-
12th May 2012, 05:43 AM
#11
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
பட்டிக்காடா பட்டணமா
[6.5.1972 - 6.5.2012] : 41வது உதயதினம்
சாதனைப் பொன்னேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 1.5.1972

'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 6.5.1972

முதல் வெளியீட்டு விளம்பரம்

முதல் வெளியீட்டு விளம்பரம்

50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 24.6.1972

[ஆறு வாரங்களின் வசூல் அளிக்கப்பட்டுள்ள அத்தனை ஊர்களின் அரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது]
100வது நாள் விளம்பரம் : தினமணி : 13.8.1972

வசூல் சாதனை விளம்பரம் : தினமணி : 15.10.1972

வெள்ளிவிழா விளம்பரம் : தினமணி : 27.10.1972

குறிப்பு:
அ. வெள்ளி விழா கண்ட திரையரங்கம்:
மதுரை - சென்ட்ரல் சினிமா - 182 நாட்கள்
ஆ. 100 நாட்களுக்கு மேல் ஓடி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 146 நாட்கள் [பின் 'சித்ரா'வுக்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு வெள்ளிவிழா]
2. சென்னை - கிரௌன் - 111 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 104 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் சினிமா - 182 நாட்கள் [நேரடியாக வெள்ளிவிழா]
5. சேலம் - ஜெயா - 146 நாட்கள் [பின் 'நடராஜா'வுக்கு மாற்றப்பட்டு வெள்ளிவிழா]
6. திருச்சி - ராக்ஸி - 139 நாட்கள் [பின் 'பாலாஜி'க்கு மாற்றப்பட்டு வெள்ளிவிழா]
7. நெல்லை - பார்வதி - 111 நாட்கள்
8. கொழும்பு (இலங்கை) - சென்ட்ரல் - 115 நாட்கள்
9. யாழ்ப்பாணம் (இலங்கை) - ராணி- 100 நாட்கள்
10. கோவை - ராஜா - 90 நாட்கள் [பின் 'வள்ளி'க்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு 100 நாட்களைக் கடந்தது]
11. வேலூர் - அப்ஸரா - 69 நாட்கள் [பின் 'கிரௌன்' அரங்குக்கு மாற்றப்பட்டு 100 நாட்களைக் கடந்தது]
இ. சென்னை 'சாந்தி' மற்றும் சேலம் 'ஜெயா' அரங்குகளில் மிகமிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இக்காவியம், "வசந்த மாளிகை"க்காக வேறு அரங்குகளுக்கு மாற்றப்பட்டது.
ஈ. தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே, முதல் வெளியீட்டில், முழுவதும் ஓடி முடிய, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டிய ஒரே கறுப்பு-வெள்ளைக் காவியம்.
உ. இமாலய வெற்றிக்காவியமான "பட்டிக்காடா பட்டணமா", 1972-ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் பெற்ற காவியம். 1972-ல் பாக்ஸ்-ஆபீஸில் வசூல் சாதனையில் முதலாவது இடத்தைப் பிடித்த திரைக்காவியம் "வசந்த மாளிகை".
ஊ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்தது 1972-ல் தான். அந்த இரு காவியங்கள் : "பட்டிக்காடா பட்டணமா", "வசந்த மாளிகை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.
பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 12th May 2012 at 05:51 AM.
pammalar
-
12th May 2012 05:43 AM
# ADS
Circuit advertisement
Bookmarks