Page 167 of 400 FirstFirst ... 67117157165166167168169177217267 ... LastLast
Results 1,661 to 1,670 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1661
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் ராஜேஷ் சார்,

    தங்களின் அருனையான தகவல் பதிவுகளுக்கு நன்றி. கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' பாடலின் காணொளிக்கும் நன்றி. (முத்துராமன் திரியில் ராகவேந்தர் சார் 'கண்ணம்மா' முழுப்பட வீடியோவையும் கொடுத்துள்ளார். பார்த்து இன்புறவும்)

    கண்ணம்மா பற்றிய என்னுடைய கட்டுரையை இத்திரியில் மீள்பதிவு செய்த அன்பு வாசு சாருக்கும் நன்றி...
    கார்த்திக் மற்றும் வாசு சாருக்கு நன்றி.
    கண்ணம்மா பாடல்களை கேட்டிருந்தாலும் இந்த பாடல் சற்று வித்தியாசமாகவும் கேரள மாப்ள பாடல்கள் தொனியில் வேடமும் பாடலும் அமைந்தது மனதை கவரத்தான் செய்தது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1662
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    காதலுக்கு அடுத்தபடி இந்தியத் திரைப்படங்களில் முக்கியத்துவம் பெறும் சென்டிமெண்ட் அண்ணன் தங்கைப் பாசம். பேசாப் படங்களின் காலத்தில் கூட இடம்பெற்ற இந்த சென்டிமென்ட், பின்னர் தமிழ், இந்தித் திரைப்படங்களின் வெற்றி சூத்திரங்களில் ஒன்றாகக் காலம்தோறும் கையாளப்பட்டு வந்திருக்கிறது.

    காட்சியமைப்பின் அடிப்படையில் பல சிறந்த அண்ணன் - தங்கைப் படங்களைப் பட்டியலிடுவது சாத்தியம் என்றாலும் பாடல்களைப் பொறுருத்தவரை, ஒப்பீடு இல்லாத பாடல் என்று தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு பாடலை மட்டுமே கூற முடியும் என்பது மிக்க வியப்புகுரியது.

    அண்ணன்-தங்கைப் பாசத்தைப் பிழிந்து எடுத்துப் பேழையில் வைத்த, கண்ணதாசனின் ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்ற பாசமலர் படச் சொல்லடுக்குத் தமிழ்ப் பாட்டுக்கு நிகராகச் சோகம் அக்கறை ஆகிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்திப் பாடல் நீண்ட காலம் இல்லாமல் இருந்தது.

    தமிழ்த் திரைப்படம் வெளிவந்த வெகு காலத்திற்குப் பின்னர் தேவ் ஆனந்த் ஜீனத் அமன் நடிப்பில் ஆர்.டி. பர்மன் இசையில் ஆனந்த பக் ஷி எழுதிய ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்ற படத்தின் பாடல் மூலம் அந்த குறை நீங்கியது.

    அந்தப் பாடல் இதுதான்...

    ஃபூலோன்-கா, தாரோன்-கா ஸப்கா கஹ்னா

    ஹை ஏக் ஹஜாரோன்-மே, மேரி பஹனா ஹை.

    சாரி உமர் ஹமே சங் ரஹனா ஹை.

    ஜப்ஸே மேரி ஆங்க்கோன் ஸே ஹோ கயீ து தூர்

    தப்ஸே ஸாரே ஜீவன் கே ஸப்னே ஹை சூர்

    ஆங்க்கோன் மே நீந்த் நா, மன்மே ச்சேனா ஹை.

    ஏக் ஹஜாரோன்....

    இதன் பொருள்.

    மலர்கள், நட்சத்திரங்கள் கூறுகின்றன

    ஆயிரத்தில் ஒருத்தி என் தங்கை

    வாழ்க்கை முழுவதும் நாம் ஒன்றாய்

    இருக்க வேண்டியவர்கள்.

    எப்பொழுது நீ என் கண்களிலிருந்து தொலைவில் சென்றாயோ

    அப்பொழுதே வாழ்வின் எல்லாக் கனவுகளும் நொறுங்கிவிட்டன.

    விழிகள் உறங்கவில்லை மனதின் நினைவு இல்லை.

    மலர்கள் பார், நாம் இருவரும்

    ஒரு கொடியின் இரு மலர்கள்,

    நான் (உன்னை) மறக்கவில்லை

    நீ எப்படி என்னை மறந்து போனாய்

    வா என் அருகில், சொல் உனக்கு என்ன என்ன சொல்ல வேண்டுமோ (அதை)

    மலர்கள்...

    வாழ்க்கையின் துக்கங்களைக் கண்டு

    இப்படிப் பயப்படலாகாது

    உண்மைகளிலிருந்து இப்படி

    ஒளிந்து ஓடக் கூடாது .

    சுகத்தை விரும்பினால் துக்கத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்

    மலர்கள், நட்சத்திரங்கள் கூறுகின்றன

    ஆயிரத்தில் ஒருத்தி என் தங்கை.

    இப்பொழுது,

    மிகையான கவி அழகுடன் அமைந்த கண்ணதாசனின் பாசமலர் படப் பாடல்.

    மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

    அண்ணன் வாழ வைப்பான்

    என்று அமைதி கொண்டாள்

    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

    மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை

    மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்

    மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்

    மணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான்

    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில்

    பறந்து சென்றான்

    ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்

    அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்

    வாழிய கண்மணி வாழிய என்றான்

    வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்

    (கலைந்திடும் கனவுகள்)

    பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்

    பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்

    மாமனைப் பாரடி கண்மணி என்றாள்

    மருமகள் கண்கள் தன்னில்

    மாமன் தெய்வம் கண்டாள்

    மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று

    அமைதி கொண்டாள்

    கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்

    அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்.

    இரு மொழிகளிலும் பாடலின் சந்தர்ப்பங்களும் அவற்றின் பின்னணிகளும் மிகவும் வேறு பட்டிருந்தாலும் தங்கை மீது கதாநாயக அண்ணன் வெளிப்படுத்தும் கலப்பில்லாத எல்லையற்ற பாச உணர்வின் அடிப்படையில் இரு மொழிப் பாடல்களும் இணைந்திருப்பது கவனிக்கத் தக்கது. கண்ணதாசனின் வரிகள் அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு தெய்விகத் தன்மையை அளித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

  4. #1663
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post


    நூல்வேலி 1979
    பாலசந்தர் இயக்கம்
    சரத்பாபு சுஜாதா சரிதா நாராயண ராவ் (நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் ஜெயசுதாவின் கணவர் ரஜனிக்கு கார் டிரைவர்), ரமணமுர்த்தி(சங்கராபரணம் சோமயாஜுலு சகோதரர்) ,அனுமந்து நடித்து வெளி வந்த திரை படம்
    மெல்லிசை மன்னர் இசை
    இதே படம் குப்புடு மனசுடு என்று தெலுங்குலும் வெளியானது
    நினைத்தாலே இனிக்கும் (ஏப்ரல் 1979) திரைப்படத்திற்கு பிறகு வந்த திரை படம்
    கதை பயங்கர வி(வ)காரமான கதை . பாலச்சந்தரின் பல சீனியர் ரசிகர்கள் அவரை perverted என்று சொல்ல ஆரம்பித்த படம்
    ஏற்கனேவே புன்னைகை,அரங்கேற்றம் போன்ற திரை படங்களில் இந்த புகார் எழுந்தது.
    சரத்பாபு சுஜாதா கணவன் மனைவி
    சரத்பாபு கட்டிட வல்லுனுர் .சுஜாதா நாவல் ஆசிரியை மற்றும் திரை பட தணிக்கை குழு உறுப்பினர் . அவர்களுக்கு பக்கத்துக்கு வீடு ஒரு சீனியர் நடிகை (இவர் நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் கமலுக்கு அம்மா
    ) மற்றும் அவரது மகள் சரிதா . சரிதா வெகுளி பெண் . நீண்ட நாட்கள் திரை துறையை விட்டு விலகி இருக்கும் சரிதாவின் அம்மாவிற்கு மீண்டும் திரை துறையில் (கமலுடன் நடிக்க ) சான்ஸ் கிடைக்கும்.ஆனால் எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஆரம்ப தினத்தன்று சரிதாவின் அம்மா இறந்து விடுவார். இதனால் அனாதை ஆகும் சரிதாவிற்கு சுஜாதா சரத்பாபு தம்பதியினர் பாதுகாவலர்கள் ஆக மாறுவார்கள் .சரிதா சுஜாதாவை அக்கா என்றும் சரத்பாபுவை மாமா என்றும் அழைக்க ஆரம்பிபார். சுஜாதாவின் தம்பி (நாராயண ராவ் ) வெளிநாட்டில் இருக்கும் டாக்டர் .அவர் சரிதாவை நேசிக்க ஆரம்பிபார் இந்த நிலையில் ஒரு நாள் மாலை மழை நேரத்தில் சரத்பாபுவின் நெருக்கத்திற்கு சரிதா ஆளாவார். இது கற்பழிப்பு அல்ல இரு மன இணைப்பு. அதே நேரத்தில் சுஜாதா ஒரு திரை படத்திற்கு (வளர்ப்பு தந்தை அவருடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்வது போல் இருக்கும்) 'இது ஒரு சமுதாய கேடு இதை அனுமதிக்க முடியாது' என்று கூறி அனுமதி மறுத்து விட்டு ,பள்ளியில் படிக்கும் தன மகளை கூட்டி கொண்டு தன வீட்டிற்கு வருவார் .வந்து கதவை திறந்தால்
    'சரத் சரிதா ஏடாகூடம் - சோலி முடிந்தது'
    மூவரின் மன போராட்டம் (மௌனத்தில் விளையாடும் மனசாட்சி)
    சுஜாதா தன தந்தை (ரமணமுர்த்தி) இடம் எல்லா உண்மையையும் கூறி அவரிடம் இதற்கு நல்ல முடிவு ஒன்று கூறுமாறு கேட்பார் . ஆனால் அவரோ இதற்கு என்னால் முடிவு சொல்ல இயலாது என்று மறுத்து விடுவார். பிறகு தன கணவர் சரத்பாபுவிடம் வாக்குவாதம் செய்வார் .
    அவரோ "தான் ஒரு சாதாரண மனிதன் எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் " என்று அவரோடு ஓத்துழைக்க மறுத்து விடுவார் .இதற்கு நடுவில் வெளிநாட்டில் இருக்கும் அவரது தம்பி எல்லா விவரங்களையும் அறிந்த பின்னும் சரிதாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சொல்வார் .அவரிடமும் சுஜாதா வாக்குவாதம் செய்வார் . இந்நிலையில் சரிதா கர்ப்பம் ஆகி ஹைதராபாத் சென்று குழந்தையை பெற்றுகொள்வார் .இறுதியில்
    சுஜாதாவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வார் .

    இதே பாலசந்தர் 'கல்யாண அகதிகள்' திரை படத்தில் தற்கொலை முடிவு அல்ல என்று கூறுவார் .

    'இது நல்ல படமா மோசமான படமா '
    'வெற்றி படமா தோல்வி படமா '

    (நாயகன் கமல் ) தெரியலேப்பா

    ஆனால் மெல்லிசை மன்னரின் இனிமையான பாடல்கள்

    1.பாலா வாணி LR அஞ்சலி குரல்களில் கோல்டன் பீச் location
    family outing அண்ட் gettogether ஒரு நல்ல பாடல்

    (மெல்லிசை மன்னர் குழுவின் தபேலா மாஸ்டர் நயம் அக்மார்க் ஜீவன் brand ரவையை குழைத்து தேச்சு இருப்பார் போல .நச்னு இருக்கும் )

    நானா பாடுவது நானா ... நானும் இளவயது மானா
    வெரிகுட் (பாலாவின் குரல்)
    ஹ ... ஹ ..ஹ ..(சிரிப்பு).. (பாலாவும் வாணியும் இணைந்து)

    நானா பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா

    இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
    உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
    இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
    உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்

    நானா
    ஹா
    பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....

    (அஞ்சலியின் அருமையான ஹம்மிங்)
    ப ப பா ப ப பா ...ரப பபப்பா ..ப ப பா ப ப பா ரபபபப்பா ..
    ருருறு ..ரம்பப ரம்பப ரம்பப ரம்
    ரம்பப ரம்பப ரம்பப ரம் ...ரம்பப ரம்பப ரம்பப ரம்

    (தபேல இசை ) பின் violin இசை
    சரணம் 1

    கோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது
    நல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை

    ஹஹஹஹ்ஹா ..(பாலாவின் சிரிப்பு)

    (அஞ்சலியின் அருமையான மூச்சு முட்டும் ஸ்வரம்)
    நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி
    பபதத ததத மமபப பபபப
    மபம , பதப , தநிதத நிஸநி தநிபா

    கோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது
    நல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை

    தாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே
    தாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே
    நீயும் தாயல்லவா , இதில் ஏனோ சந்தேகமே
    இதில் ஏனோ சந்தேகமே
    (தபேல இசை )
    நானா
    ம்
    பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....

    அஞ்சலி ஹம்மிங்
    டிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங் டிண்டிகுடிங்
    டிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங்

    இடை இசை மீண்டும் தபேலா violin கலந்து
    சரணம் 2
    கவிஞன் சொல்லாததோ .... தமிழ் கவிதை காணாததோ
    இதில் எதை நான் சொல்வேனம்மா
    இந்த சபையை வெல்வெனம்மா

    பாலா அஞ்சலி இணைந்து மீண்டும் ஸ்வரம்
    நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி
    பபதத ததத மமபப பபபப
    மபம , பதப , தநிதத நிஸநி தநிபா

    கவிஞன் சொல்லாதோ ...தமிழ் கவிதை கானாததோ
    இதில் எதை நான் சொல்வேனம்மா
    இந்த சபையை வெல்வேனம்மா

    நீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்
    நீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்
    பாடும் ஆசைவந்தால் எந்த பாட்டும் சபையில் வரும்
    எந்த பாட்டும் சபையில் வரும்
    (தபேலா)
    நானா
    ஹ ..ஹ ..ஹ
    பாடுவது நானா .... நானும் இளவயது மானா
    இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
    உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
    நானா .... பாடுவது நானா .... நானும் ... இளவயது மா .னா ..



    2. பாலமுரளி கிருஷ்ணா குரலில் சாமா ராக பாடல்

    மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)
    ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
    காரியம் தவறானால் கண்களில் நீராகி
    மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
    மனசாட்சியே

    ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)
    சோதனைக்களம் அல்லவா?
    நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
    ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
    ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)

    (மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

    உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)
    யாருக்கும் நீயல்லவா
    நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
    ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
    யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)
    (மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

    ஒரு நாள் வீட்டில் கண்ணதாசன் தன் பூட்டிய அறைக்குள் இந்தப் பாடலை மட்டும் மீண்டும்,மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டிருந்தாராம். அவருக்கு என்ன கஷ்டமோ




    3.3.பாலா வாணி குரல்களில் ஒரு அருமையான டூயட் கனவு பாடல்
    நாராயண ராவ்விற்கும் சரிதாவிற்கும்
    (இந்த பாட்டில் மெல்லிசை மன்னர் இடை இசையில் இன்ஸ்ட்ருமென்ட் சும்மா டம் டம் னு பின்னி எடுத்து இருக்கும். மிருதங்க சத்தமும் தபேலா சத்தமும் சேர்ந்த மாதிரி . நினைத்தாலே இனிக்கும் படத்தில் கூட இந்த இன்ஸ்ட்ருமென்ட் அடிகடி அடிகடி ஓலிக்கும்)

    SPB:வீணை சிரிப்பு
    ஆசை அழைப்பு
    வேதம் பாடட்டுமா ?
    மாலை மயக்கம்
    என்னை மயக்கும்
    மஞ்சம் நாளாகுமா ?
    வீணை சிரிப்பு
    ஆசை அழைப்பு
    வேதம் பாடட்டுமா ?
    மாலை மயக்கம்
    என்னை மயக்கும்
    மஞ்சம் நாளாகுமா ?
    பூசிய சந்தனம்
    மார்பினில் சாய்ந்ததும்
    கன்னம் தடமாகுமா ?
    பூசிய சந்தனம்
    மார்பினில் சாய்ந்ததும்
    கன்னம் தடமாகுமா?
    பொங்கிய குங்குமம்
    செங்கனி வாய் இதழ்
    எங்கும் விளையாடுமா ?
    பொங்கிய குங்குமம்
    செங்கனி வாய் இதழ்
    எங்கும் விளையாடுமா ?

    VJ:விழி ஓரங்கள்
    கதை பேசுமோ ?
    தேன் அமுதினில் மழை வர
    நாதங்கள் உருவாகுமோ ?

    SPB:அழகிய திருமுகமதில்
    நாணங்கள் விளையாடுமோ ?
    இடை எனும் சிறு கொடிதனில்
    வானங்கள் கவிபாடுமோ ?

    VJ:வீணை சிரிப்பு
    ஆசை அழைப்பு
    வேதம் பாடட்டுமா ?
    மாலை மயக்கம்
    என்னை மயக்கும்
    மஞ்சம் நாளாகுமா ?

    VJ:மன்மத மந்திரம்
    மாலையில் கேட்டதும்
    எண்ணம் அலையாகுமோ
    மங்கள நாடகம்
    பள்ளியில் வந்ததும்
    பெண்மை விலையாகுமோ
    மங்கள நாடகம்
    பள்ளியில் வந்ததும்
    பெண்மை விலையாகுமோ

    SPB:ரதி நேர் வந்து
    மலர் தூவுமே
    ஒரே ரகசிய கவிதையில்
    ஆனந்தம் கலைஆகுமஎ

    VJ:இலையோடு மலரென தினம்
    உள்ளங்கள் உறவாடுமோ
    இருவரும் ஒரு நிலை பெற
    கீதங்கள் துணையாகுமோ

    SPB:வீணை சிரிப்பு
    ஆசை அழைப்பு
    வேதம் பாடட்டுமா ?

    VJ:மாலை மயக்கம்
    என்னை மயக்கும்
    மஞ்சம் நாளாகுமா ?



    4.பாலாவின் சோலோ
    தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் (2)
    காவிரி பொங்கிடும் நீரோட்டம் ,
    கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

    தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
    காவிரி பொங்கிடும் நீரோட்டம் ,
    கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

    பொண்ணாட்டம் அங்கு பெணாட்டம்
    என் கணோட்டம் ஒரு வெளோட்டம் (2)
    சின்ன சின்ன நடை திண்டாட்டம்
    அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம் (2)

    தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
    காவிரி பொங்கிடும் நீரோட்டம்
    கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

    பூந்தோட்டம் ,(ஒரு இனிமையான flute )
    பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
    பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம் (2)
    வண்ன வன்ண முகம் பாலாட்டம்
    அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம் (2)

    தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
    காவிரி பொங்கிடும் நீரோட்டம்
    கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...

    சேலாட்டம் விழி சீராட்டும்
    இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும் (2)
    என்ன என்ன சுகம் உளோட்டம்
    எனை இந்திர லோகத்தில் தாலாட்டும் (2)

    தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
    காவிரி பொங்கிடும் நீரோட்டம்
    கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...
    sujatha .. what an actress.. top class acting.. subtle & strong = Sujatha..

  5. #1664
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    50களிலும் 60களிலும் பல நல்ல படங்கள் தமிழில் இருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன

    அப்படி ஒரு படம் தான் சபாஷ் ராமு (தெலுங்கில் சபாஷ் ராமுடு)

    இதில் பல நல்ல பாடல்கள் உண்டு இருந்தாலும் டப்பிங் பாடல் போல் இல்லாமல் மிகவும் அருமையாக அமைந்த பாடல்

    ஏ.எம்.ராஜாவும் சுசீலாவும் இசைத்த கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே

    திரையில் சித்திரம் பேசுதடி மாலினியும், ரமணமூர்த்தி(சோமயாஜுலுவின் இளைய சகோதரர்) ..




    இதன் தெலுங்கு வடிவம்
    இசையரசியுடன் கண்டசாலா அவர்கள்

    Attached Images Attached Images

  6. #1665
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி ராஜேஷ் அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு

    'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
    அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
    ஆனந்தம் தேடுதே'

    1959-ல் வெளிவந்த உடுமலை நாராயணகவி இயற்றிய 'மஞ்சள் மகிமை' படத்தில் ஒலிக்கும் பாடல். இப்படத்திற்கு இசை 'மாஸ்டர்' வேணு என்று நினைவு. ராஜேஷ் கொடுத்துள்ள 'சபாஷ் ராமு'(டு) படத்திற்கு இசை கண்டசாலா அவர்கள். இதுவும் 1959-ல் வந்த படம்தான்.

    இரு பாடல்களும் கேட்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி டியூனில் இருப்பதை உணர முடியும். ஆனால் இரண்டும் இனிமைதான். 'மஞ்சள் மகிமை' தமிழில் நேரிடையாகவும் எடுக்கப்பட்டதால் 'ஆகாய வீதியில்' இன்னும் அருமையாக இருக்கும்.

    Last edited by vasudevan31355; 12th July 2014 at 05:27 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1666
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நன்றி ராஜேஷ் அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு

    'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
    அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
    ஆனந்தம் தேடுதே'

    1959-ல் வெளிவந்த உடுமலை நாராயணகவி இயற்றிய 'மஞ்சள் மகிமை' படத்தில் ஒலிக்கும் பாடல். இப்படத்திற்கு இசை 'மாஸ்டர்' வேணு என்று நினைவு. ராஜேஷ் கொடுத்துள்ள 'சபாஷ் ராமு'(டு) படத்திற்கு இசை கண்டசாலா அவர்கள். இதுவும் 1959-ல் வந்த படம்தான்.

    இரு பாடல்களும் கேட்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி டியூனில் இருப்பதை உணர முடியும். ஆனால் இரண்டும் இனிமைதான். 'மஞ்சள் மகிமை' தமிழில் நேரிடையாகவும் எடுக்கப்பட்டதால் 'ஆகாய வீதியில்' இன்னும் அருமையாக இருக்கும்.

    ஆம் மஞ்சள் மகிமையில் எல்லா பாடல்களுமே அருமை . நாராயணகவி நீண்ட நாட்களுக்கு பின் இயற்றிய பாடல்கள்
    ஆம் தெலுங்கு இசையமைப்பாளர் மாஸ்டர் வேணு தான் இசை

    வரிகள் அற்புதம்... “ கண்மனி தாரகை உன்னை கைவிடேன் என்றே “ ..

    இந்த பாடல் முடிந்ததும் ரங்காராவ் மற்றும் சி.கே.சரஸ்வதி வந்துவிடுவார்கள் உடனே தங்கவேலுவும் சாவித்திரியும் இதே பாடலை வேறு வார்த்தைகளுடன் பாடுவார்கள் (பின்னாலிருந்து நாகேஸ்வரராவ் குரல் கொடுப்பார் தங்கவேலுவிற்கு)

    இதோ அதையும் கண்டு களியுங்கள்

    பாடல் 4:08’ல் ஆரம்பிக்கும்


  8. #1667
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு மனது கேட்கவில்லை. நான் வதை பட்டாலும்,அந்த திரி சிதை படுவது காண சகிக்கவில்லை.என் பிற நண்பர்களை போல் என் மனம் இன்னும் முழு கல்லாகவில்லை.அப்படியே கல்லாக மாற்றினாலும் ,அந்த நடிக ராமபிரானின் நினைவு என்ற பாதம் பட்டு இந்த கல் உயிர்த்து விடுகிறதே என்ன செய்ய? .
    Last edited by Gopal.s; 12th July 2014 at 08:55 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1668
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    யுகேஷ் பாபு,

    மலர்களை போல் பாட்டில் முத்திரை வரிகள் "பூ மனம் கொண்டவள் பால் மனம் கண்டாள் ".இதற்கு ஈடாக இந்தி கவிஞர்கள் கிடையாது.

    ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா மலர்ந்ததம்மா பாட்டை எப்படி மறந்தீர்கள்?

    இதே படத்தில் இடம் பெற்ற மயங்காத மனம் யாவும் மயங்கும் என்னுடைய favourite .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #1669
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டி.எம்.எஸ்.-பீ.பீ.எஸ் இணைந்து பாடி கலக்கிய பாடல்களில் உங்கள் பிடித்தம் என்று யாராவது கேட்டால்.... ப்ளீஸ் ....வெயிட்..... அவரச பட்டு பொன்னொன்று கண்டால் நான் எப்படி பொறுப்பாக முடியும்?நீங்கள் கவலை பட்டு யோசிக்க வேண்டாம். "கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு " பாடல்தான்.


    உரிய இடத்தை அடையாத மூன்று உன்னத காவியங்கள் எல்லாம் உனக்காக,பந்த பாசம்,வளர்பிறை.பந்த பாசம் ,சாந்தி picture பெரியண்ணாவின் முதல் படம். அருமையான நட்சத்திர அணிவகுப்பு,பீம்சிங்,வலம்புரி சோமநாதன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி இவ்வளவும் இருந்தும் ,ஏன்தான் சோடை போனதோ?இவ்வளவிற்கும் படமும் நல்ல படம்.

    என்னை யாராவது டி.எம்.எஸ் -பீ.பீ.எஸ் இணைவில் சிறந்த பாடல் எது என்றால் கவலைகள் கிடக்கட்டும் என்பேன்.சீர்காழியின் மிக சிறந்த பாடல் எது என்றால் நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ என்பேன். சுசிலாவின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றாக தண்ணிலவு தேனிறைக்க பாடலை தேர்வு செய்வேன். பீ.சுசிலா-எல்.ஆர்.ஈஸ்வரி இணைவில் வந்த மிக சிறந்த பாடல்களில் ஒன்றாக சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ பாடலை தேர்வு செய்வேன்.

    திரும்பி அவசரம் உங்களுக்கு .... அத்தனை பாடல்களும் இரட்டையர் என்று குதிப்பீர்கள். உண்மை....ஆனால் அது மட்டுமே உண்மை இல்லை. இத்தனை பாடல்களுக்கும் பாடலாசிரியர் கவிஞர் மாயவ நாதன்.இத்தனைக்கும் தெலுங்கு.உருது,ஹிந்தி,அரபிக் போல இசைக்கு இசையா கடின வீர மொழி என்று பெயர் பெற்றது தமிழ்.
    ஆனால் சில கவிஞர்களே அதை இசைக்கு இசைவாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தார்கள்.அதில் தலையாய துரதிர்ஷ்டசாலிகள் அகால மரணம் எய்திய பட்டுகோட்டையார், தலைவணங்கா தன்மானத்துடன் தனித்து நின்ற சுரதா,நான் கவிஞனடா என்னையும் மதிக்க கற்று கொள் என்று இசையமைப்பாளர்களுக்கு சவால் விட்ட மாயவ நாதன் உரிய இடத்தை அடையாத மூன்று உன்னத கவிஞர்களே.

    மாயவ நாதன் மாதிரி ஒரு கவிஞன் இனி பிறப்பது இல்லை.

    இசைக்கு இசைவான சொல் நயம்,சொல்லுக்காக பொருளை இழக்காத மதி நயம்,மதிக்காக பட கருத்தில் வெளியே தாவாத அமைப்பு நயம், குரலுக்கு இசைவான தோதான வரி நயம் ,வரிக்காக எந்த வரிசையிலும் நிற்காமல் அரிதான கற்பனை நயம் என்று இந்த கவிஞனை போற்ற வார்த்தைகளே இல்லை.

    பெரும்பாலோர் வெற்றியின் பின்னால் வால் பிடித்து ஓடுவர்.ஆனால் தோல்விகளுக்கு பின்னால் உள்ள மேதைகளின் திறமையை சொல்வதுதானே நேர்மை?வாய்மை? ஆஹா கண்ணதாசா.....ஆஹா வாலி என்று சொல்ல லட்சகணக்கில் மந்தைகள் உள்ள போது ,அதில் ஒரு ஆடாவது வேறு பாதையில் போக வேண்டாமா?


    கண்ணதாசன் அத்தனை பாடல்களும் எழுதி கலக்கிய படித்தால் மட்டும் போதுமாவில் ஒரே பாடலில் ஜெயித்த கவிஞன்,வாலி அத்தனை பாடல்களும் எழுதிய இதயத்தில் நீ படத்திலும் கிடைத்த ஒரே பாடலில் முதல் பதக்கம் வாங்கிய கவிஞன்,தனக்கு முழு வாய்ப்பு கிடைத்த பந்த பாசத்தில் அத்தனை பாடல்களையும் முத்திரை ஆக்கிய முத்திரை புலவன் மாயவ நாதன் மாயம் அறிய......





    Last edited by Gopal.s; 12th July 2014 at 09:06 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1670
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    கோபால் சார். ஆம் மாயவ நாதன் என்ன அருமையான கவிஞர். அதே போல் தான் விந்தன் அவர்களும்

    இதோ முகனூலில் நான் பாடலாசிரியரை அறிவோம் தொடரில் திரு மாயவனாதன் குறித்து எழுதியது.. பதிவுகளின் நடுவில் இது தவறு என்றால் நீக்கிவிடுகிறேன்


    இதோ எனது கட்டுரை

    ================
    பாடலாசிரியரை அறிவோம் 10- கவிஞர் மாயவநாதன்

    சத்தியமாக இன்றைய தலைமுறைக்கு தெரியாத பாடலாசிரியர் இவர்.

    குறுகிய காலத்தில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன்.எந்த விளம்பரமும் இல்லாததால் மறைந்தே ஆம் நாம் மறந்தே போன கவிஞர் இவர்.
    பணம் எவ்வளவு தந்தாலும் அது பெரிதல்ல தன் மானமும் கவிதையும் பெரிது என்று முழக்கமிட்ட கவிஞர் இவர்.

    சொந்த ஊர், நெல்லை மாவட்டத்திலுள்ள பூலாங்குளம்.காளிபக்தர் , சில சித்தர்களுடன் நெருக்கமாக பழகி வந்தவர்.

    படத்தயாரிப்பாளர் தேவரின் வேண்டுகோளை ஏற்று, மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை மாயவநாதன் எழுதிக்கொடுத்தார்.

    அவரது அழியாப் புகழுக்கு அந்தக் கல்வெட்டு ஒரு நல்ல அடையாளமாகும்.


    நடிகை சந்திரகாந்தாவின்( நடிகர் சண்முகசந்தரத்தின் சகோதரி,ஆம் கலைக்கோயில் போன்ற படங்களின் கதாநாயகி)நாடகக்குழு அப்போது மிகவும் பிரசித்தம்.
    அந்தக் குழுவினரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் திரையுலகின் கவனத்தைக் கவர்ந்தவர் மாயவநாதன்.

    அப்படி நுழைந்தார் திரையுலகில்.. இவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை சொற்பமே ஆம் 23௨5 பாடல்களே என்றாலும் அத்தனையும் முத்துக்கள் , கருத்தாழமிக்க பாடல்கள்

    இன்றும் இவர் பேர் சொல்லும் பாடல் என்றால் அது இவரது முதல் பாடல்.
    ஆம் “படித்தால் மட்டும் போதுமா” படத்தில் இவர் குளிர்ச்சாயக கவிதையால் புனைந்த “தன்னிலவு தேனிரைக்க தாழை மரம் நீர் தெளிக்க”என்ற பாடல்.
    இலக்கிய நயத்துடன் இவர் எழுதிய இந்த பாடல்
    அப்போது கோலோச்சிக்கொண்டிருந்த கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞர் முன்னால் இதோ நானும் ஒரு கவிஞன் தான் என்று மார் தட்டி நின்றவர் மாயவநாதன்.
    "யார் இந்த மாயவநாதன்?" என்று திரையுலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய கவிஞர் அவர்.

    இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்ற சுசீலா,ஈஸ்வரி பாடிய “சித்திரை பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ “ என்ற பாடல் அவரது கவிதை சந்தத்தின் அழகை சொல்லும் பாடல்

    இவரது கவிதைத் திறமையை கண்டு மகிழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி, அதனால் தான் அதிக பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்புகளை வழங்கினார் மாயவநாதனுக்கு.

    பூமாலை என்ற படம் ,கலைஞரின் வசனத்தில் உருவான படம், அதில் இடம்பெற்ற பெண்ணே உன் கதி இது தான என்று மனதை உருக்கும் வகையில்
    இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரலில் ஒலிக்கும் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் இவரே.இதன் வரிகளை கவனித்தவர்கள் இதன் வலிமையை உணர்வார்கள்.

    இதே படத்தில் "உலகமே எதிர்த்தாலும் “ என்ற பாடலையும் மறக்க முடியாத ஒன்று.

    கலைஞர் பூம்புகார் படத்தில் மாயவநாதனுக்கு 6 பாடல்களை எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.
    காவிரி பெண்ணே வாழ்க, தமிழ் எங்கள் உயிரானது, தப்பித்து வந்ததம்மா, துன்பமெல்லாம் என இவரது கவி ஆளுமை சொல்லும்
    பாடல்கள் இன்றும் நம் சிந்தயை மயக்கும் பாடல்கள்.

    மாயவநாதன் யாருக்கும் அஞ்சாதவர். முகத்திற்கு நேரே பேசிவிடுபவர். ஒரு முறை கலைஞரின் மறக்கமுடியுமா
    படத்திற்கு பாடல் எழுத வந்த இவர் என்ன மெட்டு என்று ராமமூர்த்தியை கேட்க அதற்கு அவர்
    “மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்” என்று சொல்ல கோபம் கொண்ட இவர்
    பாடல் எழுதாமல் சென்று விட்டார் . பின் கலைஞர் அந்த பாடலை எழுத அது தான் “காகித ஓடம் கடலலை மீது “ என்ற பாடல்

    இவர் முழுக்க முழுக்க பாடல்கள் எழுதிய ஒரே படம் பீம்சிங்கின் “பந்த பாசம்”. எப்பொழுதும் கண்ணதாசனே எழுதும்
    பீம்சிங் -மெல்லிசை மன்னர்களின் கூட்டணியில் இந்த படத்தில் மட்டும் பெரும்பாலான பாடல்களையும் எழுதியது மாயவநாதனே..

    இதில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் அருமை
    இதழ் மொட்டு விரித்திட - காதல் கனிரசம் சொட்டும் வரிகள்
    கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - தத்துவம்

    முத்தாய்ப்பாய் சீர்காழியாரின் குரலில் ஒலித்த
    "நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? - நெஞ்சில்
    நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?
    கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
    குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?” என்ற பாடல் என்றும் நம் மனதை விட்டு நீங்கா பாடல்


    என்னதான் முடிவு - திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்

    "பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம்
    தீருமுன்னே இறக்க வைக்காதே''

    என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார்.

    தொழிலாளி திரைப்படத்தில் இடம்பெற்ற என்ன கொடுப்பாய் என்ற பாடல் வித்தியாசமான வார்த்தைகளால் அமைத்திருப்பார்.

    தென்றல் வீசும் திரையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் அழகான மலரே அறிவான பொருளே என்ற அழகான பாடலை எழுதியதும் இவரே.

    1971’ல் வெளிவந்த ஜெய் - ஸ்ரீவித்யா நடித்த “டெல்லி டூ மெட்ராஸ் “ படத்தில் ஒலித்த புன்னகையோ பூமழையோ”
    என்ற பாடல் இவர் எழுதியது தான். இது தான் கடைசி பாடலும் கூட.

    வறுமையில் வாடிய இந்த தமிழ் கவிஞர் நடு வீதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இவர் மட்டுமல்ல
    செக்கிழுத்த செம்மல் நாடு சுதந்திரம் அடைந்தபின் சென்னையில் பலசரக்கு கடை வைத்து வாழ்ந்து மடிந்தாராம். அதே மாதிரி ஒரு
    நிலை தான் நம் மாயவநாதனுக்கும். பணத்தை பெரிதாக நினைக்கவில்லை, வறுமையில் வெருமையாக இருந்தாலும் யாருக்கும்
    பணிவதில்லை என்ற கொள்கையை கைப்பிடித்தவர்.

    எனக்கு கோபம் இவர் மேல் அல்ல. தமிழ் திரையுலகின் மீது,கொஞ்சம் மெல்லிசை மன்னர்களின் மீதும் தான், கண்ணதாசனுடன்
    தாங்களும் வளார்ந்த இவர்கள் இந்த மாதிரி திறமையான கவிஞர்களை மேலும வளர்த்திருக்கலாம், நிச்சயமாக முடியும் அவர்களலால்.
    இப்படி நடு வீதியில் ஒரு தமிழ் களஞ்சியம் விழுந்து மடிந்திருக்காது. தன்னிலவு தேனிரைக்க பாடல் ஒலிக்கும் போதெல்லாம்
    மாயவநாதனின் நினைவு வராமல் இருக்குமா என்ன .. கடவுள் எப்பொழுதும் இதுபோன்ற திறமைசாலிகளை பிடித்துப்போகிறது, சீக்கிரமே தன்னிடம் அழைத்துக்கொள்கிறார்
    பாவம் நாங்கள் இவர்களது தமிழை இன்னும் கொஞம் கேட்க முடியாமல் போனது நமது துரதிர்ஷடம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •