-
30th January 2013, 05:35 PM
#11
Junior Member
Veteran Hubber
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் - உன் அழகுக்கு ஒருத்தி துணை வருவாள்
இந்த அழகு ஒன்று போதும் - நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய - புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க - பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை.
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான் - நல்ல அழகன் என்பேன், நல்ல அழகன் என்பேன்
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா - அழகன் நீதான் - நீதான் - நீதான் என்று அடிக்கட்டுமா
தன்னை நாடும் காதலன் முன்னே - திருநாளை தேடிடும் பெண்மை
இப்படி, நம் மக்கள் திலகத்தை வர்ணித்து பல பாடல்களை பல்வேறு கவிஞர்கள், பல கால கட்டத்தில் எழுதினாலும் அதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொண்டதும், ஒப்புக்கொண்டதும், ரசிகர்களும் பொது மக்களும் தானே.
உலகத்திலேயே அழகான ஒரு நடிகர் உண்டென்றால் அது எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டும் தான் - இப்படி சொன்னது பிரபல
நடிகை C.I.D. சகுந்தலா (2011ல் நடந்த சென்னையில் நடந்த திருடாதே 50 வது ஆண்டு கொண்டாட்ட விழாவில்)
படகோட்டியில் நமது எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். அவர்களின் அழகான தோற்றத்தை கண்டு, இதே போன்று கருத்தினை அப்போதே தெரிவித்தவர் 1000 படங்களில் நடித்துள்ள நடிகை மனோரமா.
எந்த ஒரு நடிகரும் காதல் காட்சியில் நடிக்கும்போது நாயக-நாயகியர் ஆகிய இருவரின் பாவனைகள் ரசிக்கப்படும். . ஆனால், நம் அழகுத்தேவன் எம்.ஜி. ஆர். அவர்கள் மட்டும் காதல் காட்சியில் நடிக்கும்போது அவரது நடை, உடை, பாவனைகள் மற்றும் STYLE இவைகளை கண் கொட்டாமல், பெரும்பாலான ஆண் ரசிகர்கள் ரசிப்பர். இந்த அற்புத சாதனை அவர் ஒருவருக்கே உரித்தானது. ஆண்களே பார்த்து பொறாமைப்படும் அழகு படைத்தவர் எம்.ஜி.ஆர். என்று அந்த கால கட்டங்களில் அழைக்கப்பட்டவர்.
வரலாற்று நாயகனின் அழகிய தோற்றம் கொண்ட சில நிழற் படங்கள் கீழே :





அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
30th January 2013 05:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks