-
17th August 2014, 12:15 PM
#11
Senior Member
Diamond Hubber
இனிமேல் நாளும் இளங்காலைதான்
காணொளியை பதிவேற்றம் செய்தம் RajsMed அவர்களுக்கு நன்றி. பாடலுக்கு முந்தைய காட்சிகளையும் இணைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. ராஜாவின் பின்னணி இசையின் மேதமை அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. நாதஸ்வர ஓசை மேலோங்கிப் போவதும், அது அப்படியே மங்கையின் வாழ்க்கை மீதான நம்பிக்கை-அவநம்பிக்கை நினைவலைகளுக்கு ஏற்றவாறு காற்றில் கரைந்து மறைவதும், தயக்கங்களுக்கான இசைப்படலம் முடிந்தவுடன் மேகமூட்டங்களுக்கு இடையே மீண்டும் நாதஸ்வர இசையோடு பாடல் தொடங்குவதும்.. வெகு நேர்த்தியான பாடல் அமைப்புத் திட்டம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th August 2014 12:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks