அன்புள்ளம் கொண்ட திரு.Anm அவர்களே!

தங்கள் பாசப் பதிவுக்கு என்னுடைய இமாலய நன்றிகள். கர்ணன் நூறாவது நாள் வெற்றியை அனைவரும் சுவைக்கத் தயாராவோம்.

டியர் ஹரிஷ் சார்,

நான்தான் தங்களுக்கெல்லாம் நன்றி கூற வேண்டும். நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்தை துவக்கி வைக்கும் அரியதொரு வாய்ப்பை எனக்கு அளித்த தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். தங்கள் அன்பிற்கு என் மனமுவந்த நன்றி!

டியர் ராகுல்,

பாராட்டுக்கள். தலைவர் படங்களைப் போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற தங்களின் அக்கறை மிக நியாயமானது. தங்கள் கருத்தே நம் எல்லோருடைய கருத்துமாகும். தங்கள் உயரிய எண்ணம் தலைவரின் ஆசியினால் கண்டிப்பாக நிறைவேறும்.

வாழ்த்தும்

நெய்வேலி வாசுதேவன்.