-
21st May 2014, 11:27 PM
#11
Junior Member
Platinum Hubber
என் அண்ணன் - ஒரு சிறப்பு பார்வை.
--------------------------------------------------------------
சிறிய தலைப்பு. பிரம்மாண்ட படைப்பு . வெளியான தேதி.21/05/1970
44 ஆண்டுகள் நிறைவு அடைந்தது.
வீனஸ் பிக்சர்சின் முதல் வண்ண படம்.
படத்தின் ஆரம்ப காட்சியில் , நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு பாடலுக்கு
புரட்சி நடிகரின் வீரம் செறிந்த நடிப்பு , உற்சாகமூட்டும் அங்க அசைவுகள்
அபாரம். அரங்கம் அப்போதே அதிர்ந்தது .
இனிமையான பாடல்கள்.கே.வி. மகாதேவன் இசைஅமைப்பு அருமை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் தங்கை விஜயநிர்மலாவிடம்
காட்டும் பாசம், பரிவு தன இயல்பான நடிப்பால் ரசிகர்கள் உள்ளத்தை
கொள்ளை கொண்டார்.
நகைச்சுவை காட்சிகளில் சோ , கீதாஞ்சலியுடன் நடத்தும் சேட்டைகள் ,
கடி ஜோக்குகள், அப்பாவி மாப்பிள்ளை வேடம் கன கச்சிதமாகவும் ,
கல கலப்பாகவும் இருந்தது.
அசோகன் , நம்பியார் இரு வில்லன்களை மோதவிடும் காட்சிகள் புதுமை.
முத்துராமன்- விஜயநிர்மலா - கண்ணுக்கு தெரியாத இன்ப சுகம் - இதமான
காதல் காட்சிகள்
நீல நிறம் -வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்--புரட்சி நடிகர் இளமையாக
தோன்றும் தேனான காதல் பாடல்.
கடவுள் ஏன் கல்லானான் - உணர்சிகரமான தத்துவ பாடல்.
ஆயிரம் எண்ணம் கொண்ட மானிட ஜாதி - வயது வந்த இளைஞனை
போல் துள்ளி குதித்து ஆடும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா அவர்களின் நடன அசைவுகள் அபாரம்.
சலக்கு சலக்கு சிங்காரி - எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத
பாடல் காட்சி . மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். அவர்கள் இந்த பாடலில் வேட்டி , தலையில் துண்டுடன் மிகவும் வித்தியாசமான முறையில்
தனது நடன திறமைகளை காண்பித்து ரசிகர்களை பரவசபடுத்தினார்
ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு - நடிகர் சோ, கீதாஞ்சலியுடன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆடல், பாடல், காட்சிகள்
நெஞ்சில் நிறைந்தவை.
சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது. குறிப்பாக ஜஸ்டினுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மோதும் காட்சிகள் படு சூப்பர்.
சேலம் அலங்காரில் இப்படத்திற்கு 60 அடி உயர கட் அவுட் வைத்தது
சிறப்பு அம்சம்.
சென்னையில் ஸ்ரீகிருஷ்ணாவில் 3-ம் நாள் ஞாயிறு காலை காட்சி முதன்
முதலாக பார்த்தேன். பின்பு மேகலாவிலும், மிட்லண்டிலும் பார்த்தேன்.
மிடலண்டில் 105 நாள். மற்றும், மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில்
100 நாள் ஓடியது. ஸ்ரீ கிருஷ்ணாவில் 86 நாள் ஓடியது.
மறுவெளியீடுகளில் சக்கை போடு போடுகின்றது.
ஆர். லோகநாதன்.
-
21st May 2014 11:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks