Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    செப்டம்பர் 11 ...

    அமரகவி பாரதியின் நினைவு நாள் இன்று..

    அவர் பெயரைச் சொன்னாலே நம் நினைவில் உடனே நிழலாடுவது



    நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்புடையவை. தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒவ்வொரு கட்ட வாழ்விலும் அவருடைய படங்களே நமக்கு பாடங்களாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன. தன் படங்கள் மனிதனுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டும், அவன் எந்நெந்த விதமான சோதனைகளை வாழ்வில் சந்திப்பான், அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து அவற்றை எப்படித் தன் படங்களில் பயன்படுத்தப் படுகின்றன என்பதையெல்லாம் கதையின் மூலம் கேட்டறிந்து ஒப்புக் கொண்டு தன் கலையின் மூலம் வாழ்வியலை யதார்த்தமாகவும் ஆக்கபூர்வமாகவும் எதிர்கொள்ள நமக்களித்தவர் நடிகர் திலகம்.

    அந்த வரிசையில் தான் மகாகவி பாரதியின் பாடலான மனதில் உறுதி வேண்டும் பாடலும் இடம் பெறுகிறது. காலத்தை வென்று நிற்கும் கலைமகனின் பாடல்களில் இடம் பெற்ற வரிகளும் காலத்தை வென்று நமக்கு பயனளிக்கின்றன.

    கள்வனின் காதலி.. நடிகர் திலகம் நடிக்க வந்த மூன்றாவது ஆண்டில் வெளிவந்த படம். நடிகர் திலகத்தின் 25வது படம். இதுவும் கோடீஸ்வரன் திரைப்படமும் வெளியாகி அப்போதே அந்த சிறப்பைத் துவக்கி விட்டதை நிரூபித்த படம். அமரர் கல்கியின் புதினத்தைத் தழுவியது.

    இந்த உன்னதத் திரைப்படத்தில் இடம் பெற்ற மனதில் உறுதி வேண்டும் பாடல் இதோ நமக்காக..

    அந்த யுகக் கலைஞனின் புன்னகை தவழும் மதிமுகத்தைப் பார்ப்பவர்கள் மனசாட்சியுள்ளவர்களாக இருந்தால் அவரைப் பற்றி கீழ்த்தரமாக சிந்திக்கவும் பேசவும் நிச்சயமாக கனவில் கூட எண்ண மாட்டார்கள்.



    மனதில் உறுதி வேண்டும்
    வாக்கினிலே இனிமை வேண்டும்
    நினைவு நல்லது வேண்டும்
    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
    Last edited by RAGHAVENDRA; 12th September 2014 at 08:24 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •