தமிழ்..ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளணும்.. ரஜினியின் ரசிகையாக இருந்துகொண்டு நீங்கள் எந்த வரைமுறைகளையும் மற்ற படைப்பாளிகளிடமும், நடிகர்களிடமும் திணிக்கவும் முடியாது, எதிர்பார்க்கவும் முடியாது. ஏனெனினில் ரஜினியே தனது ஆரம்ப கால ஆரோக்யமான பாதையை விட்டு விலகி வணிகச் சக்கரத்தில் தேடிப்போய் தன்னை உட்படுத்திக் கொண்டவர். வணிக சினிமாவினை அடுத்த தலைமுறையினர் ஆட்கொள்ளும்போது, அதை ஜீரணிக்க முடியாத தொனியைத்தான் உங்களிடம் பல திரிகளில் காணமுடிகிறது. மேலும் பல திரிகளில் பலரின் கோபத்திற்கும் , வெறுப்பிற்கும் ஆளாக்குவது பெரும்பாலும் உங்களின் பதிவே. சில கமல் ரசிகர்களுக்கு ரஜினி படங்களைப் பிடிக்கும். முதல் வாரத்திலேயே பார்த்துவிடுவார். சில கமல் ரசிகர்கள் ரஜினியின் சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பார்க்கும் பழக்கமுள்ளவர்கள். சில கமல் ரசிகர்கள் ரஜினி படங்களை பார்க்க விரும்ப மாட்டார்கள். அதுபோலவே ரஜினி ரசிகர்களையும் வகைப்படுத்தலாம். இதில் நீங்கள் எந்த ரகம் என்பதை நீங்கள் சொல்கிறீர்களோ இல்லையோ, மையமே சாட்சியாக காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. எனது மைய அனுபவத்தில் நீங்கள் கமலின் ஒரு படத்தையாவது சிலாகித்தோ, நல்லாயிருக்கு என்றோ ஒரு வார்த்தைகூட பதிவு செய்ததாக நினைவில்லை. அதுபோலவே மற்ற சமகால நட்சத்திர நடிகர்களின் படங்களையும்.





Reply With Quote
Bookmarks