-
15th June 2015, 03:49 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
செந்தில் சார்,
என்ன ஒற்றுமை! கடந்த இரண்டு மணி நேரமாக 'ஆசையினாலே மனம்' பதிவு ரெடி செய்து கொண்டிருந்தேன். முடித்து விட்டு சப்மிட் கொடுத்துப் பார்த்தால் அதே பாடல் தங்கள் பதிவாக வந்திருக்கிறது. உள்ளங்கள் ஒன்று பட்டால் ரசனையும் ஒன்று படுவது இயற்கைதான் என்றாலும் இன்னும் மீள முடியாத ஆச்சர்யமே!
வாசு சார்
என் பதிவில் நான் சரோவை (சி.க!) முன்னிலைப்படுத்துவற்தகாகவே டக்கென்று என் மனதில் தோன்றிய அந்த பாடலை இணைத்தேன்!
ஆனால் உங்களது வண்ணத்தோகை விரித்தாடும் மயில் பதிவு அந்தப் பாடல் காட்சிக்கே புது அர்த்தங்களையும் அழகையும் தந்து விட்டதே !!
வாசு என்னும் பரத நாட்டிய தாரகை மோகனாம்பாளின் முன் நான் ஒரு தில்லாலங்கடி டப்பாங்குத்து ஆட்டமாடும் ஜில்ஜில் ரமாமணியாகவே உணர்கிறேன் !!
உங்கள் வார்த்தை சுரங்கள் நீங்கள் வார்த்தை சுந்தரர் என்பதை எப்போதும்போல நிரூபிக்கின்றன!!
இனி கோபால் வேறு சிக்கலாராக மாறி அவர் கோணத்தில் இதே பாடல் காட்சியமைப்பை உங்களுக்கு போட்டியாக வாசித்தால் நலந்தானே!!!
இந்த இடத்தை அடைய நீங்களிருவரும் எத்தனை படிகள் ஏறி சென்றிருக்கிறீர்கள் என்று அண்ணாந்து பார்த்து வியப்பில் வாயடைக்க வைக்கிறீர்கள்
பெருமைக்குரிய நண்பர்களே !!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th June 2015 03:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks