-
18th April 2012, 02:56 PM
#11
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
நடிகர் திலகத்தின் "வணங்காமுடி" நூறு நாட்களைக் கடந்த படம் தான் என்று, சான்றுடன் பதிவிட்ட உங்களுக்குக் கோடி நன்றிகள்.
பல வருடங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் நடிகர் திலகத்தின் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்து கொண்டே இருந்தது. அது, ராஜா ராணி படங்களைப் பொறுத்தவரை, அவருடைய படங்கள் ஓடாது என்று. எதை வைத்து, இப்படி அவர்கள் எழுதினார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு சில படங்கள், சாரங்கதாரா, ராணி லலிதாங்கி போன்ற படங்கள் ஓடாததை வைத்தும், மாற்று முகாமில், அந்த வகைப் படங்களை (மிகச் சில என்றாலும்) மட்டுமே நடித்து வெளி வந்ததாலும் இருக்கலாம். அங்கு 1961 -லிருந்து தான் வேறு வகைப் படங்கள் வரத் துவங்கியது.
தூக்குத் தூக்கி, மனோகரா, தெனாலி ராமன், வணங்காமுடி, உத்தம புத்திரன், சம்பூர்ண இராமாயணம், வீரபாண்டிய கட்டபொம்மன் (சிகரம் தொட்ட வெற்றி!), கர்ணன், என்று எத்தனை வெற்றிப் படங்கள்! எதை வைத்து விகடன் இதழ் இப்படி எழுதினார்கள் என்பது இன்று வரை புரியாத புதிர் தான்!!
பல நாட்கள் வணங்காமுடியும் கர்ணனும் நூறு நாட்களைத் தொடாத தோல்விப் படங்கள் என்று எத்தனை பேர் வாதிட்டுக் கொண்டிருந்தனர். ஆவணங்களுடன் அவர்கள் வாயை அடைத்த உங்களுக்கு மறுபடியும் கோடானு கோடி நன்றிகள்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 18th April 2012 at 03:03 PM.
-
18th April 2012 02:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks