பின்னுவார். கண்ணாடி பிரேம்கள் உடைந்து நொறுங்க, பீரோ சாய்ந்து கீழே விழ, படு வேகமான குத்துக்களை எதிரிகள் மீது பாய்ச்சுவார். லஷ்மியை இழுத்துக் கொண்டு படிக்கட்டுகளின் வழியே ஓடி வரும் போது தடுக்கும் அடியாளை கீழே படுத்தவாறு கால்களால் கிடுக்கிப் பிடி போட்டு அப்படியே தூக்கிக் கிடாசுவார். சர்வசாதரணமாக அதிவேகத் திறமையின் வெளிப்பாட்டில் நம்மை திக்கு முக்காட வைப்பார். இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப pause செய்து பாருங்கள். தெரியும்.
http://i1087.photobucket.com/albums/..._000158136.jpghttp://i1087.photobucket.com/albums/..._000073640.jpg
அதைவிட முக்கியமான வாயைப் பிளக்க வைக்கும் காட்சி இப்போது வருகிறது. தன்னைத் தாக்க வரும் மொட்டைதலை அடியாளின் இடுப்பை வளைத்துப் பிடித்து, படுக்கை வசத்தில் அவனை அப்படியே அலாக்காகத் தூக்கி, இடுப்பில் கிடுக்கிப் பிடி போட்டு, பக்கத்தில் இருக்கும் பில்லரில் அவன் மொட்டைத்தலையை மோதி மோதி எடுப்பார். (மேலே இடதுபுற ஸ்டில்லைக் காண்க) பார்க்கையில் அப்படியே சப்த நாடியும் ஒடுங்கி பிரம்மித்துப் போய் விட்டேன். அப்பாடி! என்ன ஒரு அனாயாசமான திறமை! அசகாய சூரத்தனம்!. என்ன ஒரு உடல் திறன்! அந்த அடியாள் எப்படியும் எண்பது கிலோ எடை கொண்டவராக இருக்க வேண்டும். அந்த ஆளை சர்வ சாதாரணாமாகத் தூக்கி தூணில் மோதுவார். இவரால் முடியாதது என்று எதுவுமே கிடையாதா?! ராட்சஷன்பா!
இதன் பிறகு தாக்க வரும் இரு ஆட்களையும் பக்கவாட்டில் இரு புறமும் பிடித்து, அவர்களின் கைகளை முறுக்கி கீழே பிரட்டி மண்ணைக் கவ்வச் செய்வார். பிறகு மெயின் வில்லன் நம்பியாரிடம் அருமையாக மோதுவார். அதில் தற்காப்புத் தடுப்புகளை அற்புதமாகச் செய்வார். கால்களாலும், கைகளாலும் மாறி மாறி அட்டாக் கொடுப்பார்.
நான் மூக்கின் மேல் விரல் வைத்த அற்புதமான சண்டைக்காட்சிகளில் இதுவும் ஒன்று. பல பர் மறந்திருக்கலாம். இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சண்டைக் காட்சியை அளிப்பதில் மிக்க பெருமிதம் எனக்கு. மறுபடியும் ஒரு அன்பு வேண்டுகோள். திரும்பத் திரும்ப மூன்று நான்கு முறை இந்த அட்டகாச சண்டையைக் காணுங்கள். முக்கியமான இடங்களில் pause செய்து பாருங்கள். இந்த சண்டைகாட்சியின் மகத்துவமும், தலைவரின் அசாத்திய திறமையும், அசுர உழைப்பும் மேலும் நமக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கும். எம்.எஸ்.வி. அவர்களின் ரீ-ரெகார்டிங் வேறு இந்த சண்டைக்காட்சிக்கு மேலும் வலு சேர்க்கும்.
நன்றி!
முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக
http://www.youtube.com/watch?feature...&v=9U6PYkGrqCU
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
வாசு சார்,
வினோத்துக்கு சமர்ப்பிக்க பட்ட இரண்டாவது சண்டைக்காட்சி(முதல் ஒன்று நானும் என் வில்லனும் மோதிய ஆக்ரோஷ சண்டை.வழக்கம் போல draw .) அருமை. எனக்கு பிடித்த சண்டை காட்சிகளுள் ஒன்று. எங்கிருந்துதான் பிடித்து இழுத்து வருவீர்களோ? நடிகர்திலகம் 80 களிலும் சில சண்டை காட்சிகளை நன்கு பண்ணியுருப்பார்.(நேர்மை)
எனக்கு கூட ஒரு சின்ன யோசனை இருக்கு.
வாரத்துக்கு ஒரு முறையாவது அதற்கான தேவை இருப்பதால் , தனியாக " ராகவேந்திரர் - கோபால் பஞ்சாயத்து திரி" என்று தனியாக ஒரு திரி ஆரம்பிக்கலாம் . ராகவேந்திரரும் கோபாலும் பிரச்சனை ஆரம்பித்ததும் அங்கே சென்று பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு வழக்கம் போல இங்கே தொடரலாம் .
எப்பூடி ? :)
எனக்காக '' தங்கைக்காக '' சண்டை காட்சியினைஅர்ப்பணித்த உங்களின் விரல்களுக்கும் - கண்களுக்கும் நல் இதயத்திற்கும் எனது கனிவான நன்றி .
MY FAVOURITE SONG
http://youtu.be/e1RW7HhNN68
FAVOURITE SCENE FROM SATHYAM
http://youtu.be/tTOYpVX7nBk
I find what Raghavendran says makes lot of sense. IT becomes a cliche discussing same KNOWN movies of NT. Ofcourse gopal, vasudevan and the likes do amazzzzzzzzing analysis throwing extrodinary dimensions of the character. I love such unbiased character analysis. But then there are movies which raghavendran mentioned, which probably ppl like me have not heard, atleast not known about NT's share there.
So lets travel side by side. Do take one movie at a time, a known one followed by unknwon rare one (even if its not so fantastic 80s runs) how about that?
P.s: I should say gopal, your view on characater analysis of paasa malar and mudhal mariyathai was TYPICAL DITTO of what I thought about the movie. My sympathy was fully with gemini and mn rajam for having married such a annan thangai duo. Vadivukkarasi in mudhal mariyathai a character who, probably my heart goes out for.
//ஆனால் நாட்டாமையாக முரளிதான் என் சாய்ஸ்.அவர்தான் தமிழ் சினிமா போலீஸ் மாதிரி சமர்த்தாக எல்லாம் முடிந்து ,நிதானமாக வருவார்.//
Nowadays theerpu would always be well balanced irrespective of who holds the naattamai post. ivarum sari, avarum sari....
idhuvum righttu athuvum righttu.
Having said a LOTTT more than needed, I take a break and quietly go back to the last seat / last bench to watch the show, let the presentation go on :wave:
All Friends,
Pl.Note that I gave a long list of movies for review yearwise wayback on 13th April ,2012 in 9th part.(Even today people can visit and verify.I am cutting&Pasting the same below) The choice of movies are not based on popularity or commercial success alone but acceptable and versatile to many sections of viewers. That time people made hue and cry but recently they came out with such list.(mainly Ragavendhar questioned my intension of making such selection created furor but yesterday he did the same by selecting some movies. Why this double standard favouring himself?) You can notice ,I have not excluded his after 1980 but limited the choice not to harm his greatness. Since,people are misreading my suggestions,I have to come out with my old list suggested for reviews. Ofcourse,it is only suggestion.(I did pick up quite a number of them and did justice)
1952- Parasakthi
1953-Thirumbi Paar
1954-Manohara,Andha Naal,Kalyam Panniyum Bramhachari,Thuli Visham,koondu Kili,Thooku Thooki,Ethirparadhadhu
1955-Mudhal thedhi,Mangayar Thilagam,Koteeswaran
1956-Naan petra Selvam,Nane raja,Pennin Perumai,Raja Rani,Amara deepam,Rangon radha
1957-Makkalai Petra Maharasi,Pudhayal,Manamagal Thevai
1958-Uthama Puthiran,Annaiyin Aanai,Sabash Meena
1959-Veera Pandiya Kattabomman,Maragatham,Aval yaar,Baga Pirivinai
1960-Irumbu Thirai,Deiva Piravi,Padikkatha Medhai,Pavai Vilakku
1961-Pava Mannippu,Pasa Malar,Ellam Unakkaga,Palum Pazhamum,Kappalottiya Thamizhan
1962-Parthal Pasi theerum,Valarpirai,Padithal mattum Podhuma,Bale Pandiya,Alaya Mani
1963-Arivali,Iruvar Ullam,Kulamagal Radhai,Paar magale paar
1964-Karnan,Pachai Vilakku,Andavan kattalai,Kaikadutha Deivam,Pudhia Paravai,Navarathri
1965-shanthi,Thiruvilayadal,Neelavanam
1966-Motor Sundaram Pillai,Mahakavi Kalidas,Saraswathi Sabatham,Selvam
1967-Kanthan Karunai,Pesum Deivam,Thangai,Paladai,Thiruvarutchelvar,Iru Malargal,Ooty Varai Uravu
1968-Galatta kalyanam,En Thambi,Thillana Mohanambal,Enga Oor Raja,Uyarntha Manidhan
1969-Thanga Churangam,Kaval deivam,Anjal Petti 520,Nirai kudam,Deiva Magan,Sivantha Mann
1970-Virtnam veedu,Ethiroli,Raman Ethanai ramanadi,Engiruntho Vanthal,Padhukappu
1971-Kulama Gunama,Sumathi En sundhari,Savale Samali,Thenum Palum,Babu.
1972-Raja,Gnana Oli,Pattikada pattanama,Vasantha maligai,Needhi
1973-Bharatha Vilas,Engal thanga raja,Gowravam,Rajapart Ranga Durai,Manitharil manickam
1974-Sivagamiyin Selvan,Thanga Padakkam,Anbai Thedi
1975-Avanthan Manithan,Anbe aruyire,Pattum Bharathamum
1976-Uthaman,Rojavin Raja
1977-Deepam,Ilaya Thalaimurai,Annan Oru Koil
1978-Andhaman Kathali,Thyagam,Ennai Pol Oruvan,General chakravarthi,
1979-thirisoolam,Kavarimaan,Naan Vazha vaipen
1980-Rishi Moolam
1981-Kalthoon,Lorry Driver rajakannu,Keez Vanam Sivakkum
1982-Hitler umanath,Vaa Kanna vaa,Thyagi,Thunai,Parikshaikku Neramachu
1983-Miruthanga Chakravarthi,Vellai Roja
1984-Vazhkai,Dhavaki Kanavugal
1985-Mudhal Mariadhai,Rajarishi
1986-Sadhanai,Marumagal,Anandha Kanneer,Viduthalai,Thaikku oru thalattu
1987-Anbulla Appa
1992-Thevar Magan,Chinna Marumagal,Naangal,
1996-Oru Yatra Mozhi
1997-Once more
1998-En Aasai Rasave
1999-Padayappa,Pooparikka Varugirom
Hope this clarifies my stand .
அப்போது ராகவேந்திரன் சாரின் பதிவு பின் வருமாறு....
Quote
டியர் கோபால்,
தங்களுடைய கருத்துக்களுக்கு என்னுடைய கண்டனங்களை கடுமையான முறையில் தெரிவிக்க விரும்புகிறேன். இத்திரியில் இதைப் போன்று எழுதி நானும் சிவாஜி ரசிகர் தான் என்று கூறி சிலர் முன்னர் எழுதி அவரை விமர்சிப்பதற்கு இந்தப் படங்களை கேடயமாக பயன் படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு சரியான பதிலடியை முன்னர் அளித்துள்ளனர் நம்முடைய நண்பர்கள். அவர்களுடைய பட்டியலில் தாங்களும் இணைந்து விட்டீர்களோ என்கிற ஐயத்தை தங்களுடைய கருத்து தோற்றுவிக்கிறது.
கிட்டத் தட்ட பாதிக்கு மேல் அவர் படங்களை நாம் ஒதுக்கி விட வேண்டும் என்பது போல் எழுதியுள்ளீர்கள்.
Unquote
இப்போது அவரே ஒரு லிஸ்ட் போட்டு முக்கால் வாசியை ஒதுக்கி விட்டார். தன்னுடைய சாய்ஸ் என்று. ஏன் அவரே அவரை contradict செய்கிறார்?நான் எது சொன்னாலும் எதிர்க்கிறார் என்பதை நான் அண்ணனாக மதிக்கும் பெரியவர் விளக்குவாரா?
பக்கம் 216 பதிவு எண் 2152 இல் அவர்(Ragavendhar sir)
(18/09/2013)தேர்ந்தெடுப்பாக அவர் கொடுத்தது 93 படங்களே. நான் தேர்ந்தெடுத்தது (13/04/2012) 147 படங்கள். அதிக படங்களை ஒதுக்கிய குற்றவாளி யார்? என்னை விட குறைவான நடிகர்திலகத்தின் படங்களை தேர்வு செய்து விட்டு என்னை மட்டும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி எவ்வளவு முறை அவமான படுத்தியுள்ளார்?
இன்று அவரே புகழும் இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடங்கு முன் அவர் செய்த அர்ச்சனைகள்...
இத்தனைக்கும் ஒரு வருத்தம் கூட தெரிவித்ததில்லை இது வரை. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் கோப படும் போது அவரை மதித்து வருந்தியுள்ளேன். தன்னை புனித பசுவாக அவர் நிலையுருத்த முயல்வதால் ,நான் தன்னிலை விளக்கமாக இதனை அளிக்கிறேன்.
Dear All,
This is not to point fingers at Mr.Ragavendhar but clarified my stance. I am willing to start with clean slate from today and not dragging it further.
Dear Mr.Ragavendran / Mr.Gopal
Both of you are Experts in Presenting and Analysing our Great Sivaji's acting and each and every moment of him and person like me enjoying like anything while wtching this. So dont get angry each one of you and plot your views without any gap. These kind of unwanted converstions affect the good journey of this thread.
Always expecting your views and analysis about NT'S films and not your fight
C.Ramachandran
Dear Sirs,though I am new to this thread ,i would like to have a suggestion.Since we all are ardent fans of NT,we all enjoy his acting irrespective of the outcome of a movie.Since,NT also dont know the outcome,irrespective of the story he would have given more than 100percent.But still to extent this to other people ,instead of discussing his films from the chronological order,let us start from the number of days the movie ran successfully.For eg the most number is 200days,then we start from it.By the time it comes to the poor movies (as per collection,not by acting)who knows something may happen that even we dont get a chance to discuss the bad ones.Thanks/regards
சுஹா ராம் ரொம்ப அள்ளி விட்டு கொண்டிருக்கிறார். இங்கே வந்து நடுநிலை பேசி விட்டு ஜோதியோடு கலந்தாயிற்று. இருக்கட்டும். பொன்னியின் செல்வன் சாண்டில்யன் எழுதிய கதையாம்!!!???(அது கல்கி கதை என்று ஒரு வயசு குழந்தை கூட சொல்லும்). சாண்டில்யனோடு பழகிய வரை ,அவர் பயங்கர சிவாஜி ரசிகர்.தன்னுடைய கதைகள் சிவாஜியின் நடிப்பில் படமாவதை விரும்பியவர். சிவாஜி நடித்த துளி விஷம்,பாதியில் படமாக்க பட்ட விட பட்ட
ஜீவ பூமி இவற்றின் கதாசிரியர்.
வாசு சார்
தங்கைக்காக திரைப்பட சண்டைக் காட்சி சரியான தேர்வு. சென்னை சாந்தியில் இப்படம் ஓடிய போது. ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் திலகம் தரும் ஒவ்வொரு அடி அல்லது குத்துக்கும் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். அந்த ஆரவாரம் வெள்ளிக்கிழமை பாடலின் போதே துவங்கி விடும். அதில் சாய்பாபா குரலுக்கு பர்மீஸ் மொழியைப் போன்ற பாடல் வரிகளை நடிகர் திலகம் வாயசைப்பில் மிகவும் அற்புதமான முகபாவம் காட்டுவார். பாடல் முழுதும் லுங்கி சட்டையில் அமர்க்களமான ஸ்டைல். அப் பாடல் முடிந்தவுடன் ஓரிரு நிமிடங்களிலேயே இச்சண்டைக்காட்சி தொடரும். அதனைத் தாங்கள் மிகவும் அணு அணுவாக பார்த்துப் பார்த்து அருமையாக அளித்துள்ளீர்கள். ஒரு முரடனை அடித்து விட்டு அதே வேகத்திலேயே யூ டர்ண் அடித்து மற்றொரு முரடனை அடிக்கும் வேகமும் லாவகமும் நடிகர் திலகம் திரைத்துறையில் எதிலுமே சளைத்தவரில்லை என்பதை நிரூபித்துத விடுகின்றன. அதே போல் அந்த மொட்டைத் தலையனை சுவற்றில் மோத வைக்கும் காட்சியும். இதுவும் சாந்தியில் பலத்த கரகோஷம் பெற்றது.
ஒவ்வொரு ரசிகனும் எதை ரசிப்பானோ அதை மிகவும் அருமையாக தேர்ந்தெடுத்து இங்கு வழங்கி இத்திரியில் தங்கள் பங்களிப்பின் மகத்துவத்தை நிரூபித்து விட்டீர்கள். இன்னும் பல பதிவுகள் இது போன்று தாங்கள் வழங்க வேண்டும்.
I second this........ enakku pidikkatha characters such as Deivamagan younger son, namma Gopal sir ku antha padathulaye romba pidicha character ah irunthathu......... so it just depends...athe pola I dont like Sivaji's roles in films such as Sivantha Mann , inga niraya pesapatta Raja et al... which i believe is more of a stereotype (imho of course)... I love his characters such as Babu, Gnana Oli, navarathiri (esp the forest officer [or is it police officer?]) and so on and on .... So there are so many unexplored areas of Sivaji sir's filmography which certain section of readers would be interested in nu ninaikaren
other than that, dont want to comment on the tussle happening here, as it is more like arguments between two professors, while most of us here are students just overlooking these and going on :)
கோபால் சொல்லமுயல்வதை நான் புரிந்து கொள்கிறேன். அதை நான் வழிமொழிகிறேன். எந்த ஒரு கலையும் உச்சம் தொட முயலும்போது அது ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள் கணக்கிட முடியாதவாறு காலச் சக்கரத்தில் சிக்கிச் சிதறாது தொடர்ந்து நம்மை பல தளங்களில் திருப்தி படுத்திக் கொண்டே இருக்கும். ஒரு செவ்வியல் தன்மையை அடைந்துவிடும் அதுபோன்ற சிவாஜி படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அதை தானும் பகுப்பாய்வு செய்து, மற்றவர்களையும் பகுப்பாய்வு செய்யத் தூண்டும் ஒரு மெழுகு வர்த்தியாகவே கோபாலைப் பார்க்கிறேன். ரசனைத் தளத்தில் மேலெழும்பிக் கொண்டே இருக்க முயல்கிறார், நம்மையும் அங்கிருந்து தூக்கிவிட முயன்று கொண்டே இருக்கிறார். அதற்கு சரியான தீனி கிடைக்காத பட்சத்தில் சினம் கொள்கிறார். அச்சினத்தை நாம் பொருட்படுத்தாது ஆரோக்யமாக விமர்சனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாமும் முன்வர வேண்டும்.
இன்று வழக்கம் போல வேலைக்கு சென்று வரும்போது ரோட்டில் 100வது வருட இந்திய சினிமா cutout பார்க்க நேர்ந்தது. அதில் வழக்கம் போல நம் நடிகர் திலகத்தின் படம் இருட்டடிப்பு. சிரிப்புதான் வந்தது அதை பார்க்கும்போது.
இப்படி ஒரு பயந்தாங்கொள்ளிகள், நடிகர் திலகத்தின் படத்தை போட்டால் எங்கே மவுசு இன்னும் கூடிவிடுமோ என்ற குளிர்ஜுரத்தில் நடிகர் திலகத்தின் படத்தை போடாமல் அதே நேரத்தில் புதுமை இயக்குனர்கள் என்று திரையுலகை ஆக்ரமித்தவர்களின் தரமில்லாத படங்களின் ஹோர்டிங் (HOARDING) என்னமோ சாதனை படங்கள் போல போட்டிருக்கிறார்கள் மூடர்கள். என்னமோ இந்திய திரைவானின் மைல்கல் படங்கள் போல ஒரு பாவ்லா, ஒரு போலி சித்தரிப்பு..! அய்யோபாவம் ! இவ்வளவு தரம் தாழ்ந்திருக்கவேண்டாம் !
இவர்களுக்கென்ன தெரியும் ? பொய், பித்தலாட்டம், உண்மையை இருட்டடிப்பு இதுதானே ? Such a mean minded fellows ! அவருடைய பெயரை, புகழை மறைத்ததாக இவர்கள் நினைகிறார்கள். இதில் இவர்கள் பெயர் தான் மேலும் கெட்டு போகிறதென்று இந்த மடையர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் நடுநிலையாக இந்திய சினிமாவின் 100ஆம் ஆண்டு விழா என்றால் அதற்க்கு தகுந்தாற்போல எல்லா நடிகர்களின் படங்களையும் போட்டிருக்கவேண்டும். மேலும் நல்லதிரைப்படங்களான கல்யாண பரிசு, சிவகங்கை சீமை, சம்பூர்ண ராமாயணம், பட்டணத்தில் பூதம், நெஞ்சில் ஓர் ஆலயம், தேன் நிலவு மற்றும் பல படங்களின் HOARDING இவர்களுக்கு வைக்க தெரியவில்லை. நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை கலாட்டா கல்யாணம் திரைப்படத்தை சம்பந்தமே இல்லாமல் எதற்கு போட்டார்கள் என்று புரியவில்லை. 1952இல் வந்த பராசக்தி, அல்லது அதற்க்கு பின்னர் வந்த மனோஹரா அல்லது இரட்டை வேட புதுமை படைப்பு உத்தம புத்திரன் அல்லது அந்த நாள் இப்படி திரைப்படங்களை போட்டிருக்கலாம்.
என்னமோ ஏனோ தானோ என்று கேட்பதற்கு ஆள் இல்லை என்றால் எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற எண்ணம். ஏற்கனவே நிறைய பேர் பேச தொடங்கிவிட்டார்கள். என்னப்பா கர்ணன் தவிர கட்டபொம்மன், திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற கலர் படங்களை போடவில்லை ...இவனுங்க வேணும்னே பண்றாங்கப்பா என்று..!
கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்துதான் தீரும். உண்மை என்றிருந்தாலும் திரும்ப ஒரு அடி அடிக்கும் அப்போது தெரியும் உண்மையின் வலிமையை.
இனிய நண்பர் நெய்வேலியார் அவர்கள் கைவண்ணத்தில் உயிர் பெற்ற நான் வாழ வைப்பேன் திரை ஒலி ஒளி கண்ணோட்டம் YOUTUBE இல் 2437 இதுவரை கண்டுகளித்துள்ளார்கள் என்பதை பெருமையுடன் கூற கர்வபடுகிறேன். !
நன்றி நெய்வேலி வாசுதேவன் சார் !
http://www.youtube.com/watch?v=BCl0pss-9zY#t=55
நம் வாசுவின் தேர்வு அலாதி. அபாரம். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நிறைய shot சிவாஜி நடித்து கொண்டிருந்த நேரம்.அப்படியே ஒன்றிரண்டு ஷாட் duel வந்தாலும் ,அவரோடு அடுத்த ஷாட் merge ஆகி உறுத்தல் வராமல் நடிகர்திலகம் நடிக்கும் பாங்கு. நாலு பேரை சுறன்று தாக்கும் லாவகம்,கம்பியில் தொங்கும் ஷாட் ,பயில்வானை தூக்கி தூணில் மொத்தும் ஷாட், என்ன ஒரு இளமை சுறுசுறுப்பு.
இன்றைய டெக்னாலஜி ,கேமரா இவைகள் சண்டை காட்சிகளை மனித முயற்சிக்கு மீறியதாக கம்ப்யூட்டர் கேம்ஸ் போல ஆக்கி விட்டன.
வாசு ,
நான் வாழ வைப்பேன் ஒரு neat professional presentation . மிக அழகாக தொகுத்து, வெட்டி,சுவாரஸ்யம் கூட்டி உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
சுப்பு,
நான் வாழ வைப்பேன் வெற்றி பெற்று வீடு நிறைய பொருள் குவிந்து,அடுத்த முறை ஊருக்கு வரும் போதாவது ட்ரீட் கொடு.(நான் என்ன பெரிசா கேக்க போறேன் ராகவேந்தர் சார் பேட்டையில் ரத்னா கபே போண்டா,இட்லி,காபி.)
வெங்கி ராம்,
தங்கள் பதிவுகளை படித்ததும், எனக்கு சிறிதே கண்கள் கலங்கி விட்டன. என்ன ஒரு மாயம்?? என் ரசனை மனத்தை பிரதிபலித்த கண்ணாடி. நான் என் சிறிய வயது முதலே புரிந்து கொள்ள படாத மனிதனாகவே இருந்து வந்துள்ளேன். வயதுக்கு மீறிய பக்குவமும்,ரசனைகளும்,பல முடிச்சு சிக்கல்கள் கொண்ட கட்டுடைக்கும் மன நிலையும்,எனக்கு தொடர்ந்த மன உளைச்சலை மட்டுமே கொடுத்துள்ளது. உங்களுக்கு என் பிரத்யேக நன்றி.நண்பர்கள் இதை எப்படி புரிந்து கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே.