கோபால்,

என் பதிவுகளைப் பற்றிய உங்கள் நையாண்டியை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.

சுப்பு,

ராஜ ராஜ சோழன் படத்திற்கு அல்லது அந்த கதாபாத்திரத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டமாக சில வரலாற்று குறிப்புகளை கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சின்ன nit picking. உங்கள் முதல் வரியின் சரியான வார்த்தைகள் என்னவென்றால்

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று

ஆனை கட்டி போரடித்த அழகான தென்மதுரை

என்று எங்கள் பாண்டிய நாட்டு பெருமையை, எங்கள் மதுரையம்பதியின் பெருமையை பறை சாற்றும் சொற்றொடர்.

சோழ வளநாடு சோறுடைத்து என்றுதான் சொல்வார்களே தவிர நீங்கள் குறிப்பிட்ட வரிகள் பாண்டிய நாட்டுக்கு சொந்தமானது.

இவ்வளவு ஏன், உங்களுக்கு மிகவும் பிடித்த, நீங்கள் எப்போதும் உதாரணம் காட்டும் CBI ஆபிஸர் ராஜன் பாடும் வரிகள் நினைவிற்கு வரவில்லையா?

ஆனை கட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்

பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்

தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்

திருக்கோவில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்

(தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்)

அன்புடன் .

வழக்கம் போல் கோபால் History, Geography, Archaeology என்றெல்லாம் கிண்டலடித்தாலும் மதுரையை விட்டுக் கொடுப்போமா?