Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    நன்றி!

    'பட்டு வண்ணச் சிட்டு' பாடலுக்கான தங்கள் ஏக்கமும், அந்தப் பாடலை அலசிய விதமும் அருமை. (எஸ்.வி சார் மனம் குளிர்ந்திருப்பார். உங்களுக்கு ட்ரீட் நிச்சயம் உண்டு) பெண் நளின நடை அசைவுகள் தலைவருக்கு கை வந்த கலை. தாங்கள் சொல்லியிருந்தபடி எம்.ஜி.ஆர் அவர்களும் இந்தப் பாடல் காட்சியில் நன்றாகவே செய்திருப்பார். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அறிஞரின் பொன் வாக்கியத்தை அப்படியே நீங்கள் பிரதிபலித்திருப்பது பாராட்டுக்குரியது. தங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் யோகானந்த் தலைவரின் பல படங்களை இயக்கியவர் என்பதால் இந்தப் பாடல் காட்சியில் தலைவர் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை தங்களுக்கு எழுந்தது நியாயமே.

    எனக்குக் கூட 'சுடரும் சூறாவளியும்' படத்தில் 'அனுபவம் தானே வரவேண்டும்' என்ற பாடல் தலைவருக்குக் கிடைக்காமல் போய் விட்டதே என்று மிகவும் மனம் வருந்தும். 'பாடகர் திலகம்' முத்துராமனுக்குப் பாடுவதை கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் அப்படியே நடிகர் திலகத்திற்கு பாடியது போலவே இருக்கும். கூட ராட்சஸி வேற. நிர்மலாவிற்கு குரல் தந்திருப்பார். ரொம்ப அருமையான தலைவருக்கு ஏற்ற பாடல். நான் அப்போதெல்லாம் சிலோன் வானொலியில் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இது தலைவர் படத்தின் வெளிவராத 'ஞாயிறும் திங்களும்' படப் பாடல் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். நிஜமாகவே இணைய உறவு வந்த பின்தான் இந்தப் படம் 'சுடரும் சூறாவளியும்' என்றே தெரியும்.



    பாடலின் ஆரம்ப இசையே ஆனந்தம் கூட்டி விடும்.

    'நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்' என்று ஈஸ்வரி பாடும் போது தலைவராக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? 'ஓகே' என்பது போல எவ்வளவு அழகாக தலையசைவில் 'சொல்லித்தர சம்மதம்' என்பது போல காட்டியிருப்பார். முத்து இதுக்கெல்லாம் ரொம்ப தூரம். அவர் இதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார்.

    'ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்' என்ற ஆண் குரலுக்கு அவர் வெகு இலகுவாக கைவிரல்களை காதலி மீது பிரயோகிக்கும் காட்சி கண் கொள்ளாத அளவு நிறைந்திருக்குமே.

    முதல் சரணம் தொடங்குமுன் ஒலிக்கும் இடையிசைக்கு முத்துராமன் ஓட்டமும் நடையுமாக நிர்மலாவை நோக்கி வருவார். இதே தலைவரின் ஓட்டமும், நடையும் அந்த இடத்தில் இருந்திருந்தால் கொட்டகை கைத்தட்டல் ஓசையில் இடிந்து விழாதோ! ஒலிக்கும் ஷெனாய் இசைக்கு நிர்மாலாவின் இடுப்பை பின்னாலிருந்து அணைத்தபடி அவர் கழுத்தில் முகம் புதைத்து கண்களை மேலிருத்தி தூள் கிளப்பியிருக்க மாட்டாரா?

    'தலை சாயும் பெண்ணுக்கு சந்தோஷம் என்ன?'

    என்று நிர்மலாவின் முகத்தை ஆட்காட்டி விரலால் தூக்கி நிறுத்தி, ஒரு கண்ணை ஸ்டைலாக அடித்து நம்மை சந்தோஷப்பட வைத்து இருப்பாரே! முத்துவோ நிர்மலாவின் கன்னத்தில் விரலால் பொட்டு வைத்துக் கொண்டிருப்பார்.

    'இது கன்னந் தொட்டு, கையைத் தொட்டு எண்ணங்களை உண்டாக்கும் காதல் பாடம்'

    என்ற வேகமான வரிகளுக்கு நிர்மலா இடையசைத்து முன்னால் நடந்து வர, 'நடிகர் திலகம்' அதைப் பாடியபடியே அப்படியே சைட் வாக்கில் ஒரு வேகமான வாக் நடந்து வந்து அள்ளியிருப்பாரே!

    'ரிரகமததமாரி'

    என்று அவர் வாயசைப்பில் பின்னி, நிர்மலாவின் மேல் கைகளால் தாளம் போட்டபடி அசத்தியிருப்பாரே! முத்து அங்கிருக்கும் பூச்செடி ஒன்றில் இருக்கும் பூவை பிடித்து ஆட்டியபடி தனியே இதைப் பாடுவார்.

    'சசரிகமபபசச'

    என்ற ஈஸ்வரியின் அமர்க்களத்திற்கு நிர்மலா 'சொர்க்கம் பக்கத்தில்' 'எங்க மாமா' பாடலில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து ஆடுவது போலவே ஆடிக் காட்டுவது வேறு நமக்கு 'இந்த இடத்தில் நடிகர் திலகம் இல்லையே' என்று இன்னும் வெறியைக் கூட்டும்.

    இப்படி பாடல் முழுதும் சொல்லிக் கொண்டே போகலாம். இன்னொரு 'காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்', 'பத்துப் பதினாறு முத்தம் முத்தம்' போல அற்புதமான நடிகர் திலகத்தை நாம் இப்பாடலில் கண்டு ரசித்திருக்கலாம். ம்...நாகையா பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

    நிர்மலாவுடன் நடிகர் திலகத்திற்கு அதிகமான பாடல்கள் இல்லை. ஆனால் பல பாடல் காட்சிகளில் தலைவருடன் தோன்றியிருப்பார். தங்கச் சுரங்கம், லஷ்மி கல்யாணம் இப்படி.

    ஜோடியாக நடித்த 'தங்கைக்காக' படத்தில் ஒரு அருமையான டூயட் பாடல், அப்புறம் நம் எல்லோருக்கும் பிடித்தமான 'சொர்க்கம் பக்கத்தில்' பாடல். 'லஷ்மி கல்யாணம்' படத்தில் 'போட்டாளே... போட்டாளே... உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே' பாடலில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து கும்பலோடு நிர்மலாவும் ஆடுவார். இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் பாவனைகளும், கேலிகளும், கிண்டல்களும், நக்கல்களும், குத்துக்களும், நையாண்டி சிரிப்புகளும், கொள்ளை அழகும், எளிமையான உடையும் எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வளவு அற்புதமாக ஆடியிருப்பார். முழுப் பாடலையும் ஆய்வு செய்து எழுத மனம் துடிக்கிறது.

    நம் கற்பனைக்கு வடிகாலாக இந்தப் பாடலைப் பார்த்து நம் தாகத்தை தணித்துக் கொள்ளுவோம். இந்தப் பாடல் உங்களின் உயிர்ப்பாடல் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் அனுபவித்து என்னிடம் பலமுறை போனில் உரையாடி இருக்கிறீர்கள். தலைவர் ஒவ்வொரு பிரேமிலும் நிர்மலாவுடன் கலக்குவார். அதுவும்

    'எனைத் தேடி வரும் எதிர்காலம்' என்று அவர் பாடலை ஆரம்பிக்கும்போது கைவிரல்களை நீட்டி சொடுக்குப் போட்டவாறே கைகளை கொஞ்சம் கொஞ்சமாக மடக்குவாரே! (மதுண்ணா! கவனிக்க)

    'அதைத் தெரிவிப்பதே இந்த நேரம்'

    வலதுகை ஆட்காட்டி விரலை தோள்பட்டைக்குப் பின் வட்டமடிக்க வைத்து நிர்மலாவிடம் படுஸ்டைலாக சின்னப் பையன் போல ஒரு நடை நடந்து வருவாரே!

    போங்க ராகவேந்திரன் சார்! இனிமே தாங்காது.

    Last edited by vasudevan31355; 16th November 2015 at 08:26 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks RAGHAVENDRA thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •