-
16th October 2015, 07:25 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
தமிழ்..ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளணும்.. ரஜினியின் ரசிகையாக இருந்துகொண்டு நீங்கள் எந்த வரைமுறைகளையும் மற்ற படைப்பாளிகளிடமும், நடிகர்களிடமும் திணிக்கவும் முடியாது, எதிர்பார்க்கவும் முடியாது. ஏனெனினில் ரஜினியே தனது ஆரம்ப கால ஆரோக்யமான பாதையை விட்டு விலகி வணிகச் சக்கரத்தில் தேடிப்போய் தன்னை உட்படுத்திக் கொண்டவர். வணிக சினிமாவினை அடுத்த தலைமுறையினர் ஆட்கொள்ளும்போது, அதை ஜீரணிக்க முடியாத தொனியைத்தான் உங்களிடம் பல திரிகளில் காணமுடிகிறது. மேலும் பல திரிகளில் பலரின் கோபத்திற்கும் , வெறுப்பிற்கும் ஆளாக்குவது பெரும்பாலும் உங்களின் பதிவே. சில கமல் ரசிகர்களுக்கு ரஜினி படங்களைப் பிடிக்கும். முதல் வாரத்திலேயே பார்த்துவிடுவார். சில கமல் ரசிகர்கள் ரஜினியின் சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பார்க்கும் பழக்கமுள்ளவர்கள். சில கமல் ரசிகர்கள் ரஜினி படங்களை பார்க்க விரும்ப மாட்டார்கள். அதுபோலவே ரஜினி ரசிகர்களையும் வகைப்படுத்தலாம். இதில் நீங்கள் எந்த ரகம் என்பதை நீங்கள் சொல்கிறீர்களோ இல்லையோ, மையமே சாட்சியாக காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. எனது மைய அனுபவத்தில் நீங்கள் கமலின் ஒரு படத்தையாவது சிலாகித்தோ, நல்லாயிருக்கு என்றோ ஒரு வார்த்தைகூட பதிவு செய்ததாக நினைவில்லை. அதுபோலவே மற்ற சமகால நட்சத்திர நடிகர்களின் படங்களையும்.
வெங்கிராம் ஐயா, கமல் படங்களைப் பற்றி பேசுங்கள். என்னை ஏன் விமர்சிக்கிறீங்க??? நான் நீங்கள் எதிர் பார்க்கிறபடி நடக்க்ப் போவதில்லை. அதேபோல் உங்களை நான் எதிர்பார்க்கிறபடி நடக்கனும்னு எதிர் பார்க்கவில்லை. இதில் என்ன புரியவில்லை உங்களுக்கு??
வெங்கிராம் ஐயா, கமல் படங்களைப் பற்றி பேசுங்கள்- உங்கள் அன்புத் தோழர்களுடன். என்னைப்பற்றி விமர்சிப்பதை நிறுத்துங்கள்! பைபை!
This is a very big world!
-
16th October 2015 07:25 AM
# ADS
Circuit advertisement
Bookmarks