-
23rd May 2012, 02:23 AM
#11
Senior Member
Veteran Hubber
நமது வாசு சார் நமது திரியில் தொடர் பதிவுகளை அளிக்க வரும்முன், "பட்டிக்காடா பட்டணமா" ஆவணப்பதிவைப் பாராட்டி அளித்த மின்னஞ்சல் மடல்: [அப்பாடா...! இனிமேல் நேரடியாகவே பாராட்டுவார்....!]
'பதிவுச் சிங்கம்' அன்பு பம்மலார் சார்,
'பட்டிக்காடா பட்டணமா' 41வது உதயதினத்தை முன்னிட்டு தாங்கள் அளித்துள்ள விளம்பரப் பதிவுகள் சும்மா அதகளம்.
படத்தின் வெற்றி பிரம்மாண்டம் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே போல தங்களுடைய 'பட்டிக்காடா பட்டணமா' பதிவுகளும் பிரம்மாண்டம் என்பதும் அதே அளவிற்கு உண்மை.
'இன்று முதல்' விளம்பரத்தில்(தினமணி) ஜெயலலிதா அவர்கள் நடுவில் நடன போஸில் நிற்க அவரின் வலது இடது புறங்களில் சிறு கோடுகளுக்கிடையில் பட்டிக்காட்டாரும், பட்டணத்தாரும் காட்சி தருவது பரமானந்தம்.
'ஏழைகளை ஏய்ச்சதில்லே முத்துமாரி... நாங்க ஏமாத்திப் பொழச்சதில்லே முத்துமாரி' தீச்சட்டி ஏந்திய அந்த மூக்கைய்யாத் தேவரின் உலகப் புகழ் பெற்ற போஸ் பார்க்க பார்க்கத் திகட்டாதது.
50-வது நாள் விளம்பரம் (தினத்தந்தி) வாய் பிளக்க வைத்துவிட்டது. அடேயப்பா! இமாலய சாதனை. ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் No.1 கலெக்ஷன் படமாக கதகளியாட்டம் புரிந்திருப்பதை இந்த விளம்பரம் அப்படியே அப்பட்டமாக சூளுரைக்கிறது. இந்த ஒரு விளம்பரப் பதிவுக்காகவே தங்களுக்கு மணிமகுடம் சூட்டலாம். மொத்த வசூல் ரூபாய் 30,54,513.34, அதுவும் ஐம்பதே நாட்களில் என்பது மூலைமுடுக்கெல்லாம் மூக்கைய்யாத் தேவரின் சாம்ராஜ்யம்தான் என நிரூபிக்கிறது.
கலப்பையுடன் கலைத்தாயின் தலைமகன் கம்பீரமாக நிற்கும் நூறாவது நாள் விளம்பரம் ஒரு வீர விளம்பரம். ஒரு வெற்றி விளம்பரம்.
மதுரை சென்ட்ரலில் படம் பண்ணியிருக்கும் சாதனை விளம்பரம் முரளி சார், மற்றும் கோல்ட் ஸ்டார் இருவரின் தூக்கத்தை மறுபடி கெடுத்திருக்கும் என நினைக்கிறேன்.
கறுப்பு-வெள்ளைக் காவியங்களில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட வெற்றிக்களிப்போடு தலைவர் வெற்றிக்கொடியை ஏந்தி நிற்கும் வெள்ளிவிழா விளம்பரம் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமை. அந்த அருமையான விளம்பரத்தை கொடுத்த தங்களை நாங்கள் சகோதரராக அடைந்ததும் எங்களுக்கு மிதமிஞ்சிய பெருமை.
29.10.72 ஒரே நாள் காலையில் திருச்சியிலும், மாலை மதுரையிலும் தலைவர் வெள்ளிவிழாவில் கலந்து கொண்டது அந்த விழா எத்தனை பிரம்மாண்டமாய் இருந்திருக்கும் என்று ஏக்கம் கொள்ள வைக்கிறது. முரளி சார் அனேகமாக விழாவைக் கண்டு ரசித்திருப்பார் என நம்புகிறேன்.அதைப் பற்றி ஒரு சிறப்பு வர்ணனையை அவர் வழங்க வேண்டும் என்று எல்லோரது சார்பாகவும் அவருக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அதே போல் பட்டிக்காடா பட்டணமாவின் சாதனைக் குறிப்புகளை அற்புதமாய் வடிவமைத்து உள்ளீர்கள். மனமுவந்த பாராட்டுக்கள். இனி மூக்கைய்யாத் தேவரின் சாதனைகளில் யாரும் மூக்கை நுழைக்க முடியாது.
பொன்னான பதிவுகளை சுயநலமின்றி அளித்து எங்களை பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நாளும் வீரஉலா வரச் செய்யும் தங்களை சிவாஜி ரசிகர்களின் 'மானம் காக்கும் கவரிமான்' என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் கூற இயலவில்லை.
அற்புதமான பதிவுகளுக்கு அனந்த கோடி நன்றிகள்.
vasudevan.
தங்களின் சீரிய பாராட்டுப்பதிவுக்கு எனது கோடானுகோடி நன்றி மலர்கள் வாசு சார்....!
-
23rd May 2012 02:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks