-
12th August 2015, 10:18 PM
#11
Junior Member
Senior Hubber
சற்று முன் நியூஸ் 7 சேனலில் 9 மணிக்கு நடைபெற்ற சிவாஜி சிலை அரசியலாக்கபடுகிறதா என்ற விவாதத்தில் திரு.சந்திரசேகர் அவர்கள் மிக அருமையாக விவாதித்தார். எத்தனையோ தலைவர்கள் சிலை போக்குவரத்துக்கு மிக இடைஞ்சலாக இருக்கும்போது சிவாஜி சிலையை மட்டும் குறி வைப்பது யாரோ ஒருவரின் தூண்டுதலே இதற்கு காரணம் என்பதை சிறப்பாக கூறினார். மேலும் பிரசன்னா என்ற வழககறிஞர் திரையுலகில் போற்றப்படவேண்டிய நடிகர் திலகத்திற்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்படாதது பற்றியும் இந்த சிலை விவகாரம் தமிழகத்திற்கு ஒரு துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார். ஒரே ஒரு நபரை தவிர மற்ற அனைவரும் இந்த சிலையினால் எந்த போக்குவரத்துக்கும் இடஞ்சல் இல்லை எனவே கூறினார்.
மீண்டும் மீண்டும் கூறுகிறோம் சிவாஜி சிலையை தொட்டால் அதற்கான பலனை உடனே அனுபவிப்பீர்கள் . இது சத்தியம்

-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
12th August 2015 10:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks