-
19th April 2013, 10:41 AM
#11
Junior Member
Newbie Hubber
வைர நெஞ்சம், தங்க சுரங்கம் பதிவுகள் வரும் போதெல்லாம்,ராஜா நினைவு வருவதை தவிர்க்க முடிவதேயில்லை. வைர நெஞ்சம் (plus நடிகர்திலகம் designer wear மற்றும் cooling glass உடன் தோன்றும் அம்மான் மகன் அழகு, நீராட நேரம் என்ற வாணியின் அபூர்வ பாடல்.
minus ஏனோதானோ என்ற continuity ,சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, நடிகர்திலகத்தின் call sheet ஐ வீணாக்கி விட்டு ஸ்ரீதர் கொடுத்த அனாவசிய dubbing உறுத்தல்.(Heron (அ )A .K .Sundar )
தங்க சுரங்கம் அலசி எடுத்தாகி விட்டது.
இனி அபூர்வ குறிஞ்சி மலர் "ராஜா"-திராவிட மன்மதனின் தோற்றம், உடை,style ,energy level ,uniqueness எல்லாவற்றிலும் முன் நிற்கும் எங்களது நெஞ்செல்லாம் நிறைந்து இனிக்க செய்யும் படம்.(jamesbond னா அடி,உதை, கவர்ச்சி, சிறிது பொழுதுபோக்கு என்பதை அடியோடு மாற்றி பார்வைக்கு பார்வை நடைக்கு நடை புதுவிதமாக ரசிக்கும் படி கொடுத்த மேதை சிவாஜி - நன்றி ஆனந்த விகடன் )
அறிமுகமே அமர்க்களம்-
விசுவத்திற்கு cigerette பற்ற வைக்கும் அழகு, தலையாட்டிய படியே அட்வைஸ், நாலு நாளா என்ற மெல்லிய நகைச்சுவை, tennis bat உடன் ராஜா என்ற போன் காட்சி, ஜெயலலிதாவுடன் முதல் சந்திப்பு குறும்பில் ஊறிய அற்புத காட்சி (பாக்க மாட்டிங்களா வைரங்களே, நீங்க ஓகே னா எனக்கு இதுவே போதும்,apple கடி),நீ வர வேண்டும் (ராஜா என்ற ஸ்டைல் திரும்பல்,சின்ன சின்ன குறும்பு gesture ), கட்டி போட்டு உதைக்கும் காட்சி(பட்டா நான் எண்ணி கிட்டே வரேன்,முகத்தை கெடுத்துராதே,தடக் தடக், முடிவில் தட்டி கொடுத்து friendship gesture போல lighter இல் படம் பிடிப்பது), ரந்தா விடம் மோதும் காட்சியில் ஆரம்ப சிகரெட் அணைக்கும் ஸ்டைலோ ஸ்டைல்,பம்பரம் போல் சுழன்று சுழன்று திரும்பும் சுரு சுருப்பான energy -இளமை -style எல்லாம் கலந்த அற்புத சண்டை காட்சி, அடி விழு முன் anxiety ridden reaction காட்டும் reflex ,ஜெயலலிதாவிடும் பொய் சொல்லும் காட்சி(இதிலும் என்ன psychological gesture ),கல்யாண பொண்ணு(ஆரம்ப step ஐயோடா என்ன
grace !!!), கண்ணனிடம் பணத்தை காட்டி தட்டி விடும் அழகு,பத்மா கன்னாவை பார்த்ததும் அடையும் சங்கடம், இரண்டில் ஒன்றில் குறும்பு-romance உச்சம்(nice ஆக செல்ல நிமிண்டல்),கடைசி காட்சியில் டென்ஷன் -ஆத்திரம்-இயலாமை -வெறுப்பு எல்லாம் கலந்த போலி சிரிப்பு என்று.
எதை சொல்லி எதை விடுவது? ராஜான்னா ராஜாதான்!!
Last edited by Gopal.s; 19th April 2013 at 10:46 AM.
-
19th April 2013 10:41 AM
# ADS
Circuit advertisement
Bookmarks