அன்பு சகோதரி சாரதா மற்றும் பம்மலார், பார்த்த சாரதி, உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. எனவே உடனே எட்டாம் பாகத்தினை துவக்கி வைக்கும் பேறுடன் என்னுடைய முன்னறிவிப்போடு பதிவிட்டுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர் பட்டாளம் உலகிலேயே உன்னதமான பட்டாளம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பார்த்த சாரதி அவர்களின் ஆய்வுகள் அமைந்து வருகின்றன. அவருடைய ஆய்வுகளுக்காக மட்டுமே தனி புத்தகம் வெளியிடலாம். அதே போல் தங்களுடைய எண்ணங்கள் எழுத்துக்கள் வலைப்பூவின் மூலம் தங்களுடைய அரிய பணியை சிறப்புற செய்து வருகிறீர்கள். பம்மலாரும் தம்முடைய பங்கிற்கு இணைய தளம் மூலம் பல்வேறு பணிகளின் மூலம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பி வருகிறார். இதே போல் திரு முரளி சார் தன் பங்கிற்கு தான் செல்லுமிடத்தில் எல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளாமலில்லை. இதே போல் இந்த ஹப்பிலுள்ள அனைத்து ரசிக நண்பர்களும் அவரவர் தம் பங்கிற்கு ஆற்றி வருகிறீர்கள். நம் அனைவருக்கும் பின்னணியில் நடிகர் திலகம் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது திண்ணம்.
நம் அனைவருடைய ஒருங்கிணைந்த மனவோட்டமே இத்திரி இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
அனைவருக்கும் அன்பும் நன்றியும்,
ராகவேந்திரன்
Bookmarks