-
8th July 2014, 04:13 PM
#11
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் பதிவாக வாழ்க்கை வாழ்வதற்கே படத்தில் இடம்பெற்ற 'நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான்' என்ற அருமையான பாடலை எதிர்பாராமல் தந்து இனிய பொழுதாக்கி விட்டீர்கள்.
அந்தப்படத்தை நிற்க வைத்ததே பாடல்கள்தான். இந்த பாடலுக்கு முன்னர் வரும்
'அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்'
பாடலும்,
படத்தில் முதல் பாடலாக இடம்பெறும்
'அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்குமலை
மேற்குமலை எங்கள் மலை'
பாடலும்
படத்தில் இரண்டு முறை (சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும், பெரியவர்கள் சோகமாகவும் பாடும்) நீங்கள் குறிப்பிட்ட
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடுகட்டி
பாடலும் என, அனைத்துப் பாடலுமே அருமைதான்.
ஜெமினி - சரோஜாதேவி ஜோடியின் இன்னுமொரு கல்யாணப்பரிசு, கைராசியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றியது...
-
8th July 2014 04:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks