-
30th January 2013, 05:38 PM
#11
Senior Member
Diamond Hubber
அனைவருக்கும் வணக்கம். மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்களுக்கு இதய தெய்வம் நடிகர் திலகத்தின் பக்தனின் அன்பு கலந்த வணக்கங்கள். சற்று வேலைப்பளுவின் காரணமாக சில மாதங்கள் திரிக்கு வர இயலவில்லை. ஆனால் வினோத் சார் மட்டும் அடிக்கடி என்னிடம் தொலை பேசியில் உரையாடும் போது சொல்லுவார் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் அடிக்கடி என்னைப் பற்றி விசாரிப்பார்கள் என்று. அந்த அன்பு உள்ளங்களுக்கு என் கோடானு கோடி நன்றி!
மக்கள் திலகம் பாகம் 4 ற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பெருமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது. நான்காம் பாகத்தை அமர்க்களமாய் தொடங்கி வைத்த அன்பு நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
எங்கள் இதய தெய்வம் நடிகர் திலகம் அடிக்கடி சொல்வாரே

'ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி' என்று.
அதுபோல
தன் அன்பான அரவணைப்பால் மக்கள் திலகம் திரிகளை வெற்றிபெறச் செய்த திரு வினோத் சார், பிரதி பலன் பாராது இரவு பகலாக உழைக்கும் திருவாளர்கள் ரவிச்சந்திரன், ஜெயசங்கர், கலியபெருமாள், ராமமூர்த்தி, ஸைலேஷ் பாஷா, பேராசிரியர் செல்வகுமார், திரு பிரதீப் பாலு, திரு ரூப்குமார் உள்பட அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். எவ்வளவு அரிய புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள்! பெயர் விடுபட்டுப் போன அன்பர்களுக்கும் என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். எனது இனிய நண்பர் திரு பெங்களூரு குமார் அவர்களுக்கும் என் நன்றியும், வணக்கங்களும்.
எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர் திரு.ராகவேந்திரன் சாருக்கும் என் நன்றி!
மக்கள் திலகம் புதிய திரியில் என்னால் முடிந்த ஒரு பதிவு.




அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 30th January 2013 at 06:02 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
30th January 2013 05:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks