
Originally Posted by
kalaiventhan
நண்பர்களுக்கு,
தர்மராஜா படம் நஷ்டம் என்றதும் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு கோபம் வந்து விட்டது. சிவந்த மண் பிரச்சினைக்கு பதில் சொல்லியிருக்கிறார்.
உரிமைக்குரல் படம் மூலம்தான் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டேன் என்று திரு.ஸ்ரீதர் சொல்லியிருக்கிறார். அதை திரு.முரளி அவர்கள் மறுக்காதது மகிழ்ச்சி. விரைவில் விவரங்கள் நண்பர்கள் மூலம் பதிவிடப்படும் என்று நம்புகிறேன்.
உரிமைக்குரல் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் ஸ்ரீதரை பாடாய் படுத்தினார் என்பது திரு.முரளியின் கருத்து. அதை ஒப்புக் கொள்கிறார்களா? என்றும் கேட்டிருக்கிறார். உண்மையில் ’பாடாய் படுத்தினார்’ என்ற வார்த்தையே நான் கொடுத்த விவரத்தில் இல்லை. அதில் இருப்பதை கீழே தருகிறேன்.
//உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். //
(மக்கள் திலகம் திரி பக்கம் 334 பதிவு.3332)
‘அடம் பிடிப்பது’ என்றுதான் உள்ளது. அதுவும் கூட நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிக ரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது (மக்கள் திலகத்தின்) அக்கறை என்றும் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்கள். அந்தப் படம் மட்டுமல்ல, தான் நடிக்கும் எல்லாப் படங்களுக்குமே தான் நினைக்கும்படி வரவேண்டும் என்றுதான் மக்கள் திலகம் அடம் பிடிப்பார். படம் நன்றாக வரவேண்டும் என்பதில் அவருக்கு உள்ள அக்கறை அது. மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்கிறோம்.
ரசிகர் மன்ற நோட்டீசை வைத்துக் கொண்டு பேசுபவர்களிடம் லாஜிக் எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதைத்தான் நான் ஏற்கனவே சொன்னேன். எங்களிடமாவது ரசிகர் மன்ற நோட்டீஸ் இருக்கிறது. உங்களிடம் அதுகூட இல்லாமல் எழுதுகிறீர்களே? என்று.
சிவாஜியின் சாதனை சிகரங்கள் என்று தனி ஸ்டிக்கியே போட்டு திரு.முரளி அவர்கள் எழுதியிருக்கிறார்.
அதில் உள்ள தவறுகளை பார்ப்போம்.
1.ராஜ ராஜ சோழன் திரைப்படம் 100 நாட்கள் தமிழகத்தின் எந்த திரையரங்கிலும் ஓடவே இல்லை. ஆனால், 100 நாள் படம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்.3 பதிவு.29. மற்ற சில படங்களுக்கு தியேட்டர் பெயர் இருக்கும். இந்தப் படத்துக்கு 100 நாள் ஓடிய தியேட்டர் பெயரும் இல்லை)
2. சென்னையில் ‘ராஜா’ திரைப்படம் 2 தியேட்டர்களில் (தேவிபாரடைஸ், ராக்சி) 100 நாள் ஓடியது. ஆனால் சாதனை சிகரங்களில் 3 தியேட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அகஸ்தியாவும் சேர்த்து. (சாதனை சிகரங்கள் பக்கம்.3 பதிவு.26). சமீபத்தில் இதை திரு.குமார் சார் மக்கள் திலகம் திரியில் சுட்டிக் காட்டியபோது கூட திரு.முரளி அதை மறுக்கவில்லை.
3. திருவருட்செல்வர் திரைப்படம் தமிழகத்தின் எந்த திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடவே இல்லை. சாந்தி தியேட்டர் திரையரங்கு வளாகத்தில் கல்வெட்டு வைத்துள்ளார்கள். அதில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களில் 100 நாட்கள் ஓடியதை படத்தின் பெயருக்கு பக்கத்திலேயே ‘h’ என்றும், வெள்ளி விழா கொண்டாடிய படங்களை ‘s’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிலும் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியதாக, அதாவது ‘h’ என்று குறிப்பிடப்படவில்லை.
அதேபோல, சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் நண்பர் திரு.சந்திரசேகர் அவர்கள் ஒரு ‘வரலாற்றின் வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நக்கீரன் பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது. அதில் கடைசியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியலும் ஓடிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. அதிலும் திருவருட் செல்வர் 100 நாட்கள் ஓடியதாக இல்லை.
திரு.முரளி அவர்களின் பதிவுக்கு முன்னால் பதிவு எண்.1612 திரு.ஆதிராமும் திருவருட்செல்வர் சுமாராக போனது என்று கூறியுள்ளார்.
ஆனால், சாதனை சிகரங்களில் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியபடம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்கம் 3 பதிவு 21). கவனித்துப் பார்த்தால் தியேட்டர் பெயரும் இருக்காது.
இப்படி எல்லாம் அந்த சாதனை சிகரங்கள் தவறான தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் விதண்டாவாதம் செய்கிறோம். லாஜிக் இல்லை என்று திரு.முரளி கூறுகிறார்.
நான் மேலே கூறியவற்றை எல்லாம் சரிபார்த்துவிட்டு (இதெல்லாம் சாம்பிள்தான்) அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த நோட்டீசை பார்த்தால் நாம் அடித்து விடவில்லை என்ற உண்மை நடுநிலையாளர்களுக்கு விளங்கும்.
உண்மைகளை ஒப்புக் கொள்ள மனம் இல்லாதவர்களிடம் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறுதான். இருந்தாலும் நடுநிலையாளர்களுக்கு உண்மையை விளக்க வேண்டியுள்ளதே.என்ன செய்ய?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks