-
19th May 2015, 09:45 PM
#11
Junior Member
Newbie Hubber
Part-3
பாக பிரிவினை படத்தை பொறுத்த வரை ஒரு நடிகனின் உச்ச பட்ச சாதனை ஐம்பதுகளில். இன்று போல கேமரா, கட் shots ,வெளிநாட்டு ஒப்பனையாளர் , இரண்டு வருடமாக ஒரே படம் என்பதெல்லாம் இல்லாத போது கைகால் ஊனமுற்ற பாத்திரம்.அதிலும் கதாநாயகன் என்றால் ஒளி வட்டம் இருந்த காலங்களில் இமேஜ் வட்டத்தில் இல்லாமல் , அறிமுகமாகும் போதே எருமை குட்டை தண்ணீரில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிப்பது, எருமை மாட்டின் முதுகில் சவாரி செய்வதும் என நடிப்புக்காக வேள்வி வளர்ப்பார்.
வெற்று பொழுதுபோக்கு படங்கள் வெள்ளிவிழா காணுவது சாதனையே அல்ல. அதனை ரவிசந்திரன் கூட செய்வார். இந்த மாதிரி வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?
கண்ணையன் பாத்திரத்தை வெறும் அப்பாவி போல நடித்து விட்டு கடக்க முடியாது. இந்த படத்தில் கண்ணையன் உலகம் குறுகியது அவனின் முடக்கமான நிலையால். அவன் எதிர்கொள்வதோ வீட்டில் அன்புள்ளங்களை மட்டுமே. இந்த நிலையில் சிறிதே தாழ்வு மனப்பான்மை, அன்பு நிறை உள்ளம், நிறைய விஷயங்களில் தேர்ச்சி குறைவு இவற்றால் அவன் அப்பாவி போல தோற்றம் தர வேண்டும். கை கால் அசைவுகள் அவர் ஊன நிலைக்கு தக்க இயங்க வேண்டும். (படிக்காத மேதை EQ அப்பாவித்தனமும்,சாப்பாட்டு ராமனின் வெட்டி அரட்டை அப்பாவித்தனமும் இதிலிருந்து எவ்வளவு மாறும்? மேதையின் அப்பாவி பாத்திரங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தலாம்.)
இந்த பாத்திரத்தை நடிகர்திலகம் கையாளும் லாவகம் இருக்கிறதே? அடடா.... அத்தனை அருமை. மாடு உதைத்து கழுநீர் தொட்டியில் விழுந்து மற்றவர்கள் உதவியால் வெளியேறும் முதல் காட்சியில் துவங்கி, பெரியப்பாவிடம் பக்தி நிறைந்த நட்பு,அப்பா அம்மாவிடம் பணிவு, பெண்களிடம் கலாட்டா ,இதில் பிள்ளையாரு கோயிலுக்கு,தாழையாம் ,தேரோடும் எங்க சீரான பாடல்களில் தாள லயத்துக்கேற்ப நொண்டி நொண்டி முழு பாடலுக்கும் நடனமாடும் தேர்ச்சி (கமல் அப்படியே இந்த ஸ்டெப் களை ஆட்டு குட்டி,,செவ்வந்தி பூ முடிச்ச பாடல்களில் அட்சரம் தப்பாமல் கையாளுவார்),தம்பியுடன் வாஞ்சை,அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது திருப்ப பார்க்கும் பாசமுள்ள குத்தல், எம்.ஆர்.ராதா வின் அடாவடி தனங்களுக்கு சவடால்களுக்கு தன் இயல்பு மாறாமல் அளிக்கும் counter response ,reactions , (எம்.ஆர்.ராதா அப்படியே தன்னுடைய சிஷ்யனை பார்த்து பெருமை பட்டு எங்கியோ போயோட்டாம்பா எவ்வளவு நல்லா நடிக்கிறான் என்று சொன்னாராம்),பொன்னி ஒரு சங்கடமான சூழ்நிலையில் தன்னை மணக்கும் நிலைக்கு தள்ள படும் போது empathy யுடன் அவள் நிலையை பேசும் அழகு,தன் குறை மறந்து மண வாழ்க்கையில் தோய்வது ,பிரிவினை கொடுமை தாளாமல் பெற்றோரிடம் ,பெரியப்பாவிடம் தவிப்பது,பெரியம்மாவின் உதாசீனத்தை பொருமலுடன் ஏற்பது,தன்னுடைய மகனை உதாசீனம் செய்யும் போது ஒரு வெறுப்புடன் கையாலாகா தனத்தை விம்மலுடன் காட்டுவது, பட்டணத்தில் டாக்டர் செக் அப் செய்ததை கூச்சத்துடன் விவரிக்கும் பாங்கு என ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்து ,நம் கவனம் ஈர்த்து தன்னிடமே தக்க வைப்பார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பு. நன்றாக பயன் படுத்தி ,வரும் காட்சிகளில் அனுதாபம் தட்டுவார். பாலையா,சுப்பையா,சி.கே.சரஸ்வதி ,ராஜம்மா எல்லோரும் அருமையான கூட்டணி .கிட்டத்தட்ட தில்லானா அளவு எல்லா நடிகர்களும் ஒத்துழைத்து களை கட்ட வைப்பார்கள்.
படப் பிடிப்பு, படத்தொகுப்பு,பின்னணி இசை ,பாடல்கள் எல்லாமே உன்னதம். எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் இணைவில் தாழையாம் பூ,தங்கத்திலே,தேரோடும்,ஒற்றுமையாய், ஏன் பிறந்தாய் எல்லா பாடல்களும் அருமை.
1956 முதல் பிணங்கி நின்ற கண்ணதாசன் ,இந்த படத்தின் மூலம் திரும்பினார். பட்டுகோட்டையார் ஏன் பிறந்தாய் மகனே பாட்டை எழுத மறுத்ததால் இந்த யோகம். ஆனால் முழுவதும் மனம் மாறாமல் கால் அடிபட்டு படுக்கையில் கிடந்த பழைய நண்பருக்கு தோதாக தங்கத்திலே பாட்டில் ஒரு வரி சேர்த்தாலும் நடிகர்திலகத்தின் பெருந்தன்மை அதை அனுமதித்தது.ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும் என்று எழுதி விட்டு துன்ப பட்ட வாலிக்கும், இதற்கும் எத்தனை வித்யாசம்?இதுவல்லவோ பெருந்தன்மை,மனித தன்மை,விவேகம். தமிழர்களுக்கு நல்லதுதான் ஆகவே ஆகாதே?
இது வந்த வருடம்(1959) முதலிரண்டு வசூல் படங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன்,பாகபிரிவினை.இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு?அதுதான் சிவாஜி. 1960,1961,1962 எல்லா வருடங்களிலும் முதல் இரண்டு உன்னத வசூல் படங்கள் இந்த box -office சக்ரவர்த்தியுடையதே.(1960- தெய்வ பிறவி,படிக்காத மேதை, 1961-பாவமன்னிப்பு,பாசமலர்,1962-ஆலய மணி)
இந்த படத்தை இன்றைய தலைமுறையும் அலுக்காமல் ரசிக்க முடியும். ரசிக்க வேண்டும். நம் உன்னதங்களை,சாதனைகளை கொண்டாட தமிழர்கள் கற்க வேண்டும்.
Last edited by Gopal.s; 19th May 2015 at 09:48 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
-
19th May 2015 09:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks