-
24th November 2013, 01:10 PM
#11
Junior Member
Devoted Hubber
மீண்டும் வருகிறது நாயகன் - 2
1987ஆம் ஆண்டு வெளிவந்து வரலாற்று பாடமான படம் நாயகன். உலக அளவில் பெரும்புகழ் பெற்ற படமிது. இந்த படத்திற்காக கமல் இரண்டாவது முறையாக தேசியவிருது பெற்றார். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த மணிரத்னம், இழந்த பெயரை காக்க இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளார். கதை ரெடி செய்து கமல்ஹாசனிடமும் ஓகே வாங்கி விட்டாராம். இந்த படத்தில் கமல் தந்தை, மகன் ஆகிய இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார். தந்தை கமலுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப்பின் ஸ்ரீதேவி நடிக்கிறார்.
ஆச்சரியமான தகவல் என்றால் நாயகன் இரண்டாம் பாகத்திற்கு இளையராஜாவே இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் மணிரத்னம் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். மகன் கமலுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கமல்ஹாசனின் உத்தமவில்லன் படம் முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தகவல் கூறுகிறது
(kamal 360º fb)
-
24th November 2013 01:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks