-
14th December 2014, 09:42 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
ஊழலுக்கு வக்காலத்து
அப்போது, தேர்தல் பிரசாரத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள், ‘திமுக அரசை நாயை அடித்து தூக்கிப் போட்டது போல போட்டுவிட்டார்கள்’ என்று கூறினார். அதற்கு பதிலளித்த கருணாநிதி அவர்கள், ‘‘நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்ததே நான்தான். எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்’’ என்று கடுமையாக தாக்கினார். இதை இங்கே பதிவு செய்வதற்காக வருந்துகிறேன். இருந்தாலும் கூறக் காரணம் உண்டு. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கருணாநிதி எந்த அளவுக்கு மோசமாக விமர்சனம் செய்வார் என்பதற்குத்தான்.
பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் இந்திரா காந்தி அம்மையார் பிரதமர் பதவி இழந்து, தமிழகம் வந்தபோது மதுரையில் அவர் மீது கொலைவெறி தாக்குதலை திமுகவினர் நடத்தினர். ஆனால், மூன்றே ஆண்டுகளில் அரசியல் நிலைமைகள் மாறின. புரட்சித் தலைவரின் அரசை இந்திரா காந்தி அம்மையார் டிஸ்மிஸ் செய்தார். திமுகவோடு கூட்டணி என்ற தவறான முடிவெடுத்தார். அப்போது, தமிழன் தமிழனாக வாழ திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முரசொலியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் விளம்பரம் கொடுத்தார். அவர் மீது தவறில்லை. காங்கிரஸ் மேலிடம் எடுத்த தவறான முடிவால் யாரை ஊழல்வாதி என்று சொன்னாரோ அதே கருணாநிதியின் ஊழலுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு அவர் ஆளானார். இந்திரா காந்தி அம்மையார் எடுத்த முடிவு தவறானது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியது. கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து புரட்சித் தலைவர் மீண்டும் முதல்வரானார்.
ஊழலுக்கு வக்காலத்து வாங்குவதை அரசியல் வரலாறு கண்டிருக்கிறது என்றாலும் மம்தாவின் வக்காலத்து ஆபத்தானது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கருணாநிதி அவர்கள் யாரை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தார் ?
முதலில் கருணாநிதியை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தார் திரு அண்ணா ! இதை அவர் எந்த காலத்திலும் மறக்காதிருந்தால் நல்லது.
திமுக என்பது அண்ணா தொடங்கிய காலத்தில் "திராவிட முன்னேற்ற கழகம்".
பிறகு திரு கருணாநிதி வசம் ஆன பிறகு இரண்டு அர்த்தங்கள். "திராவிடர்களை முட்டாளாக்கும் கழகம்" அல்லது "திரு மு கருணாநிதி" என்பதாகும்.
இன்றுவரை அது பின்னதாகவே செயல்படுகிறது.
தன்னை தவிர இன்னொரு "செகண்ட் லைன்" உருவாவதை என்றுமே விரும்பாதவர் கருணாநிதி. அதற்க்கு ஒத்துபோனவர்கள் ஜால்ராக்களாக இன்றும் உள்ளனர், அல்லாதவர் அவர்களாகவே வெளிவந்துவிடுவார்கள் அல்லது வெளிஎற்றபடுவார்கள் . இதுதான் இன்றளவும் திமுக வை பொருத்தவரை நடைபெற்றுகொண்டிருக்கிறது.
மாறன், மற்றும் கருணாநிதிக்கு வேண்டியவர்களை குளிப்பாட்டி பலகாலம் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தார்..! திரு சிவாஜி அவர்கள் திமுக வில் இருந்த காலங்கள் எத்தனை ? மற்றவர்கள் இருந்த இருக்கின்ற காலங்கள் எத்தனை ?
திமுக என்ற பிச்சைகாரர்கள் கும்பல் வயிறு புடைக்க தின்பதற்கும் ரௌடித்தனம் தமிழகத்திலே தழைத்து வளர அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது.
அதற்க்கு நடிகர் திலகத்தை தங்களுடய நாடகம், திரைப்பட வசனம் மூலமாக எல்லா மூலை முடுக்கிலிரிந்தும் பணம் வசூல் செய்ய சிவாஜி கணேசன் இந்த கொள்ளைகும்பலுக்கு தேவைபட்டார்.
நடிகர் திலகம் அவர்களது திரை உலக அசுர வளர்ச்சி இந்த கும்பலுக்கு பெரும் கிலியாக மாற கெதி கலங்கிப்போன கொள்ளைகூட்ட தலைவர்கள், எங்கே தி மு க, சிவாஜி கையகபடுத்திவிடுவாரோ என்ற பயத்தில் அவரை அவமானபடுத்தினர். கட்சி பணிகளில் இருந்து அவராகவே விலக வழி வகை செய்தனர்.
அடிப்படை உறுப்பினர் அல்லாத ஒருவர் நடிகர் திலகம் அவர்கள். பெரியார் மற்றும் அண்ணா கொள்கைகள் சிலவற்றில் பற்றுகொன்டதன்பால் அந்த நன்றிக்கடனை தன்னுடைய நாடகம், நடிப்பு மூலம் வசூல் செய்து கட்சிக்கு கொடுத்தார். இது தானே உண்மை !
ஆனால் கருணாநிதி செய்த உபகாரம் என்ன ?
அப்போது தி மு க கட்சிக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத காங்கிரஸ் அனுதாபியாக இருந்த மக்கள் திலகம் அவர்களை முதல் முதலாக திமுக மாநாட்டில் மேடையேற செய்து கட்சிக்கு அதிகம் நிதி வசூலித்து கொடுத்தவர் என்று பொய்யுரைத்து அறிமுகம் செய்துவைத்தார் என்பது அரசியல் உலகம் அறிந்த உண்மை.
ஆக எந்த காலத்திலும் திமுக கட்சியாக இருந்தாலும் சரி அதன் தலைவர்களாக இருந்தாலும் சரி...என்றுமே அவர்கள், மற்றவர்களுடைய பெருமையை திருடி இவர்களுடைய பெருமை என்று புளுகுவதும், இவர்களுடைய சிறுமையை மற்றவர்கள் சிறுமை என்று விளம்பரபடுத்தி மக்களை ஏமாற்றுவதை குல தொழிலாக செய்தவர்கள், செய்துகொண்டிருப்பவர்கள்தான்
சிவாஜிக்கு 1953 இல் நடந்த கொடுமை 1971, 1972, 1973 ல் மக்கள் திலகம் அவர்களுக்கு நேர்ந்தது இதே கருணாநிதியால். என்ன ...19 வருடம் திமுக வில் இருந்து நல்லதொரு அஸ்திவாரத்தோடு, மக்கள் மத்தியில் நல்லதொரு மதிப்போடு திரு MGR வளர்ந்ததால் திரு MGR அவர்களை திரு கருணாநிதியால் திரு சிவாஜிக்கு நேர்ந்ததுபோல நேரசெய்ய முடியவில்லை.
மேலும் மக்களும் திமுக வை அதன் தலைவர்களின் செய்கையால் மிகவும் வெறுத்த மாற்றத்தை எதிர்பார்த்த காலங்கள் அப்போது வெகு விரைவில் வந்தும் சேர்ந்தது !
முரசொலியில் விளம்பரம் கொடுத்தது திரு சிவாஜி அல்ல. திமுக என்ற கட்சிதான்.
அதே போல திரு MGR அவர்களுடன் காங்கிரஸ் நல்ல உறவு கொண்டபோது, திரு சிவாஜி அவர்கள் பசுவை தேடி கன்று வந்துவிட்டது என்றும். திரு mgr அவர்கள் பசு, தான் கன்று என்றும் கூறினார். இதே கருணாநிதி "இந்த ஒன்று சேரும் சம்பவத்தால் சிவாஜி படங்களின் வசூல் இனி இன்னமும் கூடும்" என்று கூட கூறினார். அதை நீங்களும் அறிந்தவர்தானே ! !
அதே சிவாஜி, Thiru MGR மறைவுக்கு பிறகு, அவரை அனைத்து கட்சிகள் அழைத்தும் அந்த ஈன, சுலபமான சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல், மக்கள் திலகம் அவர்கள் மீது கொண்ட அதீத அன்பின் காரணத்தால், திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்து களம் இறங்கி, அதனால் சம்பாதித்தது அவமானம் மட்டுமே என்பதை நீங்களும் அறிவீர்களே !
அப்படி அவர் ஈன, சந்தர்ப்பவாத அரசியல் செய்திருந்தால் அரசியல் வரலாற்றில் நடிகர் திலகம் அவர்களுக்கு நிகழ்ந்த ஒரே ஒரு கரும்புள்ளி இல்லாமல் போயிருக்கும்..!
ஆக எந்த காலத்திலும் மற்றவர்களுக்காக நல்லது செய்யபோய் அதனால் இன்னல் பட்டு, அவமானம் சந்தித்த ஒரே ஒருவர் இருக்கிறார் என்றால் அது நடிகர் திலகம் ஒருவர்தான் !!!
கலைவேந்தன் சார் தாங்கள் முன்னதை பதிவிட்டபோது...இனி ..அதே போல நடந்த பின்னதையும் தாங்கள் பதிவிடவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
பராசக்தி படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியதால் சிவாஜி புகழ் அடையவில்லை. காரணம், கருணாநிதி அதற்க்கு முன்னர் பல படங்களுக்கு வசனம் எழுதியவர். அந்த வசனத்தில் எந்த வசனம் மக்கள் மனதில் இன்றளவிலும் நிலைத்து நின்றது என்று நாம் சிந்தித்தால் ஒரு படம் கூட கிடையாது.
ஆனால் கருணாநிதி வசனம் நடிகர் திலகம் அவர்கள் வாயிலிரிந்து மக்கள் காதுகளுக்கு சென்றடைந்தபோதுதான் அது மக்கள் மனதில் பதிந்தது என்பதை கருணாநிதி மட்டும் அல்ல, வேறு எவரும் மறுக்க முடியாது.
ஓடினாள்..ஓடினாள் ..வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்பதாகட்டும்... புருசோத்தமரே...மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே என்பதாகட்டும்...நடிகர் திலகத்தால் தான் கருணாநிதி பிரசித்தம் அடைந்தார் ...அந்த நன்றியை மறந்து கருணாநிதி பேசினார் என்றால் அவர் வந்த வழி அப்படி..! கருணாநிதியின் குணம் ...அது தமிழகமே அறிந்த ஒன்றுதானே...!
எல்லா அரசியல் கட்சிகள் ஆட்சி செலுத்தியபோதும் ஊழல் நடந்துதான் இருக்கிறது. இம்மியளவும் ஊழல் இல்லாத ஆட்சி என்று எவருடைய ஆட்சியையும் குறிப்பிடமுடியாது இந்த நாட்டில் கலைவேந்தன் சார் !
என்ன.. ஒருசிலர் ஆட்சி நடத்தியபோது மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி எதிர் அணியினருக்கு வேண்டிய அளவு பணம் கொடுத்து அவர்களையும் செல்வந்தராகி ஊழல் வெளியில் அதிக அளவில் வெளிவராமல் பெயரளவில் அரசால் புரசலாக பேசும் வகையில் பார்த்துகொண்டனர்...இவ்வளவுதான் வித்தியாசம் சார் !
Last edited by RavikiranSurya; 14th December 2014 at 10:45 PM.
-
14th December 2014 09:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks