-
13th October 2014, 06:27 PM
#11
Junior Member
Newbie Hubber
வாசு,
உன் சபதம் எனக்கும் பல நினைவுகளை கிளறியது. 1971 தமிழ் வருட பிறப்பில் என்னுடைய முழு கவனமும் சுமதி என் சுந்தரி,ப்ராப்தம் மீதே.இரண்டையும் கும்பகோணத்தில் பார்த்ததோடு அல்லாமல்,சுமதியை நாலு தரம் repeat பண்ணி கொண்டிருந்தேன். திருவிடை மருதூர் நண்பன் ஸ்ரீதர் சபதம் பற்றி குறிப்பிட்டான்.(தொடுவதென்ன, போட்டு வைத்த முகமோவிற்கு சமமாக பிரபலமாகி கொண்டிருந்தது.)கே..ஆர்.விஜயா என்பதால் ஒரு தயக்கம் இருந்தது.ஸ்ரீதர் ,ராஜாவில் பார்த்ததோடு அல்லாமல் ,எனக்கு முழு கதை சீன் பை சீன் விவரித்து சொன்னான். அவனையும் அழைத்து கொண்டு (காசு நான்தான்)போனேன்.பிடித்திருந்தது.திரும்ப வரும் போது ஆரிய பவனில் சோன் பாப்பிடி,மெது பக்கோடா,முறுகல் தோசை என்று வெட்டினோம்.
உங்கள் பதிவு, அந்த மெது பக்கோடா சுவையை நாக்கில் ஏற்றியது.பிரமாதம்.
மகனே நீ வாழ்க பாடல் ரொம்ப வித்யாசமானது.எனது பிடித்தம் மட்டுமே என்று ப்ரத்யேகம் என்று நினைத்தது உங்களுக்கும் பிடித்தது தற்செயல் அல்ல.எண்ணத்தால் இந்த சகோதரத்துவம் நமக்குள் தொடர்ந்து கொண்டே உள்ளது.
சின்னகண்ணன்- சமீபத்தில் உன் எழுத்தில் இளமையும் ,சொல்லோடு இணைந்த ஜொள்ளும் ரொம்ப துள்ளுகிறதே?என்ன சமாசாரம்?
-
13th October 2014 06:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks