Results 1 to 10 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு அவர்களே ('சார்' போடக்கூடாது என்பது மட்டும்தான் 'கோ'வின் கட்டளை).

    நேற்று ஒருநாள் கணிணி இணைப்புக் கிடைக்கவில்லைஎன்று இன்றைக்கு வந்து பார்த்தால் ஏகப்பட்ட பக்கங்கள் ஓடி திரி நிரம்பிக்கிடக்கிறது. ராகவேந்தர் அவர்கள் சொன்னது போல எதைப்பாராட்டுவது என்றே தெரியவில்லை. நல்லவேளையாக சில பதிவுகள் தெலுங்கில் ஓடியிருப்பதால், அவ்வளவாக தெலுங்குப்படங்கள் பற்றித் தெரியாது என்றாலும் தெலுங்கு வீடியோக்களைப் பார்ப்பதில் ஒரு தனி இன்ட்ரஸ்ட். ஏனென்றால் ஒரே காட்சிக்கு இங்கே இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பவர்கள், அங்கே கொஞ்சம் காற்றோட்டமாக திறந்து நடித்திருப்பார்கள்.

    நமது திரியில் லதா தினம், ஜெயந்தி தினம், சேகர் தினம், ஆனந்தன் தினம் கொண்டாடப்பட்டது போல விஜயலலிதா தினம்', 'கீதாஞ்சலி தினம்' கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்த்திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத இன்னொரு நடிகை கீதாஞ்சலி. நன்றாக நடனம் ஆடத்தெரிந்த அவரை காமெடியன்களுக்கு ஜோடியாகப்போட்டே ஒருவழி பண்ணிவிட்டார்கள். சங்கமம் படத்திலும் நாகேஷின் ஜோடி இவர்தானே? ("ஐயோ அவனா? சாவி இல்லாமலே பூட்டைத் திறப்பானே")

    'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' ஸ்பெஷல் பதிவின்மூலம் ஒருவர் தலையில் டன் கணக்கில் ஐஸ் வைத்து விட்டீர்கள். இப்படத்தில் ரவிச்சந்திரன் + ராமமூர்த்தி அல்லவா. அவரது கொண்டாட்டத்துக்கு கேட்கணுமா.

    தங்களின் லேட்டஸ்ட் இன்றைய ஸ்பெஷலாக வந்த 'சித்தி' படத்தின் 'தண்ணீர் சுடுவதென்ன' பாடல் விவரிப்பு அருமை. இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட வந்தபோது கொஞ்சம் கிளுகிளுப்புடனேயே ஆட வந்தார் பத்மினி. ஐந்தாண்டு இடைவெளியில் சற்று முதுமை கூடியிருந்தது நன்றாகவே தெரிந்தது.

    1966 பொங்கலன்று 'அன்பே வா' படத்துடன் 'சித்தி' வெளியானது. நமது படம் 'மோட்டார் சுந்தரம்பிள்ளை' ஜனவரி 26 அன்று வெளியானது (நடிகர்திலகத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அதே நாள்) .

    சித்தி படத்தில் ஜெமினியும் பத்மினியும் குளிக்கும் இந்தப்பாடல் காட்சி கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மல்லியம் கிராமத்தில் காவேரி ஆற்றில் படமாக்கப்பட்டது (திருச்சியில் கடல்போல காட்சியளிக்கும் காவேரி கல்லணையிலிருந்து பல கிளை நதிகளாக பிரிந்து பிரிந்து மல்லியம், மாயவரம் வரும்போது ஒரு சிற்றாறு போல குறுகிவிடும்). கே.எஸ். ஜி. அப்போதைய தன்னுடைய படங்களில் ஒருசில காட்சிகளியேனும் தன்னுடைய மல்லியம் கிராமத்தில் படமாக்குவதை ஒரு செண்டிமெண்ட் ஆக வைத்திருந்தார். சித்திக்கு முந்தைய அவரது கற்பகம் முழுவதும் மல்லியத்திலேயே படமாக்கப்பட்டது. 'பக்கத்து வீட்டு பருவமச்சான்' பாடலின் இறுதியில் சாவித்திரி பாடும் மொட்டை மாடி வீடுதான் மல்லியம் கிராமத்திலுள்ள கே.எஸ்.ஜி.யின் வீடு.

    (இதுபோல நமது சவாலே சமாளி படத்தின் வெளிப்புறக் காட்சிகளனைத்தும் மல்லியத்திலேயே எடுத்திருந்தார் ராஜகோபால். டி.கே.பகவதியும் வி.எஸ்.ராகவனும் நின்று பேசும் மரப்பாலம் மல்லியம் காவிரியாற்றுப் பாலம்தான்).

    'சித்தி' படத்தில் பத்மினி குளிக்கும் இந்தக்காட்சிதான் அந்தப்படத்தின் விளம்பரங்கள் அனைத்திலும் இடம்பெற்றது. இப்படத்தின் ஒரிஜினல் ஹீரோ எம்.ஆர்.ராதாதான். ஜெமினியும் முத்துராமனும் துணைப்பாத்திரங்களே.

    மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். ரொம்ப ஹிட் என்றால் முத்துராமனும் 'ஞானஒளி' விஜயநிர்மலாவும் பாடும். "சந்திப்போமா இன்று சந்திப்போமா", அடுத்து பெண்களைக் கவர்ந்த "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" நாகேஷின் தத்துவப்பாடல் "இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா" ("கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்", "கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள் ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்... சந்திரலேகா") கண்ணதாசன் சொல்லாத எதையும் யாரும் புதிதாக சொல்லிவிடவில்லை. ஜெமினி, முத்துராமன், நாகேஷுக்கு மட்டுமல்ல, குலதெய்வம் ராஜகோபாலுக்கும் பாட்டு "சைக்கிள் வண்டி மேலே" (ராஜகோபாலை யார் பார்த்தது, விஜயநிர்மலா அழகாக சைக்கிள் ஓட்டும்போது)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •