-
12th May 2013, 09:29 AM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sowrirajann Sri
தற்பொழுது தமிழ் முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகத்தின் வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் "தியாகம்"
பேஷ் பேஷ் அருமையான பதிவு.நல்லதொரு பாடல் காட்சி..
பலவருடங்களுக்கு முன் நடிகை லட்சுமி அவர்கள் இந்த காட்சியைப்பற்றி
ஒரு பேட்டியில் கீழ்கண்ட தகவல்களை பகிர்ந்துகொண்டதாக ஒரு ஞாபகம்.
" இந்த காட்சியைப்பார்த்தால் எனக்கு இரு விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.இதை நான் யாருக்கும் இதுவரை சொன்னதில்லை.அந்த உயரமான பாறை மேல் நானும் நடிகர் திலகமும் நின்று கொண்டு ஷாட்டிற்கு தயாரான போது அவர் என்னிடம் சொன்னார்,"லட்சுமி,(ஆம் அவர் என்னை அப்படிதான் அழைப்பார்).ஜாக்கிரதை!ரொம்ப ஓரமாக போய் விடாதே!"என் நெஞ்சு அப்படியே நெகிழ்ந்துவிட்டது.
இன்னொன்று... காலை 7 மணிக்கே குழுவினர் அனைவரும் அந்த காட்சியை படம் பிடிக்கத் தயாராகி விட்டோம்.ஆனால் போதிய சூரிய ஒளி இல்லை.நாங்கள் கவலையுடன் இருக்க சிவாஜி சார் மட்டும் எதோ சிந்தனையில் மெளனமாக அமர்ந்திருந்தார்.சுமார் இருபது நிமிடங்களில் சூரியன் பிரகாசிக்க எங்கள் படப்பிடிப்பு துவங்கியது.இந்த நிகழ்வையும் என்னால் மறக்கவே முடியாது."
-
12th May 2013 09:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks