-
24th October 2015, 11:17 AM
#11
Senior Member
Senior Hubber
//தெலுங்கு வார்த்தைகளுக்கு உதட்டசைவுக்கு ஏற்ப தமிழில் வார்த்தைகள் போடுவது ரொம்பக் கடினம்தான். தெலுங்கில் அர்த்தம் வேறு. தமிழில் அர்த்தம் வேறு என்று இருக்கும். அதனால் நடிக நடிகையர் செய்யும் பாவனைகளுக்கும், பாட்டிற்கும் சில சமயங்களில் சம்பந்தம் இருக்காது.
'ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ'
வரிகளுக்கு கமல் செய்வதில் சம்பந்தமே இருக்காது. பின்னால் கையை சுட்டிக் காட்டுவார். தெலுங்கில் அர்த்தத்துக்குத் தக்கபடி அது சரியாக இருக்கும். (அங்கே 'நானாகாரு' வாட்ச் பண்றார் என்பது போல அர்த்தம்) தமிழில் 'அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ?' என்று சம்பந்தமில்லாத வரிகள் உதட்டசைவுக்காக வேற மாதிரி வந்து உட்கார்ந்து இருக்கும். அதனால் தமிழில் பார்க்கும் போது நடிப்பசைவுகள் மாறுவது போல் தெரியும்
எப்படியிருந்தால் என்ன! இசைக்கும், ரசனைக்கும் மொழி ஒருதடையே அல்ல. //
வெரி ட்ரூ வாசு.. இசைக்கும் ரசனைக்கும் மொழி ஒரு தடையே அல்ல.. என்னா வாக்கியம்.. அட்சர லட்சம் பெறும்..
ஆனாக்க
ரொம்ப நாளைக்கு முன்னால் சலங்கை ஒலி பாடல்கள் அத்தனையும் எழுதியது வைரமுத்து என்றாலும்..சாகர சங்கமம் பாடல்கள் மொத்தமா ஒரு சிலவா என நினைவில்லை..மொழிபெயர்ப்பு படிக்க நேர்ந்தது..
அப்படியே ஸ்ட்ரெய்ட் ட்ரான்ஸ்லேஷன்.. வைரமுத்து அப்படியே ட்ரான்ஸ்லேட் செய்தாரா அல்லது தமிழிலிருந்து தெலுங்கு போச்சா தெரியாது..
தெனாலி யை டப்பிங்க் செய்து எஸ்பிபி தெலுங்கில் வெளியிட்டார்.. கமலுக்கு அவர் வாய்ஸ்கொடுத்திருப்பார்..அவ்வளவாகப் பொருந்தாதிருந்த நினைவு..
ஆனா புதுசா பாட் எழுதி வார்த்தைகளை மடக்கி ஓரளவிற்குப் பொருத்தமா எழுதறதுல தமிழ்ப் பாடலாசிரியர்கள் கெட்டிக்காரர்கள் தமிழ்ப்படங்களுக்கு இல்லியோ..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th October 2015 11:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks