Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஜோ சார்,

    பதிலடி கொடுக்கச் சொல்லுங்கள். அதை மதிக்கிறோம். தாங்கள் சிவாஜி அவர்களுக்கு வலைதளங்களில் நேரும் அவமானங்களை நக்கீரராய் தனி ஒருவராய் தட்டிக் கேட்கும் தைரியத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறோம்.

    ஆனால் சில கேள்விகள்.

    கண்ட கண்ட நாற்றங்களுக்கு எல்லாம் பதில் சொல்லணுமா? வேண்டுமென்றே இழித்துரைபோருக்கு பதில் சொல்லி ஒரு பிரயோஜனமுமில்லை.

    இரண்டாவது அதை நீங்கள் திரியில் போட்டு பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டாம். இது பலரின் கருத்து. இப்போது பலர் அறிய விவிதபாரதி விளம்பரம் போல் கொடுத்து உலகறியச் செய்து விட்டீர்கள். அப்படியே விட்டிருந்தாலாவது ஒரு நான்கைந்து பேரோடவாவது போய் இருக்கும். (அப்படி என்ன சிவாஜி மேல் உங்களூக்கு கோபம் என்று தெரியவில்லை)


    இன்னொன்று. நடிகர் திலகம் திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்து எழுதாமல் ஜெயமாலினியைப் பற்றியா எழுதுவார்கள்? அவரவர்கள் திரியில்தான் அவரவர்களுக்குப் பிடித்தவர்களை பற்றிதான் எழுதுவார்கள். சிலாகித்துக் கொள்வார்கள். நக்கீரரான உங்களுக்கு இது கூட தெரியாமல் போனது எப்படி? அது கூட நீங்கள் தானே திரியை தொடங்கி வைத்தது?

    பிறந்தநாள் வாழ்த்தைக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாத உங்கள் பணிவுக்கு என் பெருந்தன்மையான வணக்கம்.

    உங்களுக்கு அணுஅணுவாக ரசித்து நிறுவ முடியா விட்டாலும் உங்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்உங்கள் தனி பாணியிலேயே உங்களின் தாக்குதல்களைத் தொடருங்கள்.

    பலருக்கு நீங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியதே பிடிக்கவில்லை. அதைதான் சந்திரசேகரன் சாரும் தெரிவித்திருந்தார். அதே போல பல இடங்களில், பல நேரங்களில், பல திரிகளில் சிவாஜி அவமானப்படுத்தப்பட்டபோது உங்களைக் காணோமே! ஏன் இந்த பாரபட்சம்? ஓ....நக்கீரர் அப்போது தவம் செய்யப் போய் விட்டாரோ! இப்போது மட்டும் ஏன் இந்த வேகம்? கோபம்?

    ஓஹோ...இப்போது புரிகிறது. அது திரியல்லவே! வலைத்ததளம் தானே!
    வாசு சார்
    என் உள்ளத்தை அப்படியே பிரதி பலித்து விட்டீர்கள். தங்களுக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் வலைப்பூவில் எழுதிக் கொண்டு இருப்பர். இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லி சாத்தியமில்லை. வேண்டுமென்றே சொல்பவர்கள் புதிது புதிதாக ஏதாவது விமர்சனங்களை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

    சாதனைகளைப் பற்றி முன்பு செய்யப் பட்ட விமர்சனங்களெல்லாம் பம்மலாரின் ஆவணங்கள் மூலம் தவிடு பொடியாக்கப் பட்டு விட்டது. எனவே இன்றைய தலைமுறை என்கிற கேடயத்தின் மூலம் நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிக்கிறார்கள். இதற்கும் நாம் அவ்வப்போது தகுந்த காணொளிகள், நிழற்படங்கள், என்று அவற்றை எதிர் கொண்டு வருகிறோம். இதற்குப் பின்னால் நம்முடைய உழைப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை புரிந்து கொள்பவர்களுக்குத் தான் அவற்றின் அருமை தெரியும். காணொளிகள், நிழற்படங்கள், ஆவணங்கள் இவற்றை நம் திரியிலேயே கேலி செய்ததும் தேவையில்லை என்றும் பயனற்றவை என்றும் கூறியதும் நாம் கண்டது தானே. இன்று ஒவ்வொன்றிற்கும் ஆவணம் தேவைப் படும் போது நாம் பம்மலாரின் பொக்கிஷத்தைத் தானே பயன் படுத்துகிறோம்.

    இது போல கடும் உழைப்புடன் பதிவுகள் இடப் படும் போது திசை திரும்பும் வகையில் விவாதங்கள் இடம் பெறாமல் இருந்தால் நாம் சொல்ல வந்ததை இன்னும் விவரமாக சொல்லலாம் என்கிற நோக்கில் தான் பதிவுகளை முறைப் படுத்தக் கேட்டுக் கொள்ளப் பட்டது.

    அதே போல தான் தேர்ந்தெடுத்த சிலரின் பதிவுகளை மட்டும் சிலர் பாராட்டுவதும் இங்கே அவ்வப்போது நடைபெறுகிறது. இதனை சுட்டிக் காட்டிய போது எனக்கும் கண்டனங்கள் வந்தன.

    இதில் அவ்வப்போது அரசியல் வேறு. நடிகர் திலகம் 1952ல் பராசக்தி வெளியான நாளிலிருந்தே இந்த இருட்டடிப்பு செய்வதையெல்லாம் சந்தித்துத் தானே வந்தார். அவர் என்ன புதியதாகவா இருட்டடிப்பு செய்யப் படுகிறார்.

    நம்மைப் போன்ற உள்ளங்களில் உள்ளதை அப்படியே தாங்கள் உரைத்திருக்கிறீர்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •