-
2nd August 2014, 01:00 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
hattori_hanzo
Nayagan actually re-defined commercial cinema. It was the right mix of class & mass elements. It was a trendsetter in many many ways - storywise, technical aspects like camera/editing, acting, music, dialogues - what not? And so we had at least a dozen follow-ups in late 80s and early 90s.
நான் அப்படி நினைக்கவில்லை. நாயகன் ஒரு கலைப்படைப்பே. அதன் கதை நகர்வு வணிகப் படைப்பைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. அப்படத்தின் சாதனை ஒரு வரலாற்று நிகழ்வு. அதற்கு பெரிதும் உதவியாக இருந்தது கமல் என்ற நட்சத்திர அந்தஸ்து. நாயகன் ஈட்டிய புகழை மணிரத்னத்தால் அபிஷேக் பச்சன் "குரு"-வினால் ஈட்ட முடியவில்லை.
வணிகம் என்றால் அதிலேயே பல உட்பிரிவுகள் இருக்கின்றன. சிங்காரவேலனுக்கும் காக்கிச் சட்டைக்கும் . பாட்ஷாவுக்கும், எந்திரனுக்கும், சாமிக்கும், இந்தியனுக்கும், காக்கக் காக்கவிற்கும் வித்யாசம் இருக்கு. சொல்லிக் கொண்டெ போகலாம்.
மாறாக, நாயகன் -தேவர் மகன் - பேசும்படம் - குருதிப்புனல் - குணா - மகாநதி - ஹேராம் - அன்பேசிவம் போன்றவை அடிப்படையில் கலையம்சங்கள் மிகுந்து காணப்படுபவை. அதுவே கமலையும் ஏனைய மற்ற நட்சத்திர நடிகர்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
இத்தனையாவது ரீலில் ஹீரோவின் அறிமுகம் இருக்கணும், இடைவேளைக்கு முன்பு இதெல்லாம் நடக்கணும், இடைவேளைக்கு பிறகு இந்த இடத்தில் பாட்டு இருக்கணும், க்ளைமாக்ஸ் இப்படியெல்லாம் அமையனும் என்ற ஏகப்பட்ட சட்டகவிதிகளொடு வணிகப் படைப்பு பயணிக்கும். இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தெறிந்தவர் கமல்.
ஷங்கர் ஒரு முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த படைப்புக்களை இயக்குபவர். எந்திரன் மட்டுமே அவரது மற்ற எல்லாப் படைப்புகளைக் காட்டிலும் சில விஷயங்களில் சொல்லிக் கொள்ளும்படியான விதத்தில் வேறுபட்டு பொலிவாக இருக்கிறது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
2nd August 2014 01:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks