-
20th April 2013, 05:59 PM
#11
Senior Member
Diamond Hubber
அடடே ..இப்போது கமல்ஹாசனை புழுதி வாரி தூற்றும் சீசன் போலிருக்கிறது ..அடுக்கிக்கொண்டே போகிறீர்களே .. இங்கே சிலருக்கு கமல்ஹாசன் மேல் அப்படி என்ன காண்டோ தெரியவில்லை . ஆனால் சமீபத்தில் ஒளிபரப்பாகிய நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சி ஆகட்டும் , தந்தி தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி ஆகட்டும் ... தொடர்ந்து நடிகர் திலகத்தின் பெயரை , சிறப்பை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன் ..அதை கூட சிவாஜியின் பெயரை சொல்லி பயனடைகிறார் என இங்கே சிலர் சொன்னாலும் சொல்வார்கள் . ஆனால் ..சிவாஜி கணேசனை இன்றைய தலைமுறைக்கு தொடர்ந்து நினைபடுத்திக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன் ..அவரின் தொடர்ந்த நினைவுகூறல் பல இளைஞர்களை நடிகர் திலகத்தின் பால் ஈர்த்திருக்கிறது என்பது சிவாஜி ரசிகர்கள் என்ற வட்டத்துக்கு வெளியே நான் நிகழ்த்திய உரையாடல்களின் மூலம் தெரிந்து கொண்டது .
ஆகவே தேவையில்லாமல் கமல்ஹாசனை குறைசொல்லுவதை விடுத்து வேறு வழிகளில் சிவாஜி பற்றி பேசுவது நலம் பயக்கும் .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
20th April 2013 05:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks