திரு கோபால் அவர்களின் ஹரிச்சந்திரா ஒரு பார்வை மதனின் திரைபார்வை விஞ்சி விட்டது .
Nt அவர்களின் ரசிகர்கள் கூட மிக சிறந்த கலைஞர்கள் என்பதை நிருபித்து விட்டது
வாழ்க தமிழ் வளர்க சிம்ம குரலோன் புகழ்
Printable View
திரு கோபால் அவர்களின் ஹரிச்சந்திரா ஒரு பார்வை மதனின் திரைபார்வை விஞ்சி விட்டது .
Nt அவர்களின் ரசிகர்கள் கூட மிக சிறந்த கலைஞர்கள் என்பதை நிருபித்து விட்டது
வாழ்க தமிழ் வளர்க சிம்ம குரலோன் புகழ்
கவிஞர் வைரமுத்து அவர்கள் உடன் nt போட்டோ மிக அருமை (அன்புள்ள அப்பா என்று நினைக்கிறன் சரியா)
ஒரு சாயலில் ஷோபன் பாபு போல் தோற்றம். அன்புள்ள அப்பா திரைப்படத்திற்கு கல்கியின் விமர்சனம் நினைவிற்கு வருகிறது
"பிறவி கலைஞன் ஐயா "
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தெய்வப்பிறவி மற்றும் ஹரிச்சந்திரா படங்களைப் பற்றிய உங்களுடைய சுருக்கமான, ஆனால், அழகான ஆய்வு பிரமாதம்.
குறிப்பாக, தெய்வப்பிறவி. ஒரு கட்டிட மேஸ்திரியின் பாத்திரத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எந்த வித பிரத்தியேக ஒப்பனையுமின்றி, அவருடைய அசல் சுருள் முடியை சரியாகச் சீவாமல் வெறுமனே விட்டு, மீசையை மட்டும் ட்ரிம் செய்யாமல் விட்டு, அசல் மேஸ்திரி போன்றே தோற்றமளித்திருப்பார்.
அன்பாலே தேடிய என் - பாடலில் மிக மிக இயல்பாக நடித்திருப்பார். இன்று சொல்லப்படும் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் நடிகர் திலகம் - பத்மினி ஜோடியிடம் அற்புதமாக மிளிரும்.
இந்தப் படத்தைப் பற்றி மேலும் விரிவாக அலசலாம்.
ஹரிச்சந்திரா - திரு. வாசுதேவன் அவர்கள் பதிந்திருந்த பல புகைப் படங்களைப் பார்த்தால், இந்தப் படம் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எடுத்திருப்பது நன்றாகப் புலனாகும். அப்படியென்றால், ஒரு காட்சிக்கும் அடுத்து வருகிற காட்சிக்கும் தொடர்பு ஏற்படுத்துவது எவ்வளவுக் கஷ்டம்? அதையும், மிக அழகாக செய்திருப்பாரே நடிகர் திலகம். மற்ற கலைஞர்களும் நல்ல ஒத்துழைப்பை நல்கியிருப்பார்கள்.
அருமையான ஆய்வு. தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள கிருஷ்ணா ஜி,
நீண்ட நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். அசத்துங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
dear Raghavendra, Murali sir
Why vasudevan and pammalar are not writing nowdays
regarrds
kumar
Best of Sivaji - Padmini duet IMO is "madhavi ponmayilaal" song, oruthar nadippu expressions, mannerism la kalakkirupar na, innoruthar dance la asathiruppar (also her expressions particularly when Sivaji's character tries to come too closer for her comfort)....... music, dance and acting would have complemented each other perfectly......... it is a chanceless song........
Pammalaar sir ,
உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் என்னை என் சிறு வயது ஞாபகத்துக்கு கை பிடித்து அழைத்து செல்கிறது.நான் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் பெரும் ரசிகன்.Vietnaam வீடு சம்பந்த பட்ட பதிவுகள் ஒரு விலை மதிப்பில்லா ரத்னம்.பொக்கிஷம்.என்னை இந்த ஹப் இல் போதை கொள்ள செய்ததில் பெரும்பங்கு உங்களுடையதே.நீங்கள் சேகரித்ததை பலன் கருதாமல் தரும் மனம் பொன் போன்றது.உங்களுடன் நான் பேசிய நேரங்கள் விலை மதிப்பிலா வாழ்வின் நிமிடங்கள்.உங்களின் நலம் வேண்டி பிரார்த்திக்கும் உங்கள் ரசிகன்.
உங்கள் நலம் நாடும்,
கோபால்
krishnaji,
welcome back after a long gap.It is refreshing to have you with us.
Parthasarathy Sir,
Nanri.We are on the same boat in pick of films.
நண்பர்களே,
மிக நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த திரைக் காவியம், பரீட்சைக்கு நேரமாச்சு, தற்பொழுது நெடுந்தகடாக வெளிவந்துள்ளது.
http://i872.photobucket.com/albums/a...aidvdcover.jpg
இத்திரைப் படத்தில் நெஞ்சைத் தொடும் சிறந்த காட்சி. ஆச்சார அனுஷ்டானமான அந்தணர் குடும்பத்தில் தன் மகனைப் போலவே காட்சியளிக்கும் ஆனந்தைத் தன் மனைவியின் மன நிம்மதிக்காக வசிக்க வைத்து, புலால் உண்பவனான அவனுக்காக மிகுந்த தர்ம சங்கடத்துடன் புலால் அங்காடியின் வாசலில் நின்று அவன் விரும்பிய உணவைப் பொட்டலமாக வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து அவனுக்குத் தரும் இக்காட்சி நடிகர் திலகம் எந்த வயதிலும் தன் நடிப்பில் தன்னுடைய திறமையை நிலைநாட்ட முடியும் என்று நிரூபித்த காட்சியாகும். குறிப்பாக அந்தப் பொட்டலத்தை குடைக்குள் மறைத்து வருவதும். சூதக மந்திரத்தை சொல்லிக் கொண்டே ஸ்நானம் செய்வதும், பின் அவன் மனம் வருந்தும் போது அவனைத் தேற்றுவதும்...
ஒரு நிஜமான அய்யங்கார் எப்படி உணர்வார் என்பதை நிரூபித்த காட்சி..
சூப்பரோ சூப்பர்...
அந்தக் காட்சியைக் காணுங்கள்.
http://youtu.be/BPsRQnqMc64
இக்காட்சி நம்முடைய நடிகர் திலகம் திரியின் முந்தைய பாகத்தில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் மீண்டும் தரப் படுகிறது.
இக்காட்சி நம் கோபால் சாருக்கு சமர்ப்பணம்.
மீண்டும் தங்கள் பதிவை அளித்த கிருஷ்ணாஜி அவர்களே, வருக ... வருக...
டியர் ராகவேந்தர் சார்,
தங்களின் பரீட்சைக்கு நேரமாச்சு நெடுந்தகடு பற்றிய தகவல் மற்றும் காணொளி அற்புதம், தாங்கள் குறிப்பிட்டது போல் ஒரு நிஜமான அய்யங்கார் கூட இந்த அளவுக்கு செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே?
டியர் கோபால் சார்,
தங்களின் தெய்வபிறவி மற்றும் ஹரிச்சந்திரா திரைப்பட ஆய்வு அற்புதம்! அதிலும் தாங்கள் கீற்று கொட்டகையில் படம் பார்த்த அனுபவத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள், நானும் நம் தெய்வத்தின் பல படங்களை கீற்று கொட்டகையில் தான் பார்த்திருக்கிறேன்.
Was casually browsing the channels and stopped for a while to see a bit of "Thirudaadhe" in KTV. The scene I saw was a comedy scene involving KAThangavelu as he was being chased around by a Pathani outside a tea stall.. The wall behind made for a very interesting viewing.. There were two movie posters stuck side by side. One was Chakravarthi thirumagan showing a swashbuckling MGR wielding a sword- full size.. The next one on its side was that of "Ambikaapathy". Now what do we expect - a full image of Sivaji on it - right? Bang - Wrong. It had Bhanumathi full size..
I was like - that was strange and watched the scene on for a while...
Another wall and another set of posters - This time it was chakravarthi thirumagan with Anjali Devi's face prominently - along side there was Ambikapathi poster and what did i expect? Sivaji - full size? right?
Got you.. WRONG...
It was NS Krishnan, TA madhuram and some other side actors...
I was like.. wow - ivvlo deeppaa politicsaa appavevaa????
VELANGIDUM..
சகோதரர் வாசுதேவன்,
தங்களின் பாராட்டுதல்களுக்கும், புகழுரைகளுக்கும் நன்றிகளைத் தெரிவிக்க எனக்கு இந்த ஜென்மம் மட்டும் போதாது.
தாங்கள் வழங்கிய விஷூவல் பதிவுகளான மதுரை 'மதி'யில் நடைபெற்ற "கர்ணன்" 25வது நாள் விழாக் கொண்டாட்ட புகைப்படங்கள் [இதற்கு தங்களது சகோதரியின் கணவருக்கு ஸ்பெஷல் நன்றிகள் !] மற்றும் சென்னை 'ஏவிஎம் ராஜேஸ்வரி'யில் கொண்டாடப்பட்ட 25வது நாள் விழா வீடியோ முதலியவை பாராட்டுக்களுக்கும், நன்றிகளுக்கும் அப்பாற்பட்டவை.
பெருந்தன்மையில் நடிகர் திலகத்தின் மறுவடிவம் தாங்கள் என்பது அறிந்த ஒன்று. கடுங்கோபத்தில் துர்வாசரும்-பரசுராமரும் தங்களிடம் தோற்றோடிவிடுவார்கள் போலிருக்கிறதே ! தங்களின் இதயம் 'அன்பு' என்னும் ஊற்றுப்பெருக்கால் நிறைந்ததல்லவா !
"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனச பாத்துக்க நல்லபடி உன் மனச பாத்துக்க நல்லபடி"
இந்த வைரவரிகளை நினைவில் நிறுத்துங்கள், வருத்தங்களை விலக்குங்கள், திரிக்கு திரும்புங்கள்.
ஒரு அருணோதயத்தை நாங்கள் காண்போம் !
"காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு"
என்கின்ற "ராஜா" பாடல் வரிகளைப் பாடிக்காட்டி பம்மலார் ஆகிய எனக்கே 'அல்வா' கொடுக்கக் கூடாது.
அல்வா என்றவுடன் நினைவுக்கு வருகிறது,
திரிக்கு சில தினங்களாக இதுபோன்று 'அல்வா' கொடுத்தது போதும், எப்பொழுதும்போல் நிஜமான இனிப்பு 'அல்வா' கொடுக்க வீறுகொண்டு வாருங்கள் !
இது ஆண்டவன் கட்டளையோ, அரசகட்டளையோ அல்ல, உங்கள் பம்மலாரின் பாசக்கட்டளை !
உரிமையுடன்,
உங்கள் இளைய சகோதரன்,
பம்மலார்.
டியர் கோபால் சார்,
தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், இதயபூர்வமான பாராட்டுக்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள் !
"தெய்வப்பிறவி", "ஹரிச்சந்திரா" திரைக்காவியங்களின் ஆய்வுகள் சுருக்கமாகவும், சுவையாகவும், சிறப்பாகவும் உள்ளன. பாராட்டுக்கள் !
முதல் ஆய்வை எனக்கும், அடுத்த ஆய்வை நமது சகோதரர் நெய்வேலியாருக்கும் அர்ப்பணம் செய்த தங்களின் பெரிய மனதுக்கு பவித்ரமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் கிருஷ்ணாஜி,
Welcome Back !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
"பரிட்சைக்கு நேரமாச்சு" நெடுந்தகடு வருகை நெஞ்சுக்கு களிப்பூட்டுகிறது. வெகு நாட்களாக எதிர்பார்த்தது அல்லவா ?! தகவலுக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
நான் வணங்கும் தெய்வம்
[12.4.1963 - 12.4.2012] : பொன்விழா ஆண்டின் தொடக்கம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 12.4.1963
http://i1110.photobucket.com/albums/...GEDC5684-1.jpg
குறிப்பு:
தென்னகமெங்கும் 12.4.1963 வெள்ளியன்று வெளியான இக்காவியம், சென்னையில் மட்டும் 27.4.1963 சனிக்கிழமையன்று வெளியானது. [அரங்குகள் : காஸினோ, ஸ்ரீகிருஷ்ணா, உமா].
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
கலாட்டா கல்யாணம்
[12.4.1968 - 12.4.2012] : 45வது ஆண்டு கொண்டாட்ட தினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5685-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 20.7.1968
http://i1110.photobucket.com/albums/...GEDC5686-1.jpg
குறிப்பு:
1. 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : சென்னை - சாந்தி[106 நாட்கள்] மற்றும் கிரௌன்[106 நாட்கள்].
2. சென்னை [சயானி]யில் 77 நாட்களும், மதுரை [ஸ்ரீ மீனாக்ஷி]யில் 70 நாட்களும் மற்றும் திருச்சி, சேலம், கோவை போன்ற மாநகரங்களில் ஒவ்வொன்றிலும் முறையே 70 நாட்களும், ஏனைய பல ஊர்களின் அரங்குகளில் 56 நாட்களும் ஓடிய இக்காவியம் ஒரு சூப்பர்டூப்பர்ஹிட் காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.
Pammalaar Sir,
Now only thread is again back to full throttle.What ever we write,your stills are like kumkumam for the women.It attains full grace only after this Galatta Padhivu.
Grand welcome to pammalar sir. hope vasu sir will be back very soon and we wish for the same. all nadigar thilagam fans should be united and do our small contributions regularly. many more KARNANS are expeccted in big screens
long live NADIGARTHILAGAM FAME AND GLORY.
GREETINGS TO ALL HUBBERS.
சாந்தி- 1965
ஒரு சிக்கலான முக்கோணம்.அது வரை பழைய காதலன் (அ) காதலி ,கணவன்(அ) மனைவி ,மனைவியான காதலி (அ) கணவனான காதலன் என்று பயணித்த பாதையில் புத்தம் புதுசாக இன்னொரு கல்யாணமான பெண்ணிற்கு கணவன் போல் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும் நண்பன்.
பீம் சிங் இன் பா இல்லாத அறுபதுகளின் படம்.நிறைய சென்சர் பிரச்னையுடன் வந்து ஹிட் ஆன நல்ல படம்.சிவாஜி சுமாராக இளைக்க ஆரம்பித்து
கற்றை முடி நெற்றியில் புரள(பின்னாளில் ரவி இதை நிறைய படங்களில்)புரள கியூட் ஆக இருப்பார்.எனக்கு மிக மிக பிடித்த சுசிலாவின் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடலும் ,மிக மிக பிடித்த டி.எம்.எஸ். இன் யாரந்த நிலவு பாடலும் இடம் பெற்ற காவியம்.
கம்பி மேல் வித்தை போன்ற கதைக்கு நல்ல திரைகதை அமைத்து (லாஜிக் மீறல் ஏராளம்)பீம் சிங் நன்கு இயக்கி ,ஏ.எல்.எஸ். தயாரிப்பு. விஸ்வநாதன் -ராமமூர்த்தி அருமையான இசை.காமெரா ரொம்ப சுமார் (நிறைய இடங்கள் வெளிரும்).Seperation lighting மிக மோசம்.
உற்சாகமாய் நண்பர்களுடன் வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆரம்பித்து ,சீராக சென்று ,உணர்ச்சி கொந்தளிப்பில் ,இடை வேளை க்கு பிறகு சூடாகவே செல்லும்.தேவிகா உடன் மெல்லிய காமம் ததும்பும் நெஞ்சத்திலே காதல் காட்சி எனக்கு பிடித்த ஒன்று.அதில் ரெட்டை பின்னலை பிடித்து முகத்தோடு இழைவார் பாருங்கள்.காமத்தில் தோய்ந்த கவிதை.அம்மாவிடம் தனது காதலை கொஞ்சம் வெட்கம்,நிறைய ஆசை,சிறிது தயக்கம்,சிறிது எதிர்பார்ப்பு,சிறிது பரபரப்பு என்ற நடிப்பு கும்பமேளா ஒரு இடம் என்றால், யார் இந்த நிலவில் டி.எம்.எஸ் ஐ விழுங்க துடிக்கும் பாவங்கள். மனசாட்சி காட்சி(உபயம் தஞ்சை வாணன்)நடிகர் திலகத்தின் favourite காட்சி.அருமையாய் நடிக்க வேண்டிய இடத்தில் நடித்து அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி -இனிமேலும் உங்களுக்கு விளக்க என்ன இருக்கிறது? எஸ்.எஸ்.ஆர். எப்போதும் போல் நல்ல சப்போர்ட்.தேவிகா தான்
ஏ.பீ.என் படத்து கே.பீ.எஸ். போல் வந்து வந்து மாயமாகி விடுவார்.விஜயகுமாரி கு நானும் ஒரு பெண், பூம்புகார் வரிசையில் மற்றுமொரு முக்கிய படம்.ஆனால்........ எனக்கு என்னவோ விஜயகுமாரியை அசோகன் இன் பெண் உருவாகவே தெரியும்.என்ன உணர்சிகளை காட்டினாலும் செயற்கையான அருவருப்பை மூட்டி ,காமெடி ஆக தெரியும்.அவரை எஸ்.எஸ்.ஆறே விரும்பி இருப்பாரா என்பது சந்தேகம்.இந்த படத்தில் ஓரளவு தேறுவார்.மற்றவர்கள் எம்.ஆர்.ராதா உட்பட வழக்கம் போல்.முடிவு எதிர்பார்த்தது.மக்கள் ஏற்றார்கள்.
பார்க்க வேண்டிய படம் என்பதை விட பார்க்க கூடிய படம் என்றே நான் தீர்ப்பு சொல்வேன்.
Ragavendar Sir,
I know you are making a dig at me by attributing the video parikshaikku neramachu.Pl.look at my shortlist on page 279-article No 2784.This movie is figuring in the list.
Friends,
One of you can take it to index all the articles,documents,stills by name or subject for easy access of old articles.This is only my humble suggestion.The index should serve as reference by page/article no.
இரும்பு திரை-1960
முதல் முதலில் தொழில் சார்ந்த தொழிலாளர் பிரச்னையை வலுவாக அக்கறையுடன் சொன்ன வர்த்தக படம்.ஹிந்தி,தமிழ் இரண்டிலும் தயாரிக்க பட்ட ஜெமினி நிறுவனத்தாரின் முதல் சிவாஜி படம்.(உறவு சரியாக இல்லாததால் வாசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் முயற்சிக்கு சிவாஜி ஒத்துழைக்காமல் பிறகு வாசன் கை விட்ட பிறகு பந்துலுவிற்கு கை கொடுத்தார் என்று கேள்வி).ஹிந்தியில் திலிப் ,இரண்டிலும் வைஜயந்தி.ஹிந்தி மிக நன்றாகவும்,தமிழில் சுமார் நன்றாகவும் ஓடியது.வாசன் இயக்கம்.ஜெமினி கதை இலாக்காவின் (முக்கியம் தில்லானா மூல கதாசிரியர் சுப்பு)
நல்ல திரைகதை,வெங்கட்ராமன் இசை(ஷன்முகப்ரியாவில் கண்ணில் குடியுருக்கும் )என்று ஜெமினி யின் நல்ல முயற்சி.திலிப் இதன் மூலம் சிவாஜியின் சுமார் நண்பர் ஆனார்.(இன்றும் சிவாஜியை மிக நல்ல நடிகர் என்று புகழ்வார்)
தொழிலாளர் சங்க தலைவர் சிவாஜி,முதலாளி விசுவாசி சுப்பையா அண்ணா,முதலாளி மகள்-தொழிலாளி காதலி(முதலாளி மாஜி காதலி மகள்) -சிவாஜி என ஒரு முக்கோண காதல்,தங்கவேலுவின் சகிக்க முடியாத காமெடி என போகும் மிக நீஈண்ட படம்.பின்னாளில்(1971) மல்லியம் ராஜகோபால் சார் இதே மாவை மேலும் சுவையான பணியாரம் ஆக்கினார் சவாலே சமாளி என்று.முக்கோணம் தவிர்த்து திருநீலகண்டர் கதை ,நல்ல தங்கை,தங்கையின் முரட்டு கணவன்,நல்ல வில்லன் கம் காமெடியன் என்று நல்ல வெற்றி பெற்றார்.
இரும்பு திரையின் நான் மிக மிக ரசித்த சிவாஜியின் காதல் காட்சி(யதார்த்த நடிப்பின் உச்சம்) ஒன்று.வைஜயதியிடன் செல்லமாக தன் கன்று காதலை சொல்லும் இடம்/.அருமையான கெமிஸ்ட்ரி வைஜயந்தி உடன்.(இந்த ஜோடி நிறைய சேர்ந்து நடித்திருக்கலாம்)அதே போல் நிர்வாகத்தின் ஆட்டு மந்தை புத்தியை சுட்டி காட்டி இந்திய பொறியியல் ஆளர்களிடம் நம்பிக்கை வைக்க சொல்லும் இடம் அருமை.எதிர்பார்த்த திசையில் பயணித்தாலும்
நன்றாக எடுக்கப்பட்ட படம்.கிளைமாக்ஸ் ,வைஜயந்தி தீ பந்தத்துடன் என்று ஞாபகம்.(ச.ச. வில் விஜயகுமாரி அதே தீ பந்தம்)இரண்டிலும் சிவாஜி பழி ஏற்பார்.சரோஜா தேவி கொஞ்சம் டம்மி.ரங்கராவ் நல்ல நடிப்பு வழக்கம் போல்.
படத்தை சிவாஜி கொஞ்சம் இழுத்தடித்தார் என்று கேள்வி.ஆனால் ஜெமினி நிறுவனம்-சிவாஜி உறவு மோட்டார் சுந்தரம் பிள்ளை,விளையாட்டு பிள்ளை என தொடர்ந்தது.வாசன் பிறகு ஏ.வீ.எம் முடன் ஒரு மேடையில் சிவாஜி உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பேசினார்.
சிவாஜி அருமையாக தன் இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார்.தூய தமிழ் ரொம்ப உறுத்தாது.
நல்ல படம்-தமிழில் குறிப்பிடத்தக்க முயற்சிகளுள் ஒன்று.தொழில் நகரம் கோவையில் வெள்ளி விழா கண்டது.
MUTHTHUKKAL MOONDRU
http://i1074.photobucket.com/albums/...ntitled-10.jpg
GOD OF CINEMA
http://i1074.photobucket.com/albums/...Untitled-8.jpg
Welcome back pammalar sir
regards
kumareshanprabhu