-
26th December 2014, 06:55 PM
#11
Junior Member
Seasoned Hubber
Part II - பெற்றால் தான் பிள்ளையா ????
இந்த படத்தை கீழ்வரும் வகையில் அலசலாம் என்று விழைகிறேன்
1. படத்தின் கதை சுருக்கம்
2. இந்த படத்தின் சிறப்புக்கள்
3. மனதில் தங்கும் வசனங்கள்
4. மனதை கவரும் இந்த படத்தின் மதுர கானங்கள்
5. நடிப்பில் வசீகரிக்கும் நடிகர்கள்
6. நாம் கற்று கொள்ள வேண்டியவைகள்
படத்தின் கதை சுருக்கம் :
ஆனந்த(ம் )ன் - ஏழையின் அத்தனை அம்சங்களையும் கொண்டவன் - நாடோடி - அவனிடம் இருக்கும் ஒரே சொத்து அவனுடைய ஆனந்தம் தான் - மற்றவர்களின் பசியை போக்குவதில் மகிழ்ச்சியை அடைபவன் - அவனது ஏழ்மை அவனிடம் இருக்கும் நேர்மையான குணத்திற்கு தலை வணங்கியது . எந்த பிடிப்பும் இல்லாமல், எந்த சொந்தமும் இல்லாமல் கால் போன போக்கில் சந்தோஷமாக அவன் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது . காலம் அவனை இன்னும் ஆனந்தமாக இருக்க ஆசைப்பட்டது -- அதன் விளைவு ஆனந்தனின் வாழ்க்கையில் கண்ணனின் பிரவேசம் --- அது மட்டும் அல்ல ஒரு மோகினியின் ரூபத்தில் அவனிடம் தன் உள்ளத்தை ஒரு தேவதை பறி கொடுக்கின்றாள் . யாரோ அனாதையாக கோயிலில் விட்டு சென்ற குழந்தையை எடுத்து வளர்க்கும் ஆனந்தன் , தன்னை மறக்கின்றான் , காதலியையும் மறக்கின்றான் , கண்ணனே எல்லாம் என்று ஆகிவிடுகின்றான் - பாரதியாரின் கவிதை தான் இங்கு நினைவுக்கு வருகின்றது " கண்ணன் -- எங்கிருந்தோ வந்தான் , இடைச்சாதி நான் என்றான் - இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் !!" ஆனந்தன் செய்த தவம் அவனை கண்ணனிடம் அழைத்து சென்றது ---- குழந்தையை பெற்றவள் 5 வருடமாக அதை தேடி அளைகின்றாள் - போலீசில் புகாரும் செய்கின்றாள் - தன்னை ஏமாற்றி ஒரு குழந்தைக்கும் தாயாக்கினவன் ஒரு நாள் திருந்தி தன்னை ஏற்று கொள்ள மாட்டனா என்றும் ஏங்குகிறாள் - 5 வருடம் அவளிடம் இரக்கம் காண்பிக்காமல் இருந்த காலம் சற்றே அவளை இரக்கத்துடன் பார்த்தது . காலம் அவனுடைய கணவனை திருத்தியது - அதற்காக அவனுடைய ஒரு காலை பரிசாக கேட்டது - இருவரும் சேர்ந்து தொலைத்த குழந்தையை தேட ஆரம்பித்தார்கள் போலீசின் உதவியுடன் .... கண்ணன் , ஆனந்தனை தன் பாசம் என்ற புல்லாங்குழல் எழுப்பும் கண்ணன் என்ற மதுர கானத்தில் பைத்தியமாகவே ஆகி விட்டான் -- அவன் கண்களில் எங்கும் கண்ணன் , எதிலும் கண்ணன் - காதலியும் கண்ணனாகவே அவனுக்கு தெரிந்தாள் - ஆனந்தன் தன் உயிரைக்கூட யாரவது கேட்டால் தந்து விடுவான் - ஆனால் கண்ணனை கேட்டால் அவன் படும் வேதனை மரணத்தை விட கொடியதாக இருக்கும் ---
காலம் கண்ணனை அவனிடம் இருந்து பிரிக்க ஆசைப்பட்டது - கண்ணனை பெற்றவர்கள் , போலீஸ் உதவியுடன் , நீதி மன்றத்தின் அதிகாரத்துடன் , தான் பெற்ற குழந்தையை , பெறாமல் பெற்ற ஆனந்தனிடம் இருந்து பிரிகின்றார்கள் - ஆனந்தன் முதல் தடவையாக தன் ஆனந்தத்தை இழக்கின்றான் - தன் நிழலையே வெறுக்கின்றான் - கண்ணில் தெரியும் எல்லோருமே அவனுக்கு கண்ணனாக தெரிந்தனர் - அவனை சூழ்ந்து இருக்கும் அனைவருமே அவனுக்கு சதி செய்வது போல அவனுக்கு தெரிந்தது ......
உறவை நீதி மன்றம் பிரிக்கலாம் ; சட்டம் சதி செய்யல்லாம் ; நண்பர்கள் ஏமாற்றலாம் - ஆனால் உண்மை அன்பை யாருமே பிரிக்க முடியாது ... - கண்ணனை பெற்றவர்கள் அதை உணர்கிண்டார்கள் - கண்ணன் மீண்டும் ஆனந்தனிடம் சேர்கின்றான் - ஆனந்தன் இழந்த ஆனந்தத்தையும் , பிரிந்த மோகினியையும் மீண்டும் பெறுகிறான் - வாழ்க்கை அவனுக்கு பாசத்தின் அருமையை உணரவைக்கின்றது - குழந்தை செல்வம் தான் உண்மையான செல்வம் என்பதையும் உணர வைக்கின்றது - பாசம் காட்ட , அன்பை காட்ட , பெற்றவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை - பெறாமலும் அன்பை காட்டலாம் - எவ்வளவு அநாதை குழந்தைகள் இந்த உலகத்தில் - ஆனந்தன் போல ஒவ்வொரு வரும் நினைக்க ஆரம்பிந்தால் , அநாதை என்ற வார்த்தை நம் அகராதியில் இருந்தே , "வெள்ளையனே வெளியேறு" என்று விரட்டியது போல ஓடிவிடும்
ஈரமான கண்களுடன் ஆனந்தனிடம் இருந்து விடை பெறுகின்றோம் -------
தொடரும்
Last edited by g94127302; 26th December 2014 at 07:23 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
26th December 2014 06:55 PM
# ADS
Circuit advertisement
Bookmarks