-
8th June 2013, 09:14 PM
#10
Senior Member
Diamond Hubber
இனிய பாடலான இனியது இனியது உலகம்... என்ன சொல்வது! அனைவரையும் தலைவர் முழு ஆக்கிரமிப்பு செய்த முழுமுதற் பாடல். காரிலிருந்து இறக்கி விடப்பட்டவுடன் படு ஜாலியாக மவுத் ஆர்கனை வாயில் வைத்தபடி சடேலென வலது காலை சைடில் வைத்து எடுக்கும் அந்த ஆர்ப்பரிப்பான ஸ்டெப். அப்படியே இடது காலும்.
ஏ.எல்.ராகவனின் "ஹஹஹ ஹூ" அப்படியே அள்ளும். தொடர்ந்து வரும் டரடா ... டரடா...தொடர்ச்சி 'டாடோ" என்று முடியும் போது வாய் குவித்த அந்த வாயசைப்பையோ கேட்கவே வேண்டாம்.
"பருவம் போகும் வழியோடு" துவங்கும் போது தலைவர் சரியான 12 மணி வெயிலில் நடித்திருப்பார். தலைவரின் நிழல் மிகச் சிறியதாக விழும். அன்று மாலை வரை அந்தப் பாடலை ஷூட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஸ்கூல் பிள்ளைகளுடன் பாடிக்கொண்டு வருகையில், பின் இரண்டாவது சரணம் முடிந்து திரும்ப பாடல் முடிவில் பல்லவி ஆரம்பிக்கும் போது தலைவரின் நிழல் நீளமாக விழுவதைப் பார்க்கலாம். அனேகமாக மாலை 4 அல்லது 5 மணி இருக்கலாம். அன்று முழுக்க அந்தப் பாட்டை எடுத்திருப்பார்களோ! அதனால்தான் அவ்வளவு ஆழமாக நம் நெஞ்சில் பதிந்ததோ! உற்சாகமான தன்னம்பிக்கை தரும் பாடல் தலைவரின் அசத்தல் ஸ்டைல் முத்திரைகளோடு.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks