Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #10
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    http://www.luckylookonline.com/2013/...post_6511.html


    சிவாஜியை வைத்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிவந்த மண் ஸ்ரீதரின் காலை வாரிவிட்டது. அவர் நினைத்த அளவுக்கு ஓகோவென்று ஓடவில்லை. தமிழில் படமெடுக்கும்போதே அதன் வடிவத்தை இந்தியிலும் அங்கிருக்கும் பெரிய நடிகர்களை வைத்து எடுப்பது ஸ்ரீதரின் ஸ்டைல். சிவந்த மண்ணின் இந்தி வடிவம் மெகா ஃப்ளாப். சிவந்த மண்ணுக்கு வசனம் எழுத ஆரம்பத்தில் கலைஞரைதான் தொடர்பு கொண்டார் ஸ்ரீதர். அப்போது கலைஞர் அமைச்சர் ஆகிவிட்டதால், அது தொடர்பான விதிமுறைகளை பார்த்து ஒப்புக்கொள்கிறேன் என்றாராம். ஸ்ரீதர் அவரை திரும்ப தொடர்புகொள்ளவில்லை. ஒருவேளை கலைஞர் வசனம் எழுதியிருந்தால் சிவந்தமண் சிறப்பாக ஓடியிருக்கும் என்று இப்புத்தகத்தில் எழுதுகிறார்.

    உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். அதற்கேற்றாற்போல ரிசல்ட் சூப்பர்ஹிட். நிதிநெருக்கடியில் இருந்து மீண்டார் ஸ்ரீதர். உரிமைக்குரல் வெற்றி கொடுத்த தெம்பில் பாதியில் நின்றுபோயிருந்த ஹீரோ 72ஐ தூசுதட்டி வைரநெஞ்சமாக மாற்றி வெளியிட்டார். நல்லவேளையாக கையைக் கடிக்கவில்லை.


    ஸ்ரீதரின் வாழ்க்கை வரலாறு எனும் போர்வையில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகால தமிழ் திரையுலகப் போக்கினை காப்ஸ்யூலாக தருகிறது ‘திரும்பிப் பார்க்கிறேன் : டைரக்டர் ஸ்ரீதர்’ புத்தகம். சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி, சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பவர்களுக்கும் ஏதுவான நூல் இது. சினிமாத்துறையில் பணியாற்றுபவர்கள் வாசித்தே ஆகவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

    நூல் : திரும்பிப் பார்க்கிறேன் – டைரக்டர் ஸ்ரீதர்

    எழுதியவர் : எஸ்.சந்திரமவுலி

    பக்கங்கள் : 360, விலை : ரூ.90

    வெளியீடு : அருந்ததி நிலையம்,
    19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017



    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களே

    காலை வணக்கங்கள் !

    சிவந்த மண் நம் நாடு வசூல் ஒப்பீடு தேவையில்லாத ஒன்று என்ற எனது கருத்தை நான் ஏற்கனவே பதிவு செய்தது தாங்கள் அறிந்ததே..! காரணம் இரு தரப்பினரிடமும் பத்திரிகையில் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர் பத்திரிகையில் வெளியிட்ட வசூல் விளம்பரம் இல்லை. ரசிகர் மன்ற நோட்டீஸ் என்பது நம்பகத்தன்மை இல்லாத ஒரு பிட் நோட்டீஸ் . அதை ஒரு ஆதாரமாக வைத்து யாரும் எதுவும் கொண்டாடவோ, துண்டாடவோ முடியாது. ஆதாரமாக ஏற்றுகொள்ளவும் முடியாது !! படத்தின் 50வது நாள் விளம்பரம் நூறாவது நாள் விளம்பரத்தில் திரை அரங்குகள் இருந்தால் தான் அந்த திரைப்படம் அந்த திரை அரங்குகளில் ஓடியதா ஓடவில்லையா என்பது தெரியும்...! அதுதான் உண்மையான 99% ஒத்துகொள்ளகூடிய ஆதாரம் என்பதை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை. 1% அச்சு பிழை வர வாய்ப்பு உள்ளது அதிலுமே !

    திரு ஸ்ரீதர் அவர்கள் சிவந்த மண் திரைப்படம் வெற்றி படமா இல்லையா என்பது குறித்த தாங்கள் யாரோ மூன்றாம் நபருடைய இணைய தள பதிவை கல்கியில் திரு ஸ்ரீதர் கூறியது என்று பதிவிட்ட விஷயத்தை பற்றி -

    இதனை பல மாதங்களுக்கு முன்பு இது போல ஒரு சந்தர்பத்தில் - திரியில் பதிவிட்டது தவறான தகவல் என்பதை நான் ஏற்கனவே நிரூபித்து பதிவு செய்துள்ளேன். இருந்தாலும் தங்கள் வசதிக்காக மற்றும் ஒரு முறை -

    சிவந்த மண் திரைப்படம் நடிகர் திலகமிடம் வருவதற்கு முன்னால் - இதே கதை மக்கள் திலகம் அவர்களை வைத்து அன்று சிந்திய ரத்தம் என்ற பெயரில் திரு ஸ்ரீதர் எடுக்க தொடங்கி படபிடிப்பும் விமரிசையாக தொடங்கி பிறகு பல காரணங்களால் தொடரமுடியாமல் கைவிட்ட செய்தி நீங்கள், நான் மற்றும் அனைவரும் அறிந்தவிஷயமாகும்.

    அன்று சிந்திய ரத்தம் படபிடிப்பு மற்றும் இதர செலவுகள் பல லட்சம் திரு ஸ்ரீதருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது உலகறிந்த விஷயம்!

    அதற்க்கு பிறகு நடிகர் திலகம் அவர்களை வைத்து அதே கதையை நடிகர் திலகம் அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி சிவந்தமண் என்ற பெயரில் அடுத்து குறித்த நேரத்தில் முடித்து வெளியிட்டு திரைப்படம் மிகச்சிறந்த வெற்றியையும் பெற்றது அனைவருக்கும் தெரியும்.

    சிவந்த மண் ( BOTH HINDI & TAMIZH) எடுத்த வகையில் திரு ஸ்ரீதர் அவர்களுக்கு மிக சிறந்த லாபகரமாக அமைந்தது.

    அதன் ஆதாரம்




    திரு ஸ்ரீதர் அவர்களுக்கு பணம் நஷ்டமானது அன்று சிந்திய ரத்தம் திரைப்படம் எடுத்த வகையில் செலவு செய்த லட்சங்கள்தான் !

    அந்த வகைக்கான நஷ்டத்தையும் சிவந்த மண் திரைப்படம்தான் ஈட்டிகொடுக்க வேண்டும் என்று ஒருவேளை எதிர்பார்த்தால், தயாரிப்பாளர் எதிர்பார்த்திருந்தால் அந்த எதிர்பார்ப்பு துளி கூட ஞாயம் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு. !

    2. சிவந்தமண் திரைப்படத்தை பொருத்தவரை எல்லா ஏரியாக்களும் நல்ல விலையில் இன்னும் சொல்லப்போனால் மிக நல்ல விலையில் திரு ஸ்ரீதர் அவர்கள் விற்றுவிட்டார்.

    சென்னை CITY மற்றும் MR எனப்படும் மதுரை ராம்நாட் ஏரியா மட்டும் சித்ராலயா மற்றும் யாழ் மொழி ட்ரேடிங் கம்பெனி இனைந்து வெளியிட்டனர் ! - வெளியிட்ட வகைக்கான வசூல் என்ன என்று உலகிற்கு தெரியும்...!

    நிலைமை இப்படி இருக்க ஸ்ரீதர் அவர்களுக்கு சிவந்தமண் எதிர்பார்த்ததை கொடுக்கவில்லை என்று திரு ஸ்ரீதரே கல்கியில் கூறியுள்ளதாக புனையப்பட்ட " ரீல் " எப்படி உண்மையாக இருக்கமுடியும் திரு கலைவேந்தன் ?

    சிவந்தமண் மற்றும் தர்தி இரெண்டுமே பூஜை போட்ட அன்றே அனைத்து ஏரியாகளும் விற்கப்பட்ட படங்கள்...இதன் பொருள் தயாரிப்பாளருக்கு பணம் பூஜை போட்ட அன்றே வந்துவிட்டது என்பது பொருள் !!!!

    எல்லா ஏரியாவையும் விற்றுவிட்டு பார்க்கவேண்டிய அளவு பணத்தையும் பார்த்துவிட்டு, தமது லாபமாக வெளியிட்ட சென்னை CITY மற்றும் MR ஏரியா வசூலையும் வாங்கிகொண்டு திரு ஸ்ரீதர் நிச்சயம் இப்படி கூற வாய்ப்பே இல்லை !

    Not only that, the person who wrote has mentioned Sivandha Mann was not at expected level in collection & Dharthi was Mega Flop. But, Sridhar again realises that Action film is the way forward and once again going to Sivaji for Hero 72 ( vaira nenjam) and again doing the Hindi version in parellel . Don't you realise that it is absurd Kalaivendhan sir? This itself shows that the statements made are 100% Rubbish and losses the CREDIBILITY.

    மேலும் நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் நீண்ட கால தயாரிப்பு வைர நெஞ்சம் கூட கையை சுடவில்லை என்று பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் உரிமைகுரலின் நிழலில் என்று ....ஸ்ரீதர் சிவாஜி அணிவகுப்பு உரிமைக்குரல் நிழலில் குளிர் காய ஒரு அவசியமும் இல்லை திரு கலைவேந்தன் அவர்களே !

    காலம் காலமாக ரீல் விட்டுகொண்டிருக்கும் செய்திகளை பார்த்தாலே தெரிகிறது ....

    பந்துலு நஷ்டமடைந்தார் சிவாஜி படத்தால்...உடனே மக்கள் திலகம் நடிப்பில் ஒரு படம் வந்தது அது அவரை கோடீஸ்வரர் ஆக்கியது...

    ஸ்ரீதர் நஷ்டப்பட்டார் சிவந்தமண் திரைப்படத்தால் உடனே உரிமைக்குரல் வந்து அவரை கொடீஸ்வரனாக்கியது...

    அதுவும் எப்படி ?

    1969 சிவந்த மண் ...1970 தர்தி ......1974 உரிமை குரல்......

    1969 & 1970 இரண்டு படங்களும் வெளிவந்து நன்றாக ஓடிய பிறகு ...

    1974இல் அதாவது நான்கு வருடங்கள் திரு ஸ்ரீதர் நஷ்டத்துடன் சும்மா இருந்து....

    பிறகு 1974 இல் ராஜேந்திரகுமார் மக்கள் திலகத்திடம் செல்ல அறிவுரைத்து,

    திரு ஸ்ரீதர் அவர்கள் மக்கள் திலகத்திடம் சென்று,

    மக்கள் திலகம் கால்ஷீட் கொடுத்து ....உரிமை குரல் படத்தின் மூலம் மீண்டும் கோடீஸ்வரன் ஆனார் என்றால்....இது சினிமாவை விட ஒரு படி மேலான "ரீல்" என்பதை தவிர என்ன சொல்வது ?

    தேங்காய் ஸ்ரீனிவாசன் நஷ்டப்பட்டார் கிருஷ்ணன் வந்தான் திரைப்படத்தால் உடனே மக்கள் திலகம் அவரது நஷடத்தை ஈடு செய்து அவரை காப்பாற்றினார்..

    இதை விட கொடுமை என்னவென்றால் சிவந்தமண் திரைப்படத்தின் ஹிந்தி வடிவம் தர்தி மெகா பிளாப் என்று குறிப்பிட்டுள்ள மஹா மெகா பொய் . தர்தி திரைப்படம் திரையிட்ட இடங்கள் அனைத்திலும் மிகபெரிய வெற்றியை பெற்ற படம். அனைத்து மெட்ரோ நகரங்களிலும் (சென்னை தவிர) 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம். வெள்ளிவிழா நாயகர் ராஜேந்திர குமார் அவர்களை ஒரு ACTION நாயகனாக ஹிந்தி உலகிற்கு வெளிச்சம் காட்டிய படம் !

    ஏன் இந்த தேவையற்ற புளுகல்? உங்கள சொல்லவில்லை ....இது போல தவறான பொய்யான காழ்புணர்ச்சி கொண்ட தகவலை பரப்புவோரை குறிப்பிடுகிறேன்..!

    இப்படி ஒரு மிகவும் ORGANIZED முறையில் நடிகர் திலகம் அவர்களை பற்றி தவறான உண்மைக்கு புறம்பான செய்திகள் பதிவிடுவதில் இருந்தே எனதளவிர்க்கு நடிகர் திலகம் மீதும் அவரின் அசுர வளர்ச்சி மீதும் காழ்புணர்ச்சி கொண்டுள்ளனர் என்பது தெள்ளம் தெளிவாக தெரிகிறது கலைவேந்தன் சார் !
    Last edited by RavikiranSurya; 9th September 2015 at 04:38 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •