-
10th April 2013, 07:45 PM
#11
Moderator
Platinum Hubber

Originally Posted by
Ganpat
முடிவாக ...
அவரவர் ரசனை அவரவர்களுக்கு என்று சொல்லுங்கள்..(விட்டு) விடுகிறேன்.
எல்லாம் ஒன்றுதான்! வித்தியாசம் இல்லை என்றால்..விடமாட்டேன்.
இந்த அளவு தாட்சண்யமாகக் கூட நீங்கள் முந்தைய இடுகையில் சொல்லவில்லையே 

Originally Posted by
Ganpat
இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்
அடிக்கோடிடப்பட்ட வரியைப் பாருங்கள்: ஜில்ஜில் ஆடுவதை 'நடனம்' என்று ஒப்புக்கொள்வதிலேயே உங்களுக்குத் தயக்கம் இருக்கிறார்போல் தெரிகிறது.
அதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்தேன் (அதை எழுதப்போக ஜில்ஜில் பாத்திரத்தில் ஆழ்ந்து அவள் கல்யாணகுணங்களைப் பற்றி எழுதப்போய் குழப்பிவிட்டேன் - I didn't mean to conflate the two)
பறையிசை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வது வேறு ஆனால் உங்கள் இடுகையில் நீங்கள் பயன்படுத்திய சொற்களும் தொனியும் அதை எந்த வகையிலும் இசையாக ஏற்கமுடியாது என்ற அதீத நிராகிரிப்பு தான் தெரிகிறது. உங்கள் அபிமான எழுத்தாளரின் மிகைபாராட்டிற்கான மிகைஎதிர்வினை என்று அதை எடுத்துக்கொள்கிறேன்.
மற்றபடி பறையொலி என்பது இன்று, நீங்கள் சொல்வதுபோல, இறுதி ஊர்வலங்களோடே சம்மந்தப்பட்டாலும் அவற்றுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ராமன் முடிசூட்டு விழாவிற்கு வரும் கோலாகலக் கூட்டத்தைப் பாடும் கம்பர் பாடல்களில் ஒரு வரி
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும் தண்ணுமை
நுனியில் ஊதப்பட்டு சப்தம் எழுப்பபடும் சங்கு, நேரான குச்சியால் அடிக்கப்பட்டும் பறை
தண்ணுமை - சிறிய பறை
இவைகளும் (பிற) வாத்தியங்களும் சந்தோஷமான தருணத்தில் வாசிக்கப்பட்டன.
தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியிலும் 'ஏதமில் தண்ணுமை' என்று தொடங்கும் ஒரு பாடல் உண்டு. பகவானை எழுப்ப ஒலிக்கும் அழகான வாத்தியங்களின் அணிவகுப்பு அதில் தொடங்கும்
ஏதம் இல் தண்ணுமை - குற்றமற்ற சிறு பறை. பகவத்ப்ரீதி பெற்ற 'லூட்டி' போல இருக்கிறதே.
நிற்க, இதனால் ரமாமணி மோகனாவுக்கு இணையான கலைஞர் என்றெல்லாம் நான் சொல்லவில்
Discernment, sense of discriminaton - இவற்றை எல்லாம் நான் நிராகரிக்கவில்லை. கலைரசிகனுக்கு மிக முக்கியமானவை இவை.
எந்தக்கலைவடிவமும் அது பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் அழகுணர்ச்சியும் கலாசார vacuuமில் நிகழ்வது இல்லை. அவற்றுக்கு ஒரு பாரம்பரியமும், கால-சமூக வாழ்வியல் காரணங்களும் உண்டு. மேற்சொன்ன சூழல் காரணங்களும் அதனால் கைகூடும் ரசனைப்பயிற்சியும் வேண்டும்.
பெருந்திரளான மக்களைக் கவர்ந்த ஒரு வடிவத்தை 'அது கலையே அல்ல' என்று நிராகரிப்பதைத் தான் மிகை என்கிறேன்.
She is indeed a dancer in her own right.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
10th April 2013 07:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks