-
9th May 2013, 03:24 PM
#11
Senior Member
Seasoned Hubber
வருக ரவிச்சந்திரன் அவர்களே...
தங்கள் முதல் பதிவே தமிழ் சினிமா மீது தங்களுக்குள்ள பிடிமானத்தையும் நம்பிக்கையும் உணர்த்துவதாயுள்ளது. அது மேலும் வலுப்பெற வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். வாழ்த்துகிறேன்.
... நடிகர் திலகத்தைப் பொறுத்த வரையில் சமகாலம் என்பதெல்லாம் இல்லை... அவருடைய நடிப்பினைப் பற்றி இங்கு இடம் பெறும் கருத்துக்கள் அவருடைய திறமையைப் பாராட்டுவதோடு நின்று விடவில்லை. சினிமா வரலாற்றிலேயே ... உலகத்தின் பல்வேறு மொழிகளிலையும் சேர்த்து .. அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதை ஆணித்தரமாக எழுதியும் வருகிறோம். திரு கோபாலின் கட்டுரையை முழுவதுாக .. அனைத்துப் பாகங்களையும் படித்து முடித்து பின்னர் தாங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்... சொல்லப் போனால் அந்த முடிவு, எங்களோடு தங்களையும் சேர்த்து விடும் என்பதே உண்மை.
மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.
நீங்கள் சொல்கிற மற்றும் இன்னும் பலர் சொல்ல நினைக்கிற அத்தனை தகுதிகளுக்கும் அதற்கும் மேலே கூட நடிகர் திலகம் தான் முன்னோடி. தங்கள் மனதில் தாங்கள் எந்த நடிகரை வரித்திருந்தாலும் அவர்கள் அனைவருக்குமே அனைத்து துறைகளிலுமே நடிகர் திலகம் முன்னோடி. தன்னுடைய தொழில் நுட்ப அறிவினைப் பற்றி வெளியில் தெரியும் அளவிற்கு அவர் பறை சாற்றிக் கொள்ளாதது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறதே தவிர அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதாக பொருள் அல்ல. ஒரு திரைப்படத்தினை உருவாக்க தேவைப்படும் அனைத்துத் துறை நுட்பங்களையும் அறிந்தவர் நடிகர் திலகம். தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்து ஒரு இயக்குநரின் நடிகராய் விளங்கியதால் தான் இன்று வரை அவருடைய சிறப்பு நிலைத்து நிற்கிறது.
1962ல் தாங்கள் நிச்சயம் பிறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படிப் பிறந்திருந்தாலும் நிச்சயம் குழந்தையாகத் தான் இருந்திருக்க முடியும். அந்தக் காலத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் அதிகார பூர்வமான அழைப்பில் அமெரிக்கா சென்று நயாகரா நகர மேயராக கௌரவிக்கப் பட்டதையெல்லாம் தாங்கள் அறிந்திருக்கலாம். இதை விட அவருடைய சிறப்பிற்கு வேறேது வேண்டும் என தாங்கள் எண்ணுகிறீர்கள்.
இவற்றையெல்லாம் இம் மய்ய இணைய தளத்தில் நடிகர் திலகத்தப் பற்றி அனைத்துத் திரிகளையும் படித்துப் பார்த்த பின் தாங்கள் புரிந்து கொள்வீர்கள்.
Last edited by RAGHAVENDRA; 9th May 2013 at 03:27 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th May 2013 03:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks