-
23rd May 2013, 10:10 PM
#3841
Senior Member
Seasoned Hubber
NEXT IN THE FILMOGRAPHY THREAD
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd May 2013 10:10 PM
# ADS
Circuit advertisement
-
23rd May 2013, 10:46 PM
#3842
Junior Member
Veteran Hubber
dear kannan. welcome to this thread. As a senior member I would like to give you some 'tips' for your safe documentation in future. You love NT and admire.... keep it by heart. If any other culprits write or comment bad about our NT don't get emotion and react enthusiastically but just remain a silent spectator! The moderator of this thread will erase your defensive writings too under the disguise of cleaning the thread! Just enjoy the fun and frolic in this thread, keeping a distance from comments since none of the members except a very few sensitive fans of NT will come to your help, when NT is mud-slung!
-
24th May 2013, 12:58 AM
#3843
வாசு சார் அவர்களுக்கு,
உங்களின் பல பதிவுகளைப் பற்றி இந்த ஒரே பதிவில் பேச வந்துள்ளேன்.முதலில் உங்களின் என் கிராமம் என் மக்கள் பதிவு பற்றி. பலரும் சொல்லிவிட்டார்கள் நான் புதிதாக என்ன சொல்லி விட முடியும்? சினிமா அவ்வளவாக கலக்காத ஒரு தனி கிராமிய மனம் கமழும் பதிவை யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பதிந்து அனைவரையும் ஒரு கிராமீய சுற்றுலா கூட்டிச் சென்ற உங்களுக்கு வாழ்த்துகள். அந்த பதிவின் மேன்மையே அதில் தொனித்த ஜீவன். எப்படி பாதுகாப்பு படப்பிடிப்பு பதிவில் ஒரு ஜீவன் இருந்ததோ, எப்படி சந்திப்பு ஓபனிங் ஷோ அனுபவ பதிப்பில் ஒரு ஜீவன் இருந்ததோ அதே உயிர் துடிப்பு இந்த பதிவிலும் எதிரொலித்தது. ராமாபுரத்திலும் நமது ரசிகர்கள் ராஜ்ஜியம்தான் என்பதை அழகாய் எடுத்துக் காட்டியிருந்தீர்கள்.
அடுத்து நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வரிசை.அனைத்து படங்களுமே அருமை என்ற போதிலும் அந்த பாவை விளக்கு படப்பிடிப்பு நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மனதை அள்ளிக் கொண்டு போகிறது.
நாயகியர் வரிசையில் மாலினி நல்ல தேர்வு. உங்களுக்கே உரித்தான பாணியில் அவரைப் பற்றிய கமன்ட் கூட ரசிக்க வைத்தது [ஆண் பிள்ளைத்தனமான உடல்வாகு].அது உண்மை என்ற போதிலும் அவரிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது.
சண்டைக் காட்சிகளைப் பற்றிய உங்கள் தொடர் சொல்லவே வேண்டாம். எந்தெந்த சண்டைக் காட்சியை எப்போது எடுத்துப் போட வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் அந்த 57 வயதில் சண்டைக் காட்சியை ரசிக்க முடிந்தது.
இனி உங்களின் ஆதங்கப் பதிவிற்கு வருகிறேன். நானெல்லாம் நிறைய எழுதி விட்டதால் இப்போது என்னை தொந்தரவு செய்வது முறையாக இருக்காது என சொல்லியிருந்தீர்கள். நிறைய எழுதி விட்டதால் வர வேண்டாம் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே தோன்றியதில்லை. சொல்லப் போனால் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் இடையில் இருக்க கூடிய தடை என்பது நேரக் குறைவுதான். இது அனைவருக்குமே பொதுவானது என்ற போதிலும் என் விஷயத்தில் அதிகமாகவே இருக்கிறது. பகலில் நமது மையம் இணைய தளத்தையோ நமது திரியையோ பார்க்கும் வாய்ப்பு கூட எனக்கு இல்லை.இரவில் வீட்டில் வைத்து மற்றுமே இவற்றை படிக்கவும் பங்கு பெறவும் முடியக் கூடிய சூழல். அந்த குறுகிய காலயளவில் தினந்தோறும் பங்களிப்பது பதிவிடுவது என்பது சற்று சிரமமான வேலை. ஆகையால்தான் பதிவுகள் குறைகிறதே தவிர மற்றப்படி வேறு எந்த காரணமுமில்லை. இதை முன்னரே பலமுறை இங்கே சொல்லியிருக்கிறேன். இந்த பதிலை நான் பதிவிட்டிருக்கும் நேரத்தை பார்த்தாலே அது புரியும். எனினும் அடிக்கடி பதிவிட நிச்சயம் முயற்சிக்கிறேன். இங்கே மட்டுமல்ல, நீங்கள் அடிக்கடி வேண்டுகோள் விடுக்கும் filmography திரியிலும் பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.
இது தவிர சில தவிர்க்க முடியாத வெளியூர் பயணங்களும் சில நேரங்களில் இது போன்ற சூழல் உருவாவதற்கு காரணமாகி விடுகிறது. அந்தக் காரணத்தினால் சென்ற ஞாயிறன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட இருவர் உள்ளம் திரைப்படத்தையும் நமது NT FAnS அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தையும் மிஸ் செய்ய நேர்ந்தது.
இறுதியாக உங்கள் வேண்டுகோள் பதிவு. Antony-ஐயும் Arun-ஐயும் என் கைவண்ணத்தில் படிக்க ஆசை என்று எழுதியிருந்தீர்கள். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இருவரும் உங்கள் ஊனோடும் உயிரோடும் ஒன்றாய் கலந்தவர்கள். நானும் அவர்களை மிகவும் ரசித்திருக்கிறேன், ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் உங்கள் அளவிற்கு அவர்களைப் பற்றி என்னால் எழுத முடியுமா என்பது சந்தேகமே. இதை சொல்லும்போது வேறு ஒன்று நினைவிற்கு வருகிறது. சிறிது கால அவகாசம் கொடுங்கள். முயற்சி செய்கிறேன்.
அனைத்திற்கும் மீண்டும் நன்றி.
அன்புடன்
-
24th May 2013, 07:53 AM
#3844
Junior Member
Newbie Hubber
டாய் ,
அது என்ன முரளியை கூப்பிட்டு ஞான ஒளி யை ஒப்படைக்கிறாய்? chekhov பாணியும் oscar Wilde இணைவில் வந்த இந்த அதிசயத்தை நான் எழுதாமல் உனக்காக உன் படமாயிற்றே என்று விட்டு வைத்தால் ,நீ என்ன இன்னொருத்தன் கையிலே குடுக்கிறது? மரியாதையாய் நீயே எழுது.
-
24th May 2013, 08:02 AM
#3845
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
நிறைய எழுதி விட்டதால் வர வேண்டாம் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே தோன்றியதில்லை. சொல்லப் போனால் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் இடையில் இருக்க கூடிய தடை என்பது நேரக் குறைவுதான். இது அனைவருக்குமே பொதுவானது என்ற போதிலும் என் விஷயத்தில் அதிகமாகவே இருக்கிறது. பகலில் நமது மையம் இணைய தளத்தையோ நமது திரியையோ பார்க்கும் வாய்ப்பு கூட எனக்கு இல்லை.இரவில் வீட்டில் வைத்து மற்றுமே இவற்றை படிக்கவும் பங்கு பெறவும் முடியக் கூடிய சூழல். அந்த குறுகிய காலயளவில் தினந்தோறும் பங்களிப்பது பதிவிடுவது என்பது சற்று சிரமமான வேலை. ஆகையால்தான் பதிவுகள் குறைகிறதே தவிர மற்றப்படி வேறு எந்த காரணமுமில்லை. இதை முன்னரே பலமுறை இங்கே சொல்லியிருக்கிறேன். இந்த பதிலை நான் பதிவிட்டிருக்கும் நேரத்தை பார்த்தாலே அது புரியும். எனினும் அடிக்கடி பதிவிட நிச்சயம் முயற்சிக்கிறேன். இங்கே மட்டுமல்ல, நீங்கள் அடிக்கடி வேண்டுகோள் விடுக்கும் filmography திரியிலும் பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.
அனைத்திற்கும் மீண்டும் நன்றி.
அன்புடன்
கோபாலா கோபாலா செட்டியார் மாதிரி அலாரம் வைத்து எழுந்து பதிவிடுவதாக ,நம்ப தகுந்த ஒற்றர் வட்டாரத்தில் இருந்து தகவல்.
-
24th May 2013, 08:16 AM
#3846
Senior Member
Diamond Hubber
உனக்குத்தான் தனியே ஒரு திரியை ஒதுக்கி தனிக்குடித்தனம் வைத்தாயிற்றே! ஒழுங்கா குடித்தனம் பண்ணு. மாமியா வூட்டுக்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுக்காதே! நீ அங்கு என் தெய்வம் ஆண்டனியைப் பற்றி பிட்டு பிட்டு வை. விருந்தாளியாய் நானும் சில நாட்கள் வந்து உன்னுடனேயே தங்கி இருக்கிறேன்.
முரளி சார் எனக்கு (எல்லார்க்கும்) புரியும்படி அற்புதமாக box office உடன் எழுதுவார். எனக்கும் dictionary தேவையிருக்காது. உன் தூண்டில்ல அந்த மீன் மாட்டாது நைனா. (நைனான்னவுடனே தெலுங்குக்காரன் என்று பிரம்பெடுத்து வராதே) வெவ்வவ்வெவ்வே... வீடு பார்த்துக் கொடுத்தால் போக மாட்டேன் என்றால் உன்னை என்ன செய்வது? ம்ம்ம்ம்....சரி... சவுரி சார் தான் உன்னைக் கட்டி மேய்க்க சரியான ஆ(வா)ளு.
Last edited by vasudevan31355; 24th May 2013 at 08:44 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th May 2013, 08:33 AM
#3847
Junior Member
Regular Hubber
நன்றி ராகுல்ராம் அவர்களே. தாங்கள் தமிழில் எழுதத் தொடங்கியதற்கும்.

Originally Posted by
ragulram11
பாகப்பிரிவினை
ஒரு குடும்பத்தின் மூத்த மகன் ஆன நடிகர் திலகம் தன 7 அவது வயதில் கரண்ட் ஷாக் அடித்தால் ஒரு கை மற்றும் கால் ஊனம் ஆகிறது .நடிகர் திலகம் தன பெரியப்பா (ts. Balaiah ) , பெரியம்மா (c. K. சரஸ்வதி), தன் அப்பா (s. V. Subbaiah ) , அம்மா (m. V. ராஜம்மா ) உடன் ஒரு கிராமத்தில் வாழ்கிறார் . நடிகர் திலகத்தின் தம்பி நம்பியார் ஒரு பட்டதாரி . Ck சரஸ்வதி யின் தம்பி mr ராதா சிங்கப்பூர் ல் இருந்து தன் தங்கை உடன் வருகிறார் . அவர் ஒரு பாம்பு போல . அவர் வந்த உடன் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது இதனால் சொத்து பாகப்பிரிவினை செய்யபடுகிறது . நம்பியார் mr ராதா வின் தங்கையை கல்யாணம் பண்ணிக்கிறார் . சிவாஜி அவர் வீட்டில் வேலை செய்யும் சரோஜா தேவி யை கல்யாணம் செய்து கொள்கிறார் . இவர்களுக்கும் ஆன் குழந்தை பிறக்கிறது .
.
m.r.ராதாவின் தங்கை சிவாஜி, நம்பியாருக்கு சித்தி முறை வருமே!
-
24th May 2013, 09:03 AM
#3848
Senior Member
Diamond Hubber
டியர் முரளி சார்,
தங்கள் உயரிய பாராட்டிற்கு என் தலைவணங்கிய நன்றிகள்.
தங்களுடைய நேரமின்மையை நன்கு அறிந்தவன் நான். அதனால்தான் தங்களை கைபேசியில் அழைக்க பலமுறை யோசிப்பேன். நாள் முழுவதும் ஆபிஸில் உழைத்துவிட்டு இரவும் வந்து பதிவிடுவது மிகச் சிரமமான ஒரு வேலை. (சில பேராட்டம் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறோம் என்று ஆபிஸ் கம்ப்யூட்டரில் அரட்டை அடிக்க தங்களாலும் முடியாது. என்னாலும் இயலாது. பலமுறை இரவு நேரங்களில் தாங்கள் பதிவிடுவதை பார்த்திருக்கிறேன். தங்கள் உடல்நலனும் மிக முக்கியமானது.
தங்களைப் போன்ற அனுபவசாலிகளின் எழுத்துக்களே எங்களையெல்லாம் வழி நடத்துகின்றன. தாங்கள் பாதை அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். நாங்கள் சுகமாக அதில் பயணித்து வருகிறோம்.
'இருவர் உள்ளம்' மிஸ் ஆனது பற்றி கவலை வேண்டாம். நான் பதிவு செய்து வைத்துள்ளேன். அடுத்த முறை தங்களை சந்திக்கையில் தருகிறேன்.
தாங்கள் சொன்னது போல நம் திலகத்தைப் பற்றி எழுத பத்து ஆயுள் இருந்தாலும் போதாது.
நேரம் கிடைக்கையில் 'ஞானஒளி' பற்றி எழுதுவதாக நீங்கள் சொல்லியிருப்பது எனக்குக் கிடைக்க இருக்கும் 'ஜாக்பாட்'. கோபால் அவர் பாணியில் பிய்த்து உதறுவார். மொத்தத்தில் எனக்குதான் கொண்டாட்டம்.
மீண்டும் தங்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Last edited by vasudevan31355; 24th May 2013 at 09:20 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th May 2013, 09:13 AM
#3849
Senior Member
Diamond Hubber
ராகுல்,
'பாகப்பிரிவினை' பதிவை எதிர்பாராமல் அளித்து வியக்க வைத்து விட்டீர்கள். அருமையான தேர்வு. தங்கள் தந்தைக்கு எங்கள் வணக்கங்களைத் தெரிவியுங்கள். வசூலில் இமாலய சாதனை புரிந்த படம். மறு வெளியீடுகளில் வசூலில் மிரட்டிய படம். இருபது வருடங்களுக்கு முன் பண்ருட்டி புவனேஸ்வரி திரையரங்கில் மறு வெளியீட்டில் பேயோட்டம் ஓடியது. தினத்தந்தி கடைசி பக்கத்தில் half பக்கத்திற்கு ஒரு அருமையான விளம்பரம் அளித்திருந்தார்கள். புவனேஸ்வரி திரையரங்கு ஜனத்திரளில் நிரம்பி வழியும் புகைப்படத்துடன் இரண்டாவது வாரம் வந்த விளம்பரம் அது. எங்கேயோ மிஸ் ஆகி விட்டது. பண்ருட்டியில் வெளிவந்த இரண்டாவது ரிலீஸ் படங்களில் பாகப்பிரிவினையை இதுவரை எந்தப் படமும் மிஞ்சியதாகத் தெரியவில்லை. அருமையான பழைய நினைவுகளை தங்கள் பதிவு மூலமாக ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!
இன்னும் தமிழில் கோர்வையாய் எழுதுங்கள். உங்களால் முடியும். நீங்கள் எங்களுக்குக் கிடைத்த செல்லப்பிள்ளை.
-
24th May 2013, 10:21 AM
#3850
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
vidyasakaran
நன்றி ராகுல்ராம் அவர்களே. தாங்கள் தமிழில் எழுதத் தொடங்கியதற்கும்.
m.r.ராதாவின் தங்கை சிவாஜி, நம்பியாருக்கு சித்தி முறை வருமே!
cha its my bad mistake, thanks Vidyasankankar sir for pointing it out.
Bookmarks