Quote Originally Posted by mr_karthik View Post
அன்பு பம்மலார் சார்,

வியப்புக்கு மேல் வியப்பு ஏற்படுத்துவது உங்களுக்கு கைவந்த கலையா என்ன..?. 1964-ல் 'கர்ணன்' மகா காவியம் உருவான வரலாற்று ஏடுகளை கொஞ்சமும் எதிர்பாராவண்ணம் கர்ணனின் 101வது நாளன்று வெளியிட்டு திகைக்க வைத்துவிட்டீர்கள். படம் உருவான வரலாறு வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகிறது.

படித்தபோது மனதில் தோன்றிய சில ஆதங்கங்கள், சில கேள்விகள், சில ஐயங்கள்....

பேசும்படம் இதழில் இந்த விவரங்கள் வெளிவந்ததை அன்றைய மக்கள் படித்துத்தானே இருப்பார்கள்?. அப்படியிருந்தும், சிறுத்தையை வைத்து வித்தை காட்டியவர் பின்னால் போனார்களே அது ஏன்?.

சென்னை, மதுரை தவிர கோவை, சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, குடந்தையின் அன்றைய ரசிகர்களுக்கு எல்லாம் என்னவாயிற்று, ஏன் இப்படத்தை 100 நாட்களைக் கடந்து ஓடச்செய்யவில்லை?. இதைவிட சாதாரண படங்களையெல்லாம் ஓடச்செய்திருக்கிறார்களே. கர்ணனின் தகுதிக்கு குறைந்த பட்சம் பதினைந்து அரங்குகளிலாவது 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டாமா?.

அப்பன் பாட்டன் பட்ட கடன்களை பிள்ளைகள் தீர்ப்பது போல, தங்கள் அப்பன் பாட்டன் செய்த தவறுக்கு பிள்ளைகள் பிராயச்சித்தம் தேடும் முகமாக இன்றைய இளைய சமுதாயம், அதே கர்ணனை (சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமில்லாத) பெரிய திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓட வைத்து, மறு வெளியீட்டில் யாருக்கும் கிடைக்காத பேரை, பேறை நடிகர்திலகத்துக்கு கிடைக்க வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார்கள்.

'கர்ணன்' மறு வெளியீட்டின் 100-வது நாள் போஸ்ட்டர்கள் கண்களையும் மனதையும் வருடுகின்றன.
டியர் mr_karthik,

தங்களின் உயர்ந்த பாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!

தங்களின் வருத்தங்கள் மிகமிக நியாயமானது.

இப்பேர்ப்பட்ட மகாகாவியமான "கர்ணன்", முதல் வெளியீட்டில், நான்கு அரங்குகளில் நூறு நாட்கள் சூப்பர்ஹிட் ரேஞ்சில் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், செலவழித்த தொகைக்கு மேல் வசூல் செய்து நல்ல லாபத்தை ஈட்டியிருந்தாலும், தாங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் குறைந்தபட்சம் பத்து திரையரங்குகளுக்கு மேலாவது நூறு நாட்கள் ஓடி ஒரு "வீரபாண்டிய கட்டபொம்ம"னுக்கு ஒப்பான அல்லது அதற்கும் மேலான மெகா வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆதங்கம் நமது அன்புள்ளங்களின் அடிமனதில் ஒரு ஆறாத வடுவாகவே இருந்துவந்தது. தற்போதைய டிஜிட்டல் மறுவெளியீட்டு மெகாவெற்றி மூலம் இந்த வடு ஆறி மறைந்தேபோய்விட்டது. அன்று நூலிழையில் தவறவிட்டதை இன்று நாம் கனக்கச்சிதமாகப் பிடித்துவிட்டோம்..!

Quote Originally Posted by mr_karthik View Post
கடைசியாக ஒருகேள்வி....
தற்போது கர்ணன் வெளியான மார்ச் 16 அன்று, போட்டியாக ராயப்பேட்டை தியேட்டர் ஒன்றின் முன் நின்ற 15 பேரடங்கிய சிறு கும்பலைபார்த்துவிட்டு, 'யாரோ' கர்ணனை வென்றுவிட்டதாக எழுதிய பத்திரிகைக்காரன் இருக்கிறானா, செத்தானா?.
இந்த வரிகளை எழுதும்போது உணர்ச்சிக்கொந்தளிப்பின் உச்சத்துகே போய்விட்டீர்கள் என்பது தெரிகிறது.

இதுதான் எங்க mr_karthikன் Boxing..!

அன்புடன்,
பம்மலார்.